நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது

நண்பர்களே வருமான வரி செலுத்துவதில் Education cess கணக்கிடுவது u/s.87A இன் படி அனுமதிக்கப்படும் Rs. 2000 கழித்த பின் கணக்கிடுவதா  அல்லது  Education cess   கணக்கிட்ட பின்னர் Rebate 2000 கழிப்பதா  என குழப்பம் நிலவுவதாக அறிய  வருகிறோம். எனவே உங்களுக்காக இணையத்தில் கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளோம்.

 Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess என தெளிவாக உள்ளது. எனவே Rs.2000 rebate கழித்த பின்னரே Education cess
கணக்கிடுவது சரி என அறிய வருகிறோம். 
படியுங்கள். குறைகள் இருப்பின் கூறுங்கள்.தெளிவு பெறுவோம். நண்பர்களுக்கு உதவுவோம்.

-----------------------------------------------------------------------------------

TAX RATES
ASSESSMENT YEAR 2014-15
•          For any other resident individual (born on or after April 1, 1954), any non-resident individual, every HUF/AOP/BOI/artificial juridical person—

Net income range
Income-tax rates‡
Surcharge
Education cess
Secondary and higher educationcess
Up to Rs. 2,00,000
Nil
Nil
Nil
Nil
Rs. 2,00,000 –Rs. 5,00,000
10% of (total income minus Rs. 2,00,000) [see Note 1]
Nil
2% of income-tax
1% of income-tax
Rs. 5,00,000 –Rs. 10,00,000
Rs. 30,000 + 20% of (total incomeminus Rs. 5,00,000)
Nil
2% of income-tax
1% of income-tax
Rs. 10,00,000 –Rs. 1,00,00,000
Rs. 1,30,000 + 30% of (total income minus Rs. 10,00,000)
Nil
2% of income-tax
1% of income-tax
Above Rs. 1,00,00,000
Rs. 28,30,000 + 30% of (total income minus Rs. 1,00,00,000)
10% of income-tax [see Note 2]
2% of income-tax and surcharge
1% of income-tax and surcharge

Notes :
   1.  Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less.
   2.  Surcharge - Surcharge is 10 per cent of income-tax if net income exceeds Rs. 1 crore. It is subject to marginal relief (in the case of a person having a net income of exceeding Rs. 1 crore, the amount payable as income tax and surcharge shall not exceed the total amount payable as income-tax on total income of Rs. 1 crore by more than the amount of income that exceeds Rs. 1 crore).
   3.  Education cess - It is 2 per cent of income-tax and surcharge.
   4.  Secondary and higher education cess - It is 1 per cent of income-tax and surcharge.
•          Alternate minimum tax -Tax payable by a non-corporate assessee cannot be less than 18.5 per cent(+SC+EC+SHEC) of “adjusted total income” as per section 115JC
-------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: நண்பர்களே, மேற்காணும் தகவலில் Education cess 2 per cent என்று உள்ளதால் குழம்பிவிட வேண்டாம். வரிசை எண் .4 இல் Secondary and Higher education cess 1 per cent தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக  மொத்தம் Education cess 3 per cent தான்.

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன். அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன். இதற்கு 3வது ஊக்க தொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து, எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் முன்னர் "பணி நிரவல்' : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம் காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம். 2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாற்றினர். இதன் பின்னர், புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள் தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1 விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில் அதிகமான ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், மேலும் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2 தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும் நிலையில்,இவர்களில் பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகின்றனர். இதன் மூலம் சில உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒரேபாடத்திற்குரிய ஆசிரியர்கள் எண்ணிக்கை 40:1 விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணி நிரவல் இன்றி, 2012 பணி நிரவலுக்கு பின் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமான இடத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு இராது. பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில்,

"பணிநிரவல்என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள பள்ளிகளில் இருந்து ஜூனியர் நிலை ஆசிரியர்களை மாற்றம் செய்வது. இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின், நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு பணிநிரவலில் மாறுதல் கிடைக்கும் நிலை உள்ளது.
ஆனாலும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் சூழலால் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களின் பணிநிரவல் வாய்ப்பு பறிபோகும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர் வரை பணிநிரவலில் மாறுதல் பெற வாய்ப்புள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன், ஏற்கனவே பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்,பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றனர்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஓவர்சீயர் பணி
மதுரை கருங்காலக்குடியை சேர்ந்தவர் சரசுவதி, மாற்றுத்திறனாளி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், 1997–ம் ஆண்டு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். வேலை உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 618 ஓவர்சீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன இந்த பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் எனக்கு ஓவர்சீயர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இட ஒதுக்கீடு
இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தாழை.முத்தரசு ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, “சட்டத்தில் கூறப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு கொள்கையை அரசு கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார்.

ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியது தமிழக தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. 

தேசிய வாக்காளர் தினத்தை (ஜனவரி 25) முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 
இது தொடர்பாக நிருபர்களிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "சென்னை கவர்னர் மாளிகையில் சனிக்கிழமை காலை நடைபெறும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில், புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். 
தமிழகத்தில் உள்ள மற்ற 27 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை சனிக்கிழமையன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வழங்கப்படும். அன்றைய தினம் வாங்காதவர்களின் வீடுகளுக்கு தேர்தல் துறையினரே நேரில் சென்று வாக்காளர் அட்டையை வழங்குவார்கள். அதை வீட்டில் உள்ள ஒருவர் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளலாம். 
அப்படி பெற முடியாதவர்கள், பின்னர் தேர்தல் பதிவு அதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெயர் சேர்க்கலாம். 
"கண்ணியமாக வாக்களியுங்கள்" என்னும் கருத்தை மையமாக வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், பேரணிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.
ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் – தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ள பிரசார விளம்பரப் படம் விரைவில், தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும். 
இதன் மையக்கருத்து, "வாக்காளர்கள் கண்ணியமாக வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்கை விற்காதீர்," என்பன போன்ற கருத்துக்கள் இடம்பெறும்" என்றார் பிரவீண்குமார். 
ஃபேஸ்புக் பக்கம் குறித்து கூறும்போது, " நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யூத் எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து, பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் www.facebook.com/tnelection2014 என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளோம். 
முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களைக் கவர்வது, நியாயமான முறையில் தேர்தலை வாக்காளர்கள் எதிர்கொள்ளச் செய்வது, வாக்களிப்பதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நோக்கத்துக்காகவே இந்த சமூவவலைத்தளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

PFRDA - CPS - GUIDELINES FOR WITHDRAWAL OF 25 % OF ACCUMULATED CONTRIBUTIONS BY NPS SUBSCRIBERS CLICK HERE..

PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது
நிபந்தனைகள்:
1) தேவைகள்
a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு
b) குழந்தைகளின் திருமணம்
c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது)

d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது குடும்பத்தினர்க்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது.
1. Cancer
2. Kidney Failure (End Stage Renal Failure)
3. Primary Pulmonary Arterial Hypertension 
4. Multiple Sclerosis
5. Major Organ Transplant
6. Coronary Artery Bypass Graft
7. Aorta Graft Surgery
8. Heart Valve Surgery 
9. Stroke
10. Myocardial Infarction (First Heart Attack)
11. Coma 
12. Total blindness
13. Paralysis
இது போன்ற தருணங்களில் நாம் நமது CPS முதலிட்டில் இருந்து 25% வரை பெற்றுக்கொள்ள முடியும். 
ஆனால் இதற்கு நாம் CPS திட்டத்தில் குறைந்தது 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இது போன்று நாம் 3 முறை நமது CPS முதலிட்டிலிருந்து 25 % மிகாமல் பெற்றுகொள்ள முடியும். 
ஆனால் குறைந்தது 5 வருட இடைவெளியில். 
அதே வேளையில் மருத்துவ தேவைக்கு மட்டும் இந்த 5 வருட நிபந்தனை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி கல்விச்சுற்றுலா அழைத்துசென்றால் கடும் நடவடிக்கை

அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த காலங்களில் கல்விச்சுற்றுலாவின்போது எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாவிற்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கு முன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

கல்வி சுற்றுலாவிற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மாவட்ட தொடக்க அலுவலர்களிடமும், உயர்நிலைப் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், மேல்நிலைப் பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளிகள், ஆய்வாளர்களிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதியின்றி மாணவர்களை அழைத்து சென்றால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

ஏழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் எழுச்சி பேரணி பிப்.2ல் நடைபெற உள்ளது


மேலும் புதிதாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் - தினமலர்


ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டு நீடிக்கும் அரசு ஊழியர்கள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இம்மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.இந்தியா நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, முதல் கட்டமாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் துணை கலெக்டர்களுக்கு சென்னையில் தனித் தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை வருவாய் துறையினர் இடமாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. வாக்காளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தேர்தலுக்கான அடுத்த கட்ட முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபடும் தொகுதி தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களாக வருவாய் துறை, வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இந்த பணிகளுக்காக அதிகாரிகள் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.

தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றினால் அவர்களை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தல் அலுவலர்களாக கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் தான் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 ஆண்டுகள் பணி முடித்த கலெக்டர்கள் பலர் மாற்றப்பட்டனர்.

இதேபோல உதவி தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுபவர்கள் பலர் ஓரே இடத்தில் பணியாற்றலாம் என்பதால் அவர்கள்  தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டவுடன் கூண்டோடு பலரும் மாற்றப்படுவர் என்று தெரிகிறது.ஜனவரி மாத இறுதிக்குள் இவர்களின் பணியிட மாற்றத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே விரைவில் வருவாய் துறை, வளர்ச்சி துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவர் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

01.01.2011 அன்று முன் தேதியிட்டு 50% அகவிலைபடியை, ஊதியத்துடன் இணைக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது, எனினும் இந்த கட்டுரை உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அடிப்படையாக கொண்டது.

It has been reported that the government is considering the merger of 50% of the DA with the basic. The government is likely to take a decision during the budget session of Parliament in February 2014. The information was given by sources close to the Central Government Employees Federations. The federations were demanding the merger from January 2011. 

During the 5th pay commission period there was a clause that the DA will be merged with the basic once it touches 50%. But this was removed by the 6th pay commission. However the unions were constantly demanding the merger. The current DA stands at 90% and is likely to touch or cross 100% by January 2014, which will be announced in March. he government may consider the demand of merging of 50% DA with basic Pay in view of forthcoming Parliament elections.


Once the AICPIN for Industrial workers for the Month of December 2013 is announced, the rate of dearness allowance to be paid from January 2014 can be calculated. It is certain that the rate of DA will be 100 or 101% with effect from 1st January 2014. (Read : November CPI IW up by 2 points, at 243. Chances of 101% DA from Jan 2014) After the DA increased to 100%, the demand merger willbe stronger. Probably the demand would be for 100% DA merger. So the unions expect the government may consider 50% DA merger soon.

The sources, associated with National Council JCM, said that the government initially was not willing to consider this demand as some allowance and advances have been raised by 25% whenever the DA crosses 50% level as per the sixth CPC recommendation. But federations insisted that the allowances, which are raised to 25 % level when DA crosses 50%, will have no impact on merging DA with basic pay. The only allowance will have an increase when Basic Pay increases are HRA. No other allowances will be increased and other entitlement of the respective Grade Pay will not be revised as the 50% DA to be merged will be kept under separate component like it was treated in 5CPC as Dearness Pay. “There is no need to worry about financial implications, as the 50% DA will be paid by just changing its nomenclature as Dearness Pay”, said sources.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்

 அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிலாக பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. 

ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம்
ஆர்.டி.இ. எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரையில், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் (வெயிட்டேஜ் மதிப்பெண்) தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகின்றனர். 

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களும் “வெயிட்டேஜ் மதிப்பெண்” முறையிலேயே தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள். 

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி முறை நடைமுறைக்கு வந்தபோது பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கு முடியும் வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் (தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில்) நியமிக்கப்படுவார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிமுகம்
தற்போது அந்த வழக்கு முடிவடைந்துவிட்டதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று வெயிட்டேஜ் மதிப்பெண் முறையிலேயே தேர்வுசெய்ய அரசு முடிவுசெய்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த முறையில், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் (அட்டவணையில் மதிப்பெண் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது) ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TN TET 2013- Complete Instruction & Guideliness for CERTIFICATES VERIFICATION for Candidates/ Officers and District wise DATA & EQUIVALENCE Degree Clarification for All Degrees

TNTET 2013 CV :'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ்சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்'வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில், 12,596 பேரும், தாள் 2ல், 14496பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில்,பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது.

