பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசு உத்தரவு

பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே தெரிய வருகிறது. இதனால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உடனே அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல்களை தெரிவிக்க பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் 14 அம்ச திட்டங்களை செயல்படுத்துதலில் உள்ள குறைபாடுகள், முக்கியமாக மாணவ, மாணவிகளை நேரடியாக பாதிக்கும் சத்துணவு செயல்படுத்துவதில் குறைபாடுகள், மாணவ, மாணவிகளை வழிநடத்துதல், பள்ளிகளில் இருந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல், நாட்டு நலப்பணித்திட்டத்திற்கு அழைத்துச் செல்லுதல், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் முரண்பாடன செயல்கள், ஒழுக்கக் கேடுகளை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட எதிர்பாரத சம்பவங்கள் நிறைய ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தையும் உடனே மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
                          முதல் கட்டமாக நிகழ்வுகளை கேள்விப்பட்டவுடன், அதை சரியா என உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அதையடுத்து, அத் தகவலை பள்ளிக் கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அங்குள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியமான அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்தால் உடனே தலைமையாசிரியர்களே நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களான மாநில பள்ளிக் கல்வி இயக்குநர்-28278796, இணை இயக்குநர்(பணியாளர் நிர்வாகம்)-28276340, இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி)-28280186, இணை இயக்குநர்(நாட்டு நலப்பணி திட்டம்)-28204340, இணை இயக்குநர்(தொடக்க கல்வி)-28250523 ஆகியோருக்கு தெரிவிக்கவும் வேண்டும் என பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வாக்குறுதிகளை கவனத்தில் கொள்ளாத ஊதிய குறை தீர்க்கும் பிரிவு. 26.02.2011தினமணி நாளிதழ் செய்தியில் வெளியான வாக்குறுதியினை ஆசிரியர்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். (நன்றி : தினமணி )


ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்வில் மதிப்பெண்களை நிர்ணயிப்பதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவை தாக்கல் செய்த பழனிமுத்து கூடுதல் பிரமாண பத்திரத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை ஐகோர்ட் தலைமை நீதிபதி அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு விசாரித்துள்ளது. மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இயக்குனர்கள் மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு :

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும், திரு. தேவராஜன் அவர்கள் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனராகவும், தொடக்கக் கல்வித் துறை  இயக்குநராக திரு.இளங்கோவன் அவர்களையும், திரு.சங்கர் அவர்களை அனைவருக்கும்
இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனராகவும், திருமதி. வசுந்திரதேவி அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராகவும், திரு.கண்ணப்பன் அவர்களை ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் துறை இயக்குனராகவும், திரு. பிச்சை அவர்களை மெட்ரிக் பள்ளி இயக்குனராகவும், திரு.அன்பழகன் அவர்களை பாடநூல் கழக இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். இயக்குனர் பேசியதாவது: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட "தேர்வுக் குழு" அமைக்கப்படும். விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும். 
இணை இயக்குனர் அளவிலான நேர்காணலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்பின், தேர்வுக் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், விருதுகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நடப்பாண்டில் பள்ளிகளில் விளையாட்டிற்காக மட்டும் ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். 
மாணவர்களுடன் ஆசிரியர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும், பாடம் தவிர்த்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு அமைய வேண்டும், என்றார்.
அரசு நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். "கல்வி அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என இயக்குனர் பதிலளித்தார்.
நன்றி : தினமலர்

பாடப்புத்தக அட்டையில் இருந்தும் கேள்விகள்: டி.இ.டி., தேர்வுக்கு நிபுணர்கள் ஆலோசனை

பள்ளி பாடப்புத்தக அட்டையில் இருந்து கூட, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படலாம்; எனவே, புத்தகங்களை, ஒரு வரி விடாமல், முழுமையாக படிக்க வேண்டும்" என, டி.இ.டி., தேர்வு எழுதுவோருக்கு, பேராசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

