3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7% D.A உயர்வு; ரூ. 7ஆயிரத்து 400 கோடி தான் கூடுதல் செலவு
சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது . இது ஜூலை 2012 முதல் சம்பள பலனில் சேர்ந்து வரும்.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடுகின்றது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் குழு முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். ஏற்கனவே கடந்த முறை 7 சதம் உயர்த்தப்பட்டு சம்பள விகிதப்படி அகவிலைப்படி 58 முதல் 65 சதமாக உயர்ந்தது. தற்போது மீண்டும் 72 சதமாக உயரும். இதன் மூலம் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 400 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஆகும்.
இப்போது இருக்கும் விலைவாசி உயர்வில் மத்திய அரசு 7 சதம் உயர்த்தினாலும் எங்களுக்கு போதாது என்றும் கூடுதலாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்றும் மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த அதிகார குழு கூட்டத்தில், மம்தா ஆதரவு விலகல் காரணமாக அமைச்சர்கள் குழுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு இன்று கூடுகின்றது. இந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
72 சதமாக உயர்வு :
அமைச்சர் குழு முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். ஏற்கனவே கடந்த முறை 7 சதம் உயர்த்தப்பட்டு சம்பள விகிதப்படி அகவிலைப்படி 58 முதல் 65 சதமாக உயர்ந்தது. தற்போது மீண்டும் 72 சதமாக உயரும். இதன் மூலம் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 400 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஆகும்.
அதிக எதிர்பார்ப்பில் ஊழியர்கள்:
இப்போது இருக்கும் விலைவாசி உயர்வில் மத்திய அரசு 7 சதம் உயர்த்தினாலும் எங்களுக்கு போதாது என்றும் கூடுதலாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்றும் மத்திய அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
டி.இ.டி., தேர்ச்சிக்கு பின், பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள்
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே, "கிலி&' அடைந்துள்ளனர்.
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும், அக்டோPஅர் 3ம் தேதி, மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. புதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்கக்கோரி, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல், "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே. பணி நியமனம் செய்வதற்கு, இதுவே இறுதித் தேர்வு கிடையாது. எனவே, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கு தனி வழிமுறைகளை வகுக்க வேண்டும்&' என, வலியுறுத்தி, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
டி.ஆர்.பி., முடிவு: "மறுதேர்வில், புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்காக 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனால், அக்டோPஅர் 3ம் தேதி நடக்க இருந்த தேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்ற முடிவை, மனுவாக, டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.
அதேபோல், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து, அரசு எடுத்துள்ள முடிவையும், மனுவாக டி.ஆர்.பி., சமர்ப்பித்தது.
இதை ஏற்று, நேற்று முன்தினம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு, அடுத்தவாரம் சென்னையில் கூடி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, முடிவெடுக்கவுள்ளது.
குழு எடுக்கும் முடிவை, அரசுக்கு தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற்றதும், உடனடியாக அரசாணை வெளியிடப்படும். குழு, எந்த வகையான வழிமுறைகளை உருவாக்கப்போகிறது என, தெரியாமல், தேர்ச்சி பெற்றவர்களும், இனி தேர்வை எழுதப்போகும் தேர்வர்களும், "கிலி" அடைந்துள்ளனர்.
நேர்முகத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தி, அதற்கு தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுமா என, தெரியவில்லை. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் என்ற முறை வந்தால், அது முறைகேடுகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே, உயர்மட்டக்குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கப் போகிறது என்பதை அறிய, தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஒரு கல்வியாண்டில் (Academic Year) பி.எட் (2007-08) முடித்து (21.06.2008) அதே கல்வியாண்டில் காலண்டர் (Calendar Year) ஆண்டை (Jan 2008 - Nov 2009) கணக்கில் கொண்டு கடைசி தேதியில் சேர்ந்து முதுகலை பட்டப்படிப்பு படித்தால் - முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியானவர் - ஆசிரியர் தேர்வு வாரியம் - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்
மாணவர்களுக்கு கல்விஉதவி தொகை ரூ.500-ஆக உயர்வு
https://www.box.com/s/e4l3hnbf7d44z6sicdo4
தொழிற்கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அம்மாணவர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையினை ஒரே சீராக ரூ.500-ஆக உயர்த்தியுள்ளதாகவும், இதற்காக அரசு ரூ.12.94 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளாதகவும், மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க ரூ.3.47 கோடி ஒதுக்கியிருப்பதாகவும், இந்த புதிய அறிவிப்பின் மூலம் 3,476 மாணவர்கள் பயன் அடைவர் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 24 முதல் விண்ணப்ப விநியோகம்- CEO - அலுவலகங்களில் கிடைக்கும் (விலை -50)
ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத விரும்பும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கும் மறுதேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்தத் தேர்வு அக்டோபர் 3-ம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வு நேரம், தேர்வு மையத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்குப் புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்துக்கு... ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் இப்போது மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்கக் கூடாது.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேரடியாக விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது.
ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தாளை மாற்ற விரும்பினால் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 28-க்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தின் நகல், ஹால் டிக்கெட் போன்றவற்றுடன் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய விண்ணப்பதாரர்கள், தாளை மாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
அக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தேர்வில் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தேர்வெழுத அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தோல்வி அடைந்ததை அடுத்து மறுதேர்வு நடத்த அறிவிப்பு வெளியானது.இதில், புதிதாக தேர்வெழுத விரும்புவோரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இன்று பதில் தாக்கல் செய்த ஆசிரியர் தேர்வுக்குழு வாரியத் தலைவர், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம். அதற்கு வசதியாக அக்டோபர் 5 ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.மேலும், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை புதிதாக தேர்வெழுத விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது.
இதற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப் புதல் அளிக்கும் என, தெரிகிறது. இந்த உயர்வு, கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து, அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர் பயன்பெறுவர். கடந்த மார்ச் மாதம், அகவிலைப்படி, 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்தது.
அனைத்து வகைப்பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு...
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்: 05224/கெ2/2012, நாள் : 18.09.2012
அரசு கடித எண் : 32194/இ1/2012-1 - நாள் : 17.09.2012 ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் 20.09.2012 அன்று அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
ந.க.எண்: 05224/கெ2/2012, நாள் : 18.09.2012
அரசு கடித எண் : 32194/இ1/2012-1 - நாள் : 17.09.2012 ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் 20.09.2012 அன்று அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது.
இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும்.
இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும்.
ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது. நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள்.
இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வைத்து அதன் பிறகு ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். இவ் வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்.
40% Physically Challenged? No profession tax from 01.10.2012
From October 1, persons living with 40 per cent disability in Tamil Nadu would be exempted from paying profession tax.
“The Tamil Nadu Municipal Laws (Third Amendment) Act, 2012, which provides for the exemption will come into force from October 1. We have also suitably amended the respective Municipal Corporation Acts of Chennai, Madurai and Coimbatore to give effect to this privilege for disabled employees and traders,” a Municipal Administration and Water Supply Department official said.
“At present, differently-abled persons with total disability in one or both hands or legs, spastics, totally speech-impaired or hearing-impaired persons or totally visually-impaired persons alone are exempted from the payment of profession tax, as per the provisions of the Urban Local Bodies Acts. In the absence of specific definition of disability in the said Acts, all the differently-abled persons are not in a position to avail the said benefit,” an official quoting the TN Municipal Laws (Third Amendment) Bill said.
According to the official, the Act had to be amended as the present law was ambiguous on exempting differently abled from paying the half-yearly profession tax. Now, “persons with disability, suffering from not less than 40 per cent of such disability, as certified by a Medical Practitioner in service of the Government not below the rank of Civil Surgeon, shall be exempt from profession tax,” he added.
“The Tamil Nadu Municipal Laws (Third Amendment) Act, 2012, which provides for the exemption will come into force from October 1. We have also suitably amended the respective Municipal Corporation Acts of Chennai, Madurai and Coimbatore to give effect to this privilege for disabled employees and traders,” a Municipal Administration and Water Supply Department official said.
“At present, differently-abled persons with total disability in one or both hands or legs, spastics, totally speech-impaired or hearing-impaired persons or totally visually-impaired persons alone are exempted from the payment of profession tax, as per the provisions of the Urban Local Bodies Acts. In the absence of specific definition of disability in the said Acts, all the differently-abled persons are not in a position to avail the said benefit,” an official quoting the TN Municipal Laws (Third Amendment) Bill said.
According to the official, the Act had to be amended as the present law was ambiguous on exempting differently abled from paying the half-yearly profession tax. Now, “persons with disability, suffering from not less than 40 per cent of such disability, as certified by a Medical Practitioner in service of the Government not below the rank of Civil Surgeon, shall be exempt from profession tax,” he added.