இதில்,தாள் 2ல், 2ஆயிரத்திற்கும் மேல், கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களாக, 'இளங்கலை பட்டப்படிப்பில், பல்கலை, கல்லூரிகள் வழங்கிய, செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டப்படிப்பு சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'சான்றிதழ் சரிபார்ப்பின்போது அளிக்கப்படாத சான்றுகள் அதற்குப்பின் ஏற்கப்படமாட்டாது,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பட்டப் படிப்பின் தொகுப்பு மதிப்பெண் சான்று மட்டுமே கேட்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கேட்டு, டி.ஆர்.பி.,அதிர்ச்சி ஏற்படுத்தியது. 

1980 மற்றம் 1990களில் ரெகுலர் அல்லது தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றோர்,80 சதவிகிதத்திற்கும் மேல், இதுபோன்ற செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பில்லை. டி.ஆர்.பி.யின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது: பொதுவாக அரசுப் பணிகளுக்கும் டிகிரி சான்று மற்றும் மதிப்பெண் சான்று மட்டும் கேட்பது வழக்கம். கடந்த டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதேவழக்கம் தான் கடைபிடிக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றுகள் கேட்கப்பட்டுள்ளன, குழப்பமாக உள்ளது. 6வது செமஸ்டருக்கான சான்றே வழங்கமாட்டார்கள். 'டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்டு, கல்லூரிக்கு சென்றால், சம்பந்தப்பட்ட பல்கலையில் கேளுங்கள் என்கின்றனர்.

பல்கலைக்கு சென்றால், மீண்டும் அந்த சான்றிதழ் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட சான்றிதழின் ஜெராக்ஸ் வேண்டும். ஒரு செமஸ்டர் சான்றுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். சான்று காணாமல் போனதாக போலீஸ் எப்.ஐ.ஆர்., வேண்டும் என, ஒரு மாதத்தில் நடக்க சாத்தியமில்லாத வழிகளை கூறுகின்றனர்.தேர்ச்சி பெற்றும் நிம்மதி இல்லை. அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, தெளிவுபடுத்த வேண்டும், என்றனர்.

18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


 இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.

          முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

          ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர்.

          இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்

         இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

     வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது. அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

         ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

      சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அடுத்தடுத்து தேர்வு முடிவுகள்:

            நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் திருத்தப்பட்ட முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

           மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற போட்டித் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டன.

        இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் திருத்தப்பட்ட முடிவுகள் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து பணியாற்றியதன் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் சனிக்கிழமையே வெளியிட முடிந்ததாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

           முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் சுமார் 18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ஏன் நிராகரிக்கவேண்டும்? செ.நடேசன், TNPTF முன்னாள் பொதுச்செயலாளர்

ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும், இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’ நிறைவேற்றப்பட்டது.
.
          ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.
 
                நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972) நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. 
 
எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு. ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.
 
இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம் 1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.mm இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம் 22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது. 
 
             இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும், பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன. நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003 முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். 
 
                இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு. 2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க 2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –ஐ அறிமுகப்படுத்தியது. ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
 
 பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது. 10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல் 8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது 8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல் ‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். 
 
               அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது. அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். 
 
               இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா? புதிய ஓய்வூதியத்திட்டத்தில் 1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது. 2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது. 3.குடும்பஓய்வூதியம் கிடையாது. 4.பணிக்கொடை கிடைக்காது. 
 
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது. -இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள். இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏற்பட உள்ள ஆபத்துக்களையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்ட தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னும், தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னும்’தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என்று உறுதியளித்தார். அந்த உறுதிமொழியைத் தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்தும் நாளைத்தமிழ் நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

         மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களுக்கு, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்து, தகவல் கேட்போரிடம், சில நேரங்களில், அவர்களின் முகவரிகளை தரும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது. 
 
