வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு
பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அணிவகுப்பில் மாணவ, மாணவியர்களின் வருகை எண்ணிக்கை, தமிழ்தாய்
வாழ்த்து, தேசிய கொடியேற்றம், கொடிபாடல், உறுதிமொழி, சர்வ சமய வழிப்பாடு,
திருக் குறள் மற்றும் விளக்கம், இன்றைய சிந்தனை, தமிழ் மற்றும் ஆங்கில
செய்திகளை படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பு
குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி
அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த
அணிவகுப்பு பயிற்சி முகாமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்மாள்
துவக்கி வைத்தார்.உடற்கல்வி ஆசிரியர்கள் மகாமுனி, புத்தர், ஜெயபால், சுமதி,
ஈஸ்வரி ஆகியோர் பயிற்சியளித்தனர். இதில், தலைமையாசிரியர்கள், மாணவ,
மாணவியர்கள் பங்கு பெற்றனர்.
நன்றி : தினமலர்