தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களை சார்ந்த அனைத்து
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக்
கூட்டம் வரும் ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் சென்னையில்
நடைபெறுகிறது.
மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுக் கூட்டம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய
நாட்களில் நடைபெறவிருந்தது, தற்பொழுது ஆகஸ்டு 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற
உள்ளது.
இக்கூட்டத்தில் அரசின் விலையில்லா திட்டங்கள்,
மாணவ / மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள இருப்பிட, சாதி, வருமான சான்றிதழ்
விவரங்கள், சிறப்பு ஊக்க தொகை, வங்கி கணக்கு துவக்கிய விவரம், தொழிற்கல்வி
பிரிவு பயின்ற மாணவ / மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கிய விவரம்,
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தவர்கள் மாறும் சேராதவர்கள் விவரம்,
மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி அலுவலகங்கள் / பள்ளிகளில் காலியாக உள்ள
பணியிடங்கள் விவரம் ஆகியவை ஆய்வுக் கூட்டத்திற்கு முன் சமர்பிக்க அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.