 தகவல் கோருபவரின் மனுவில், தபால் பெட்டி எண் இருக்கும் பட்சத்தில், அவரிடம், முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது. தகவல் தொடர்புக்கு, அந்த தபால் பெட்டி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தபால் பெட்டி எண் இல்லாத பட்சத்தில், முகவரியை தரும்படி கேட்கலாம். விண்ணப்பம் தகுதியானதாக இருந்து, தபால் பெட்டி எண் இருந்தால் போதும்; முகவரி எதுவும் தேவையில்லை. இதேபோன்ற ஒரு வழக்கில், கோல்கட்டா ஐகோர்ட் அளித்த தீர்ப்பும், இதை வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு நிதி துறை புதிய சலுகை

வருமான வரி கணக்கை, இணையதளம் மூலம், "இ-பைலிங்' செய்பவர்கள், தபால் மூலம், ஐ.டி.ஆர்.வி., படிவத்தை இனிமேல் அனுப்பத் தேவையில்லை. 

இதற்கான, அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. மாத சம்பளதாரர்கள், தங்களின் வருமான வரிக் கணக்கை, ஆண்டுக்கு ஒருமுறை, வருமான வரித்துறையிடம், நேரிலும், இணையதளம் மூலமும், தாக்கல் செய்து வருகின்றனர்.  
 
           "இ-பைலிங்' முறையில், இணையதளம் மூலம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள், கணக்கை தாக்கல் செய்த, 120 நாட்களுக்குள், பெங்களூருவில் உள்ள, வருமான வரிக்கணக்கு தொகுப்பு அலுவலகத்திற்கு, தாங்கள், "இ-பைலிங்' செய்த, வருமான வரி கணக்கின் நகலை, ஐ.டி.ஆர்.வி., படிவத்தில், அனுப்பி வைக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இதை மாற்ற, மத்திய நிதித்துறை முடிவு செய்துள்ளது. 
 
 "இ-பைலிங்' கணக்கு விவரத்தை, பெங்களூரு அலுவலகத்திற்கு, ஏராளமானோர், தபால் மூலம் தெரிவித்தும், பல தபால்கள், அந்த முகவரியை சென்றடையாததால், வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தபாலில், தாக்கல் நகலை அனுப்பும் முறையை, வருமான வரித்துறை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

இணையதள வகுப்பறைகள்: மாற்றம் காணும் கல்வி

ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில் முக்கியமானதும், அவசியமானதுமான தொழில்நுட்பமாக இணையதளம் விளங்குகிறது.

         தற்போதைய சூழ்நிலையில், இணையதளமானது கற்றலுக்கான தேடலை எளிதாக்கியுள்ளது. அளவில்லாத தகவல்களை உள்ளடக்கி இருந்தாலும் முறைப்படி, எளிதாகக் கற்றுக்கொடுக்க ஆசிரியர் தேவைப்படுகிறார். இந்த தேவையை சரி செய்வதற்காக பரவலாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் முறைதான் "ஆன்-லைன் கிளாஸ்ரூம்" ஆகும். இணைய வகுப்பறைகள் மூலமாக கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் "டிஜிட்டல் டீச்சர், டிஜிட்டல் புரொஃபசர்" என அழைக்கப்படுகிறார்கள்.
           சாதாரண வகுப்பறையில் ஆசிரியர் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்து சென்ற பின்னர், மீண்டும் அதே பாடத்தை அறிய விரும்பினால் அது சற்று கடினமான செயலாக மாறிவிடுகிறது. ஆனால் இணையவழிக் கற்றல் முறையில் இது எளிதான செயல். ஏனெனில், ஒரு முறை ஆசிரியரால் எடுக்கப்பட்டப் பாடம் இணையத்திலேயோ அல்லது கணினியிலோ சேமித்து வைக்கப்பட்டிருக்கும், இந்த முறை மூலம் எத்தனை முறை மற்றும் எப்பொழுது வேண்டுமானாலும் குறிப்பிட்ட பாடத்திற்கான காணொளி காட்சியைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
         மேலும், உலகின் எந்த மூலையிலிருக்கும் மாணவருக்கும், எந்த நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடிவது இதன் சிறப்பம்சமாகும். நேரடி காணொளி மென்பொருட்கள் மற்றும் உரையாடல் வசதியை தரும் இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க முடியும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள மாணவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழிக் கற்றல் முறை இன்று உலகம் முழுவதும்  வேகமாகப் பரவி வருகிறது.
தேவையான கல்வித்தகுதி
         பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு இளநிலையில் பி.எட். மற்றும் முதுநிலையில் எம்.எட். படித்திருக்க வேண்டும்.
          கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு "நெட்" தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும்.
           இவை தவிர சிறப்புப் பாடங்கள், இசை, நடனம், வடிவமைப்பு போன்றவை சார்ந்த குறுகிய காலப் படிப்புகளுக்கு அந்த அந்தத் துறையில் சிறப்பான ஆற்றலை பெற்றிருப்பது அவசியம்.

