நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.இந்தியா நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, முதல் கட்டமாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் துணை கலெக்டர்களுக்கு சென்னையில் தனித் தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை வருவாய் துறையினர் இடமாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தேர்தலுக்கான அடுத்த கட்ட முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபடும் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களாக வருவாய் துறை, வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இந்த பணிகளுக்காக அதிகாரிகள் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றினால் அவர்களை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தல் அலுவலர்களாக கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் தான் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 ஆண்டுகள் பணி முடித்த கலெக்டர்கள் பலர் மாற்றப்பட்டனர்.
இதேபோல உதவி தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்கள் பலர் ஓரே இடத்தில் பணியாற்றலாம் என்பதால் அவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டவுடன் கூண்டோடு பலரும் மாற்றப்படுவர் என்று தெரிகிறது.ஜனவரி மாத இறுதிக்குள் இவர்களின் பணியிட மாற்றத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே விரைவில் வருவாய் துறை, வளர்ச்சி துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.