அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி
கற்பதற்கேற்றவாறு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை (Infrastructure)
மேம்படுத்த பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. இம்மானியம் வழங்க மாவட்ட
வாரியாக 2013-14ம் ஆண்டு வரைவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வகையான அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், கள்ளர், சீரமைப்பு, வனத்துறை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இம்மானியம் விடுவித்தல் வேண்டும்.
அரசு நிதி உதவிபெறும் தனியார் நிர்வாகப் பள்ளிகளை பொறுத்த வரையில் மாவட்ட திட்ட அறிக்கையில் இப்பள்ளிகள் சேர்க்கப்பட்டு, நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டிருந்ததால் மட்டுமே பள்ளி மானியம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இம்மானியத்தை பயன்படுத்தி மேஜை, நாற்காலி, பீரோ, குடிநீர் பாத்திரம், பதிவேடுகள், சுவர் கடிகாரம், அலமாரிகள், எழுது பொருள்கள, மின்வசிறி, மின் விளக்குகள், தகவல் பலகை, கரும்பலகை, செயல் வழிக் கற்றல் அட்டைகள் வைக்கும் டிரேஸ், பாய்கள், தீயணைப்பான், தேசியக் கொடி, கயிறு, மைக், மின் அழைப்பான், உலக உருண்டை, தனிம வரிசை அட்டவணை போன்றவை வாங்க, பள்ளி மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த ஏதுவாக பள்ளி மானியத்திலிருந்து மாணவர்களுக்கு தேவையான கைபந்து, கால்பந்து, ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்க பலகை, கேரம் விளையாட்டு போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்திட வேண்டும், பொருட்கள் தரமானதாக இருத்தல் வேண்டும்.
தொடக்கப் பள்ளி மானியம் மற்றும் நடுநிலைப் பள்ளி மானியம் வழங்குதல் (Release of Primary School Grant and Upper Primary School Grant)
1. 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5000/- வீதமும் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு
வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.7000/- வீதமும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.12000/- வீதமும் வழங்கப்பட வேண்டும்.
2. கோடிட்ட காசோலையாக கிராமக் கல்வி குழு / பெற்றோர் ஆசிரியர் கழகம் /பள்ளி நிர்வாகக் குழுவின் பெயரில் வழங்கப்பட வேண்டும்.
3. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.
4. காசோலை பெறப்பட்ட உடன் வங்கியில் செலுத்தப்பட வேண்டும்.
பொருள் வாங்குதல் (Purchase of Materials)
1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்களை கிராமக்
கல்விக்குழுவின் தீர்மானத்தின்படி வாங்கப்பட வேண்டும்.
2. பொருள்கள் வாங்க தேவைப்படும் பொழுது மட்டும் தேவைப்படும் அளவிற்கு வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும்.
3. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச்சீட்டுகள் (Vouchers) பெறப்பட்டு பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
4. தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்கப் பதிவேட்டில் (Cash book) பதிவு செய்ய வேண்டும்.
5. பொருள்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். இருப்புப் பதிவவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்படவேண்டும்.
6. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியத் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி, தொகை உள்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும். பள்ளி மானியம்
பயன்படுத்தியதைக் கண்காணித்தல்
(Monitoring the utilization of school grant)
1. மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்., வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (AEEO ) பள்ளி மானியம் பயன்படுத்தியதை கண்காணித்து உறுதி செய்தல் வேண்டும்.
2. இருப்புப் பதிவேட்டையும், ரொக்க பதிவேட்டையும், பள்ளி மானியப் பதிவேட்டையும் அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.
3. தேவையின் அடிப்படையில் மட்டுமே பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பதையும் வாங்கப்பட்டுள்ள பொருள்களின் தரத்தையும் உறுதி செய்தல் வேண்டும்.
4. பொருள்கள் வாங்கும் பொழுது மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
பயன்பாட்டுச் சான்றிழ்கள் ஒப்படைத்தல்
(Submission of Utilisation Certificates)
1. பயன்பாட்டுச் சான்றிழ்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மூலமாக வட்டார வளமையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
2. பார்வையின் போது அலுவலர்களுக்கு காண்பிக்க வேண்டும்.
மாவட்டத் திட்ட அலுவலகம் (DPO)
1. ஆண்டு வாரியாக பள்ளி மானியம் வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் (தொடக்க வகுப்புகள், உயர்தொடக்க வகுப்புகள்) எண்ணிக்கை, வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, தொகை, காசோலை எண்கள் போன்றவை அடங்கிய பள்ளி மானியப் பதிவேடு (School Grant Register ), பராமரித்தல் வேண்டும்.
2. கிராமக் கல்விக் குழுக்களின் பெயரில் கோடிட்ட காசோலைகள் ஜுன்- ஜுலை மாதங்களில் வழங்கப்பட வேண்டும்.
3. காசோலை வழங்கும் பதிவேட்டில் (Cheque Issue Register), பதிவு செய்யப்பட வேண்டும் (காசோலை எண், நாள், கிராமக் கல்விக் குழுவின் பெயர் மற்றும் வங்கியின் பெயர்)
4. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.
5. பயன்பாட்டுச் சான்றிழ்கள் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடமிருந்தும் ஒன்றியம் வாரியாக ஒன்றியத்துக்கு ஒரு சான்றிழ் வீதம் பெறப்பட வேண்டும்.
6. மானியங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும், பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும்பள்ளிகளுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும்.
வட்டார வள மையம் (BRC)
1. வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஒன்றிய அளவில் பள்ளி மானியப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
2. ஒன்றிய அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.
3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, என்ன என்ன பொருள்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க வேண்டும்.
4. பள்ளி மானியம் பெற்ப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட வேண்டும்.
5. பள்ளி மானியம் வழங்கப்பட்ட அனைத்து பள்ளிகளிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட்டுவிட்டதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அளவில் ஒரே பயன்பாட்டுச் சான்றிதழில் பள்ளி மானியம் வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை (தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி), தொகை குறிப்பிட்டு மாவட்டத் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப் படவேண்டும்.
பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம் (CRC)
1. ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மானியப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
2. பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.
3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது. என்ன என்ன பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க வேண்டும்.
4. பள்ளி மானியம் பெறப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்படவேண்டும்.
5. மேலும் மைய அளவிலுள்ள அனைத்து பள்ளிகளையும் பார்வையிடுதல் மற்றும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறுதல் ஆசிரியர் பயிற்றுநரின் முழுப்பொறுப்பாகும்.
கிராமக் கல்விக் குழு / பள்ளி மேலாண்மைக் குழு
1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்கள் கொள்முதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
2. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச் சீட்டுகள் ( Voucher ) பெறப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
3. இருப்புப் பதிவேட்டில் வாங்கப்பட்ட பொருள்களின் பெயர், தொகை, ரசீது எண். நாள், வாங்கிய இடம் முதலியவை பதிவு செய்தல் வேண்டும். இப்பக்க எண்ணை பற்றுச் சீட்டில் குறித்து இருப்புச் சான்று பதிய வேண்டும்.
4. பள்ளி மானியப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். (பெற்ற தொகை, காசோலை எண். வங்கி மற்றும் நாள்).
5. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியம் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி தொகை உட்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
6. பயன்பாட்டுச் சான்றிழ் ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இச்சுற்றறிக்கையின் நகலினை மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கீழ்கண்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும். சுற்றறிக்கை பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சான்றிழ் பெற்று தங்கள் அலுவலகக் கோப்பில் வைத்திருத்தல் வேண்டும்.
(இவ்வாறு மாநில் திட்ட இயக்ககம் செயல்முறை வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.)