இனிய தை பொங்கல் & தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி



இத்திருநாளில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் CPS ஐ பெற்றே தீருவோம் என சபதம் ஏற்போம்!

பிப்-2 பேரணியை வெற்றி பெறச் செய்வோம்!

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.
         பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.

         தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

              90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்50 சதவீதம் முதல்
60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று (10.01.2014), அதிரடியாக வெளியிட்டது.
பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் பெற்று, தோல்வி அடைந்த தேர்வர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறு மதிப்பீடு காரணமாக, தோல்வி அடைந்த தேர்வர், 2,500 பேர் வரை, தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், 15 ஆயிரம் ஆசிரியருக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த, ஆளும் அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அரசு முடுக்கி விட்டுள்ளதால், பல மாதங்களாக தேங்கியிருந்த தேர்வு முடிவுகள், இரு நாட்களாக, வரிசையாக வெளியிடப்பட்டன.


முதுகலை தேர்வு:
மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் நியமனத்தில், முதலில், தமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல் வெளியானது. நேற்று முன்தினம் காலை, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட, 10 பாடங்களுக்கான மறு மதிப்பீட்டு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு மற்றும் வணிகவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கான புதிய தேர்வு பட்டியல், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு வெளியானது.இவர்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டதால், பணி நியமன பட்டியல் தயாராக உள்ளது.
டி.இ.டி., தேர்வு
:டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) முடிவு மட்டும், நவம்பர், 5ல் வெளியானது. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவில்லை. சிலர் வழக்கு தொடர்ந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடங்கின.இந்நிலையில், கோர்ட் உத்தரவுப்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, நேற்று, டி.ஆர்.பி., அறிவித்தது.
இரண்டாள் தாள் மறுமதிப்பீடு:
கோர்ட் உத்தரவின் அடிப்படையில், இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, நேற்று, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், தேர்வர்களுக்கு, நான்கு மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இரு கேள்விகளுக்கான விடையில், முதலில், ஒரு விடை மட்டுமே சரி என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, கூடுதலாக இரண்டு மற்றும் மூன்று விடைகளில் ஒன்றை, 'டிக்' செய்திருந்தாலும், மதிப்பெண் வழங்கப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.மேலும், 'ஏ' வகை கேள்வித்தாளில், 20வது கேள்வி மற்றும் 108வது கேள்வி, நீக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு, தலா, 1 மதிப்பெண் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரு கேள்விகளுக்கு, விடை எழுதாதவர்கள் மற்றும் தவறாக எழுதியவர்களுக்கு, இரண்டு மதிப்பெண் கிடைக்கும். சரியான விடையை குறிப்பிட்டவர்களுக்கு, மதிப்பெண்ணில் மாற்றம் வராது.ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்த, 2,500 தேர்வர், இந்த மறு மதிப்பீடு காரணமாக, தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
சான்றிதழ் சரிபார்ப்பு:


முடிவுகள் அனைத்தும் வெளியானதால், டி.இ.டி., தேர்வர்களுக்கு, 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான கடிதங்கள், www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.தேர்வர், தங்கள் பதிவு எண்களை பதிவு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேங்கிக் கிடந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியாகி விட்டதால், சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், டி.இ.டி., இறுதி தேர்வு பட்டியல் வெளியாகும். இம்மாத இறுதிக்குள் அனைத்தும் முடிந்து விடும் என்பதால், பிப்ரவரி, முதல் வாரத்தில், பணி நியமன விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால், தேர்வர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்பு குறித்து

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிக்குப் பதிலாக   11 .01.2014 முதல் 20.01.2014 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசுகள் தேர்வுகள் துறை அறிவிப்பு.

2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2000/- தள்ளுபடிகுறித்த விளக்கம் (Rebate under section 87A)

ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு பிரிவு 80C / 80D சேமிப்பு போக நிகர தொகைரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டிய வரியில் ரூ.2000/-ஐ கழித்து கட்டினால் போதுமானது.

