ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கை
சமர்பிக்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும்
பரபரப்பும் எழத்தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக இப்போ வரும் அப்போ வரும் என எதிர்பார்க்கப்பட்ட அரசாணை
வெளியீடு நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிலிருந்த ஆசிரியர்களுக்கு
தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊக்க ஊதியம் கூடுதலாக மூன்று சதவீதம் என்பதை
தவிர்த்து வேறு எந்த பலனும் இல்லை என்பதால் பெருத்த ஏமாற்றமாக
கருதுகின்றனர்.
குறிப்பாக தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊதிய விகித மாற்றம் மற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கான ஊதிய விகித மாற்றம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்பதால். ஆசிரியர் சங்கங்கள் தற்போதே
மாபெரும் ஆர்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க ஆயத்த கூட்டங்களை நடத்தி
வருகின்றனர். பல இடங்களில் வட்டார அளவிலேயே முடிவு செய்து ஆர்பாட்டங்களை
அறிவித்துள்ளனர். இன்று மாலைக்குள்ளோ நாளையோ பெரும்பாலான சங்கங்கள் மாநிலம்
தழுவிய ஆர்பாட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது
அசிரியர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த போராட்டமாக மாறுமாக? என்ற ஆவலும்
ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.