தமிழ் பாடம் குறித்து, மதுரை, "நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங்" பயிற்சி மைய உதவி பேராசிரியர் கணேசன்: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோர், 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள, பள்ளி பாடப்புத்தகங்களை, முழுமையாக படித்தாலே, எளிதில் வெற்றி பெறலாம். 
தமிழ் பாடத்தை பொறுத்தவரை, புத்தக அட்டையில் இருந்து கூட, கேள்விகள் கேட்கப்படலாம். அனைத்து புத்தகங்களையும், ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும். தேர்வு எழுதும் போது, கேள்விக்கு உடனே பதிலளிக்காமல், சற்று நிதானமாக சிந்தித்து, பதிலளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 
சமூகத்தில் நடக்கும் செய்திகள், பெரும்பாலும் கேள்விகளாக அமையும். சமூக நிகழ்வுகளையும், அறிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில், சாதாரண கேள்விகளும், குழப்பும் வகையில் கேட்கப்படும். அந்நேரத்தில், யோசித்து நிதானமாக பதிலளிக்க வேண்டும். 
நம்மை ஏமாற்றும் வகையில், கேட்கப்படும் கேள்விகளுக்கு உஷாராக பதிலளிக்க வேண்டும். தமிழை பகுத்து படிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். 
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் பயிற்சி மையநிர்வாக இயக்குனர் வெங்கடாசலம்: அடிப்படை கணிதம், சூத்திரங்களை முழுமையாக படிப்பதோடு, பயிற்சி செய்து பார்க்க வேண்டும். 
மனப்பாடம் செய்து படிப்பதை விட்டு விட்டு, புரிந்து படிக்க கற்று கொள்ள வேண்டும். தேர்வுக்கு படித்தால் மட்டும் போதாது, படித்ததை தேர்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்று கொள்ள வேண்டும். 
போட்டி தேர்வு, நம் அறிவுக்கு நடத்தப்படும் தேர்வு அல்ல; நம் அறியாமையை சோதிக்க நடக்கும் தேர்வு. தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்.
ஆங்கில பாடம் குறித்த எளிய, டிப்ஸ்களை,வழங்கும், பயிற்சி மைய நிர்வாக அதிகாரி வெங்கடாஜலபதி: குழப்பமான மொழியான ஆங்கிலத்தை, அவசியம் கற்று கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது இல்லை.
நன்றி : தினமலர்

திங்கள் கிழமை தோறும் மாணவர்கள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு

வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 

 இதன்படி, அணிவகுப்பில் மாணவ, மாணவியர்களின் வருகை எண்ணிக்கை, தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கொடியேற்றம், கொடிபாடல், உறுதிமொழி, சர்வ சமய வழிப்பாடு, திருக் குறள் மற்றும் விளக்கம், இன்றைய சிந்தனை, தமிழ் மற்றும் ஆங்கில செய்திகளை படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 
அணிவகுப்பு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த அணிவகுப்பு பயிற்சி முகாமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்மாள் துவக்கி வைத்தார்.உடற்கல்வி ஆசிரியர்கள் மகாமுனி, புத்தர், ஜெயபால், சுமதி, ஈஸ்வரி ஆகியோர் பயிற்சியளித்தனர். இதில், தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர். 
நன்றி : தினமலர்

01.01.2006 முதல் 31.05.2009 வரை பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலை/ சிறப்புநிலை அடைந்து அதற்குப்பின் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துக்கொண்டவர்களுக்கு கூடுதல் 3% உண்டா ? - ஓர் ஆய்வு



அரசாணையின் முதல் பத்தியை கவனிக்கவும் :






01.01.2006க்கு பின் 10/ 20 வருட சாதாரண (பதவியுயர்வின்றி) நிலையிலேயே தேர்வு/ சிறப்பு நிலை முடித்தோர்க்கு புதிய ஊதிய விகித மாற்றமின்றி  கூடுதலாக 3% மட்டுமே ஊக்க ஊதியம் மட்டுமே அதே மாற்றமற்ற Pay band மற்றும் Grade Pay விற்கு அளிக்கப்படுகிறது.

அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 
அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது. 
பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது.
 



விளக்கம்:
31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் )
1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 9300 விகிதத்தில் G.P.4300 லும் வைக்கப்பட்டிருப்பர்.