(Rebate under section 87A - A resident individual (whose net income does not exceed Rs. 5,00,000) can avail rebate under section 87A. It is deductible from income-tax before calculating education cess. The amount of rebate is 100 per cent of income-tax or Rs. 2,000, whichever is less

PG TRB Revised List - Revised Examination Results and Provisional Certificate Verification List

11 ஆம் வகுப்பு பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்

2013-14 ஆம் கல்வியாண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக பாடத்திட்ட(State Board)மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்த கவலையளிக்கிறது. 

ஐ.ஐ.டி.க்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 20 ஆயிரம் பேரில் 11,693 பேர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் ஆவர். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆந்திர மாநில கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்கள் 3538 பேரும், ராஜஸ்தான் மாநில பாடத்திட்ட மாணவர்கள் 1376 பேரும், மராட்டிய பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 1210 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், கல்வியில் வளர்ச்சி அடைந்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கல்வியில் பின்தங்கியவையாக கருதப்படும் பிகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒதிஷா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநில பாடத்திட்டங்களின் மாணவர்கள் கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கின்றனர். சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ள 828 மாணவர்களில் 1% கூட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இல்லை என்பது தமிழ்நாட்டை மாறி,மாறி ஆட்சி செய்து வருபவர்கள் வெட்கப்பட வேண்டிய விசயமாகும். 
அதிக மதிப்பெண் எடுப்பவரே சிறந்த மாணவர் என்ற தவறான முன்னுதாரணம் தமிழகத்தில் ஏற்படுத்தப் பட்டிருப்பதே இந்த அவல நிலைக்கு காரணம் ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாக பெருமளவிலான தனியார் பள்ளிகள் பாடங்களை படித்து ஒப்புவிக்கும் மனப்பாட எந்திரங்களாக மட்டுமே மாணவர்களை உருவாக்கி வருகின்றன என்பது வருத்தமளிக்கும் உண்மை ஆகும். மாவட்ட, மாநில அளவில் முன்னணி இடங்களை பிடித்த மாணவர்களால், சாதாரண பொது அறிவு வினாக்களுக்குக் கூட விடையளிக்க முடிவதில்லை என்பதே நமது கல்வியின் தரம் என்ன? என்பதை வெளிப்படுத்திவிடும். 
ஆந்திராவில் 11, 12 ஆகிய இரு வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களுமே தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆந்திர மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் சிறப்புப் பயிற்சி இல்லாமலேயே நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கு மிகவும் அவசியமான 11 ஆம் வகுப்பில், அவ்வகுப்புக்கான பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் வழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். 
நடுவண் இடைநிலை கல்வி வாரியத்திற்கு இணையான பாடத்திட்டமே தமிழ்நாட்டில் அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும்; அது தான் உண்மையான சமச்சீர்க் கல்வித் திட்டமாக இருக்கும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்விக் கொள்கையை கடைபிடிக்காமல், தனியார் பள்ளிகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற கல்விக் கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலை மாறும் வரை ஐ.ஐ.டி.க்களில் சேருவது என்பது தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு நிறைவேறாத கனவாகவே இருக்கும். 
தமிழக மாணவர்களின் நலனில் ஆட்சியாளர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், நடுவன் இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்திற்கு இணையாக சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக, ஆந்திரா, ராஜஸ்தான் மாநில பாடத்திட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் என்ன? என்பதை நமது கல்வியாளர்களை அனுப்பி ஆய்வு செய்து அவற்றையும் நமது கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும். 
இன்னொருபுறம் சமூகநீதி கோட்பாடுகளின்படி, ஐ.ஐ.டி.க்களில் தமிழக மாணவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய, ஐ.ஐ.டி. உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலவாரி இட ஒதுக்கீடு வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்." என்று தெரிவித்தார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை

நாடெங்கிலும் உள்ள 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கவுள்ளன. சேர்க்கை அறிவிப்பு மற்றும் வழிகாட்டு விதிமுறைகள், வெகு விரைவில், கேந்திரிய வித்யாலயா சங்கதனால்(sangathan) வெளியிடப்படும்.

அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தொடக்க வகுப்பில் சேர்க்கை பெறுவார்கள் மற்றும் அவர்களில் சுமார் 20,000 பேர், டில்லி பிராந்தியத்தில் உள்ள 80 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. டில்லியில் மட்டுமே 60 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மொத்த இடங்களில் 25%, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக ஒதுக்கப்படும். ஆனால், அந்த சலுகைக்கான விண்ணப்பங்கள், இருக்கும் இடங்களைவிட அதிகரித்தால், ஒவ்வொரு பிரிவிலும் லாட்டரி முறை பின்பற்றப்படும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சேர்க்கை நடைமுறைகளில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இந்த ஆண்டு இருக்காது. சில சிறிய மாற்றங்களைப் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால் தெரிவிக்கப்படும். 8ம் வகுப்பு வரை எந்த சேர்க்கை நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது.

மதிப்பெண் சான்று இல்லையா? சீக்கிரமா சொல்லுங்க!

''கடந்த, 2006, மார்ச் தேர்வு முதல், 2011, செம்டம்பர் தேர்வு வரையிலான, ஆறு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வை எழுதி, பெறப்படாமல் உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், விரைவில் அழிக்கப்பட உள்ளன. சம்பந்தபட்ட தேர்வர், உடனடியாக, மதிப்பெண் சான்றிழை பெற வேண்டும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரித்து உள்ளார்.

அவரது அறிவிப்பு: மேற்கண்ட ஆண்டுகளில், பிளஸ் 2 தனிதேர்வை எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ், விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய பழைய மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை பெற, இதுவரை, சம்பந்தபட்ட தேர்வர் முன் வரவில்லை. இதனால், அந்த சான்றிதழ்களை அழித்திட, திட்டமிடப்பட்டு உள்ளது. 
எனினும், தனி தேர்வர் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள், மதிப்பெண் சான்றிதழை பெற வசதியாக, இந்த தேதியில் இருந்து, மூன்று மாதம், கால அவகாசம் தரப்படும். அதன்பின், சம்பந்தபட்ட மதிப்பெண் சான்றிதழ் அழிக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் பெற விரும்பும் தேர்வர், 'அரசு தேர்வு இயக்குனரின் கூடுதல் செயலர் (மேல்நிலை), எச் - 9 பிரிவு, அரசு தேர்வு இயக்குனரகம், சென்னை - 6' என்ற முகவரிக்கு, தேர்வெழுதிய ஆண்டு, மாதம், பதிவு எண், மையம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். 
அத்துடன், 40 ரூபாய், 'ஸ்டாம்ப்' ஒட்டி, சுய முகவரியிட்ட கவரையும், விண்ணப்பத்தில் இணைத்து, மதிப்பெண் சான்றிதழை பெறலாம். வரும் ஆண்டுகளில், மதிப்பெண் சான்றிதழ்களை, இரு ஆண்டு வரை மட்டும், தேர்வுத்துறை பாதுகாக்கும். அதன்பின், சான்றிதழ்களை அழித்து விடும். இவ்வாறு, தேவராஜன் கூறி உள்ளார்.

ஏ.டி.எம்., கட்டணம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு

ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், ஏ.டி.எம்., மையத்தின் பாதுகாப்பு செலவினம் உயர்ந்துள்ளதாக கூறி, வங்கிகள் அதன் வாடிக்கையாளரிடமே, ஐந்து முறைக்கு மேற்பட்ட, ஏ.டி.எம்., பயன்பாட்டிற்கு, கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன.
இது குறித்து சக்ரபர்த்தி கூறியதாவது: வங்கிகளின் இந்த திட்டம், மிகவும் அபத்தமான, முரண்பாடான செயல். உலகில் எங்கும் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த திட்டத்தை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்.33399 / 2013, 7.1.14 அன்றைய விசாரணை நிலவரம்

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA ) சார்பில் தொடரப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கின் 7.1.2014 அன்றைய நிலவரம்.
 
 7-1-2014 அன்று நீதிமன்ற விசாரணை FOR ORDERS என்ற பகுதியில் 8வது வழக்காக வந்தது, அரசு வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ, அரியர் பற்றியோ வாதம் செய்யவில்லை, ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு. ராஜீவ் ரஞ்சன் IAS, திரு கிருஷ்ணன் IAS ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதி 17.1.14க்கு ஒரு வாரம் வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார்.
நமது மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான் அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21.1.2014 அன்று ஆஜராகி வழக்கை முடித்து தருவதாக உ றுதியளித்து உள்ளார்.

Popular Posts