வால்பாறை, மானாம்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்
போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியை அரசிடம் ஒப்படைக்க அரசு உதவி
பெறும் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் தனியார் பள்ளிகள் தொடங்கி அரசு நிதி உதவி
பெறும் பள்ளிகள் வரை போதிய நிதி வசதி இல்லாததால் மூடப் போவதாக அறிவித்து
வருகின்றன.
கோவை மாவட்டம், வால்பாறை அருகிலுள்ள மானாம்பள்ளி அரசு உதவி பெறும்
தொடக்கப் பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இப்பள்ளியில்
2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் போதிய மாணவர் வருகை இல்லாததால் பள்ளியை அரசிடம்
ஒப்படைக்கப் போவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடந்த
மாதம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில்
கடிதம் எழுதப்பட்டுள்ளது.