இவ்வாறாக 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் செய்யப்பட்ட ஊதிய நிர்ணயத்தை தொடர்ந்து 2800 தர ஊதியத்தில் உள்ள தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள், தேர்வுநிலை அடையும்போது தற்போது கூடுதலாக 3% INCREMENT பெற்று கொள்ளலாம். உதாரணமாக 2800 தர ஊதியத்தில் உள்ள ஒருவர் 2008 ஆம் ஆண்டு தேர்வுநிலையை அடைந்திருந்தால் அப்போது 3% INCREMENT பெற்றிருப்பார். அவர் தற்போது கூடுதலாக 3% INCREMENT சேர்த்து கணக்கிட்டுகொள்ளலாம். நிலுவைத்தொகை கிடையாது. பணப்பயன் 1.4.2013 முதல் பெறலாம்.

இதைபோல 1.1.2006 இல் தேர்வுநிலை பெற்று 9300 ஊதிய விகிதத்தில் 4300 தர ஊதியத்தில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டவர்கள், அவர்கள் சிறப்புநிலை (Special Garde) அடையும்போது கூடுதலாக 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.

தொகுப்பூதியதாரர்களும் மற்றும் அதற்க்கு பின்னர் நியமிக்கப்பட்டவர்களும் தேர்வுநிலை அடையும்போது 3% + 3% INCREMENT பெற்றுகொள்ளலாம்.

சுருக்கமாக சொன்னால் REVISED SCALES OF PAY இல் தேர்வுநிலை/சிறப்புநிலை பெறுபவர்கள் 3% + 3% INCREMENT பெறலாம்.

OPTION அளித்து தேர்வு நிலை பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:

OPTION அளித்து தேர்வுநிலை ஊதிய நிர்ணயமான 9300 + G.P. 4300 இல் ஊதியம் நிர்ணயம் செய்துகொண்டவர்கள் சிலர் நாங்களும் 1.1.2006 இக்கு பின்னர்தான் தேர்வுநிலை பெற்றோம் எனவே எங்களுக்கும் கூடுதலாக 3% உண்டா என்று கேட்கின்றனர். இல்லை என்றால் சங்கடப்படுகின்றனர். எனவே விளக்கம் கூற விரும்புகிறோம்.
முக்கியமாக 01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு/ சிறப்பு நிலை முடித்தவர்களுக்கே OPTION கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

உதாரணமாக 1.1.2008 இல் தேர்வுநிலை பெற்றவர்கள் 1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது 5200 - 20200 + 2800 தான் பெற இயலும். எனவே அவர்1.1.2006 இல் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.1.2008 வரை முந்தைய அதாவது பழைய ஊதிய விகிதத்திலேயே இருந்துவிட்டு, அதாவது பழைய ஊதிய விகிதத்தில் தேர்வு நிலைப்பெற்று விட்டு 1.1.2008 இல் புதிய ஊதிய விகிதத்தில் தங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்துகொண்டிருப்பார். அவருக்கு அப்போது எந்த 3% சதவீதமும் அளிக்கப்பட்டிருக்காது.
இங்கே மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்வோம்  "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay". அதாவது புதிய ஊதிய விகிதத்தில் தேர்வு/ சிறப்பு நிலை முடித்தோர்க்கு கூடுதலாக 3% என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3% பெறாதவருக்கு கூடுதலாக 3% எப்படி அளிக்க இயலும்?
இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் OPTION அளித்தவர்கள் பழைய ஊதிய விகிதத்தில் தான் தேர்வுநிலை பெற்று, பின்னர் புதிய ஊதியத்திற்கு வருகின்றனர். இவர்கள் அடுத்ததாக சிறப்புநிலை பெறும்போதுதான் இந்த 3%+3% பெற இயலும்.



652 மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் "டிஸ்மிஸ்' | 652 Computer Teachers Dismissed

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்கள் பணியில் நிலவி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.


தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1999ம் ஆண்டு, 2,324 கணினி ஆசிரியர்கள், 1,500 ரூபாய் சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பின், 2004ல், 2,000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து, 2006ம் ஆண்டு, 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த, அரசு உத்தரவிட்டது.இத்தேர்வில், கணினி ஆசிரியர்கள், 1,714 பேர் தேர்வு எழுதினர். முதலில், தேர்வு பெற, 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என, அரசு அறிவித்தது. பின், இத்தேர்வு மதிப்பெண்ணில் விலக்கு அளித்து, 35 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, அறிவித்தது. இதன்படி, 35 சதவீத மதிப்பெண் பெற்ற, 1,686 கணினி ஆசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பி.எட்., முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேர்ச்சி மதிப்பெண்ணை, 50 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக அரசு குறைத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், 894 பேர் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, 35 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை பெற்ற 792 ஆசிரியர்கள், மறுதேர்வு எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2010, ஜனவரி 24ம் தேதி, 792 பேருக்கு மறுதேர்வு நடத்தியது.

