தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு,
ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது.
பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி
அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது.
அதன் அறிக்கை மீது
அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில்
களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு
வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று
நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக்
குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு
பிறப்பித்தார்.
இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர்
குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட
உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 89 அரசாணைகள்
பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், துறை வாரியான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட
உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள்
பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கல்வி சார்ந்த நட்பு இணையதளங்கள் மற்றும் துறைகளில் விசாரித்த
வகையில், அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும், அவை துறை ரீதியாக
நிதித்துறையால் பரிசீலிக்கப்பட்டு அரசாணைகள் தயாராகி வருவதாகவும்
தெரிவித்தனர்.
எத்தனை அரசணைகள்? என்பதும், எப்போது வெளியிடப்படும்? என்பதும் அதில்
ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் எந்த
தகவலும் உறுதியாக அரசாணைகள் வெளியிடப்பட்ட பின்பே அறிய முடியும் என
அறியப்படுகிறது.