அதில், 125 பேர் தேர்வு பெற்றனர்; மீதமுள்ள 667 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். "வினாத்தாள் குளறுபடியால், தேர்வில், அதிகளவில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. எனவே, கேள்வித்தாளை சரிபார்க்க வேண்டும்' என, ஐகோர்ட்டில், மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த ஐகோர்ட், வினாத்தாள் ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., கணினி ஆசிரியர் குழுவை அமைத்தது. இக்குழு, 150 கேள்விகளில், 20 கேள்விகள் தவறு என்றும், ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, ஐகோர்ட், தேர்வெழுதிய, 667 பேரில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், 667 ஆசிரியர்களில் இருந்து, 15 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இதையடுத்து, பி.எட்., ஆசிரியர் சங்க வழக்கின் அடிப்படையில், தகுதியில்லாத, 652 பேரை பணி நீக்கம் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 652 கணினி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை நேற்று முன்தினம், பணி நீக்கம் செய்தது.

இதுகுறித்து, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம், மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறுகையில், ""டி.ஆர்.பி.,யின் குளறுபடியான கேள்வித்தாள், அதிகளவிலான ஆசிரியர்கள் தோல்விக்கு காரணம். பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்களும், இப்பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள். எனவே, கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.
நன்றி : தினமலர்

தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இரட்டைப்பட்டம் வழக்கு வருகிற திங்கட்கிழமை (29.7.13) விசாரணைக்கு வரும் என இவ்வழக்கை எடுத்து நடத்தும் தோழர்களில் ஒருவரான திரு.கலியமூர்த்தி நம்மிடம் தெரிவித்துள்ளார். 
மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியுள்ளவர்களுக்காவது நீதி கிடைக்க கேட்டுக்கொள்ளப் போவதாக நம்மிடம் தெரிவித்தார். இவ்வழக்கு சம்பந்தமாக திரு.கருணாலயபாண்டியன் மற்றும் திரு.ஆரோக்கியராஜ் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.
செய்தி பகிர்வு : திரு. முத்துப்பாண்டியன்

மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.

> இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
> தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை. (Effect from 01.01.2006, Monetary Benefit from 01.04.2013)
GO's 
GO's 
GO's 

Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013

நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன் 01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.

01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு 3% ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது தற்போது 01.01.2006 முதல் இந்த ஆணை அமுலுக்கு வருவதால், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்ட ஆசிரியர்களும் பலன் பெறுவர்.

மூன்று நபர் குழு அரசாணைகள் - ஆசிரியர்களுக்கு எந்த ஊதிய விகித மாற்றமுமில்லை பலனுமில்லை.. ஆசிரியர்கள் பெருத்த ஏமாற்றம்... மாபெரும் ஆர்பாட்டத்திற்கு ஆயத்தமாகும் ஆசிரியர் சங்கங்கள்....

ஆசிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழத்தொடங்கியது.

கடந்த ஒரு வாரமாக இப்போ வரும் அப்போ வரும் என எதிர்பார்க்கப்பட்ட அரசாணை வெளியீடு நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிலிருந்த ஆசிரியர்களுக்கு தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊக்க ஊதியம் கூடுதலாக மூன்று சதவீதம் என்பதை தவிர்த்து வேறு எந்த பலனும் இல்லை என்பதால் பெருத்த ஏமாற்றமாக கருதுகின்றனர். 
குறிப்பாக தேர்வு/ சிறப்பு நிலைக்கு ஊதிய விகித மாற்றம் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித மாற்றம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்பதால். ஆசிரியர் சங்கங்கள் தற்போதே மாபெரும் ஆர்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க ஆயத்த கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வட்டார அளவிலேயே முடிவு செய்து ஆர்பாட்டங்களை அறிவித்துள்ளனர். இன்று மாலைக்குள்ளோ நாளையோ பெரும்பாலான சங்கங்கள் மாநிலம் தழுவிய ஆர்பாட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது அசிரியர் சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்த போராட்டமாக மாறுமாக? என்ற ஆவலும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்

6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

6-வது ஊதியக்குழு சம்பள உயர்வில், குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து அரசு செலவீனத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 6-வது ஊதியக்குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், நிதித்துறை கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் டாக்டர் உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தக்குழு, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கருததுக்களை கேட்டது. இதைத்தொடர்ந்து குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது.

இந்த நிலையில் அந்தக்குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயம் மற்றும் மண்வளபாதுகாப்புத்துறை, வேளாண் பொறியியல்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, பொது சுகாதாரத்துறை உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை சம்பள உயர்வு அளித்து நேற்று ஒரே நாளில் தனித்தனியே துறை வாரியாக 20 அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அரசின் இந்த உத்தரவின்மூலம் 43 பிரிவுகளைச்சேர்ந்த 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உத்தரவைத்தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து துறைவாரியாக பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன.

இது குறித்து, என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரிமூர்த்தி கூறுகையில், ‘‘அரசு ஊழியர்களின் நீண்ட கால மனக்குறைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்த்து வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்வுபெறும் நிலை ஏற்படும், இந்த ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இருக்கும் இதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிததுக் கொள்கிறேன்’’ என்றார்.

6th Pay Commission - 3 Member Committe Report Submit- Expected GO | 6-வது ஊதியக்குழு குறைபாடுகளுக்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் அறிக்கை சமர்பிப்பு - விரைவில் அரசாணை வெளியாகும் என எதிர்பார்ப்பு - ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. பின்பு ஆறாவது ஊதியக் குழுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததையொட்டி அக்குறைபாடுகளை களைய ஒரு நபர் குழு அறிவிக்கப்பட்டது. 
அதன் அறிக்கை மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைபாடுகள் பெரிய அளவில் களையப்படவில்லை என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முதல்வருக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் ஆறாவது ஊதியக் குழு குறைப்பாடுகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதனடிப்படையில் தற்பொழுது மூன்று நபர் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்று துறை வாரியாக அரசாணைகளை வெளியிட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 89 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், துறை வாரியான அரசாணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு 3 அரசாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கல்வி சார்ந்த நட்பு இணையதளங்கள் மற்றும் துறைகளில் விசாரித்த வகையில், அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும், அவை துறை ரீதியாக நிதித்துறையால் பரிசீலிக்கப்பட்டு அரசாணைகள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தனர்.
எத்தனை அரசணைகள்? என்பதும், எப்போது வெளியிடப்படும்? என்பதும் அதில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் எந்த தகவலும் உறுதியாக அரசாணைகள் வெளியிடப்பட்ட பின்பே அறிய முடியும் என அறியப்படுகிறது. 

PG TRB Exam Tentative Key Answers | ஜூலை 2013 - தமிழ் - முதுகலை ஆசிரியர் போட்டி தேர்விற்கான உத்தேச வினா - விடைகள் மற்றும் விடைகள்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; நிதிச் செயலாளர், இயக்குநர் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் 2012ல் W.P.(MD).NO.3802/2012 திரு.ஏங்கல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
 
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார் அகர்வால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான நிதித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், திண்டுக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 01.08.2013 & 02.08.2013 அன்று நடைபெறுகிறது

தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களை சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. 
 
மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆய்வுக் கூட்டம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்தது, தற்பொழுது ஆகஸ்டு 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அரசின் விலையில்லா திட்டங்கள், மாணவ / மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள இருப்பிட, சாதி, வருமான சான்றிதழ் விவரங்கள், சிறப்பு ஊக்க தொகை, வங்கி கணக்கு துவக்கிய விவரம், தொழிற்கல்வி பிரிவு பயின்ற மாணவ / மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கிய விவரம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தவர்கள் மாறும் சேராதவர்கள் விவரம், மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி அலுவலகங்கள் / பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் ஆகியவை ஆய்வுக் கூட்டத்திற்கு முன் சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / CPS சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள்

சிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உத்தரவு

மாவட்ட வாரியாக, சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்து, 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாள், பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளிகளில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. 
இந்த ஆட்சியில் விழாவுடன் கூடுதலாக மாவட்ட வாரியாக சிறந்த அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என, நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு முறையே 25 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும், 1 லட்சம் ரூபாய் என, மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய், ரொக்கப்பரிசு வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. 
இந்த நிதியை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த, பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், நேற்று, காமராஜர் பிறந்த நாள் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறந்த பள்ளியை தேர்வு செய்யும் பணி, விரைவில் துவங்கும் என, பள்ளி கல்வித் துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.
மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, மாவட்டத்தில், சிறந்த, நான்கு அரசு பள்ளிகளை தேர்வு செய்யும். இன்னும் ஒரு மாதத்தில், சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம், பரிசுகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டங்களுக்கும், 80 லட்சம் ரூபாய், பரிசாக வழங்கப்படும். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்தார். 
மாற்றி அமைக்கப்பட்ட இந்த புதிய திட்டம், நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக, செயலர் பிறப்பித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TET Online Free and Payable Test by Rani TET Park

ஊதிய குழு அறிக்கை வெளியிட வேண்டும் ஆசிரியர்கள் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



















1.ஆறாவது ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட 3 நபர் குழு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். 
2.மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
3.தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதியில் 49 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டு முடிவை திரும்ப பெற வேண்டும்.

4.ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. புதிய மருத்துவ காப்பீட்டு தொகையை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் நேற்று (13.07.2013) மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

32, 000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர் பணி இடங்கள் வழங்க, 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் பணி ஆணை வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் சார்பில் 92 பேர், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க உத்தரவிட்டது.
அத்துடன் வழக்கு தொடர்ந்த 92 பேருக்கும் பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்குமாறும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


இதைத் தவிர 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களும், 782 சிறப்பாசிரியர்களும், 232 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் 32 பேரும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 30 பேரும், விவசாயத்துறை பயிற்றுநர்கள் 25 பேரும், அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு முதல் நியமனமாக இசை, ஓவியம், தையற்கலை உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான பதிவு மூப்புப் பட்டியல் வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகத்திலிருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்துள்ளது.

முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்குரிய பட்டியல் கிடைத்ததும் இந்த நியமனப் பணிகள் தொடங்கிவிடும். அடுத்த 45 நாள்களுக்குள் இந்த பணி நியமனத்தை முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

அடுத்ததாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் பேருக்கும் ஹால் டிக்கெட் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 422 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்குப் பிறகு ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடவும், அதற்கடுத்த 2 மாதங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் தாள் தேர்வு எழுத 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாள் தேர்வு எழுத 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 466 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

செப்டம்பரில் தேர்வு முடிவு: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். அதன்பிறகு, இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் பட்டதாரி ஆசிரியர்களும், மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 12,295 பட்டதாரி ஆசிரியர்கள், 817 இடைநிலை ஆசிரியர்கள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் அறிவிப்பு: விவசாயப் பயிற்றுநர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள், அரசுச் சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் நியமனத்துக்கான விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு இந்த நியமனத்துக்கான பணிகள் தொடங்கும். பெரும்பாலும் செப்டம்பர் மாதத்தில் உதவிப் பேராசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 6.85 லட்சம் பேர் விண்ணப்பம்
விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்படுகின்றன
ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹால் டிக்கெட்
ஆகஸ்ட் 17,18-ல் தேர்வு

செப்டம்பரில் தேர்வு முடிவு
817 இடைநிலை ஆசிரியர் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்

2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ஹால் டிக்கெட் பதிவேற்றம்
ஜூலை 21-ல் தேர்வு
ஆகஸ்ட்டில் தேர்வு முடிவு
செப்டம்பர் அல்லது அக்டோபரில் பணி நியமனம்

12,295 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பரில் விண்ணப்பங்கள் வரவேற்பு
டிசம்பரில் பணி நியமனம்

782 சிறப்பாசிரியர்கள் நியமனம்
பதிவு மூப்புப் பட்டியல் பெறப்பட்டுள்ளது
ஆகஸ்ட்டில் பணி நியமனம்

1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன
நேர்முகத் தேர்வு செப்டம்பரில் பணி நியமனம்

Popular Posts