8 முதன்மைக் கல்வி அலுவலர் / துணை இயக்குனர் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணிபுரியும் அலுவலர்கள் ஆகியோருக்கு நிர்வாக மாறுதல் மற்றும் 29 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு(DEOs/DEEOs) முதன்மைக் கல்வி அலுவலராக பதவியுயர்வு வழங்கியும் மற்றும் இடைப்பட்ட காலத்திற்கு பொறுப்பு அலுவலராக 29 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்து பள்ளிகல்வி இயக்குனர் உத்தரவு
தரமான கல்வி வேண்டும்: சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
என்ன விலை கொடுத்தாவது குழந்தைகளுக்கு தரமான கல்வியை , தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் கட்டாயம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. புதிய அறிவு தேடலும், ஒழுக்கமும் உள்ளது தரமான சிறந்த கல்வியில் தான் எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எப். எம். இப்ராஹிம் ஆகியோர் வெளியிட்டிருப்பதாவது: தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போன்று தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் அரசு என்ன விலை கொடுத்தாவது தரமான கல்வியை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?
மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர் தினம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன?
ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...
கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன்.
கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி? "மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்?
அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர். கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி.
ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. "சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள் வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர். சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக் குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான். "இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப் புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம். இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.
ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...
கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன்.
கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி? "மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்?
அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர். கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி.
ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. "சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள் வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர். சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக் குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான். "இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப் புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம். இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.
"ஏ.டி.எம்.,' களில் பணம் : ரிசர்வ் வங்கி புதிய வசதி
"ஏ.டி.எம்.,' களில் பணத்தை எடுத்த பின், ரசீது வரும். அதில், எவ்வளவு பணம் இருப்பில் உள்ளது என தெரியவரும்.
இதில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இடையூறை கருத்தில் கொண்டு, இனி "ஏ.டி.எம்.,' மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரசீதுடன், இயந்திர "மானிட்டரில்', சேமிப்பு கணக்கு இருப்பு விபரங்கள்,வெளியிட வேண்டும் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களுக்கு - துறைகள் மாறி ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை புது உத்தரவு
பள்ளி கல்வி துறையில், ஆய்வு அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள், துறைகள் மாறி ஆய்வு செய்யும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்வி துறையில் தொடக்க கல்வி, மேல்நிலை கல்வி, கள்ளர் சீரமைப்பு, மாநகராட்சி போன்ற பிரிவுகள் உள்ளன.
இவற்றில், டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்கள் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்தில், ஆய்வு அதிகாரிகள் உள்ளனர்.பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை, விடுப்பு, பள்ளிக்கான வளர்ச்சி திட்டம் போன்றவை குறித்து, ஒரு துறைக்கு உட்பட்ட ஆய்வு அதிகாரி, அத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் மட்டும் ஆய்வு செய்யலாம் என இருந்தது. ஆனால், புதிய உத்தரவால், தொடக்க கல்வி துறை ஆய்வு அதிகாரி, கள்ளர் சீரமைப்பு துறையோ அல்லது மாநகராட்சி பள்ளிகளிலோ ஆய்வு மேற்கொள்ளலாம். இதற்கான உத்தரவை, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளி கல்வி துறை அனுப்பியது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்ய அதிகாரப்பூர்வமான அமைப்பு, ஆனால் இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போதுள்ள மாநில பதிவு மூப்பு முறை செயல்ப்படுத்துதல் மற்றும் மாணவர் நலன் கருதி 12.07.2012 TET தேர்வில் தவறியவர்களுக்கும் மறுதேர்வு அக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாணை 222 வெளியீடு
CPS பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை
CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் பல்வேறு சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றியே தீர வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தற்பொழுது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. அது என்னவென்றால் இத்திட்டத்தின் மூலம் ஓய்வுப்பெற்ற ஊழியர் அல்லது மரணமடைந்த ஊழியரின் குடும்பங்களுக்கு இதுவரை இத்திட்டத்தினால் பிடித்தம் செய்த சந்தா பணம், அரசின் பங்குத் தொகை மற்றும் எந்தவித ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சியான தகவல். இத்திட்டத்தின் தீவிரத்தை அறிந்த சிலர் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இதை திசை மாற்றும் விதமாக 30.08.2012 அன்றைய ஒரு பத்திரிகை செய்தியில் அரசு அலுவலர் கழகத்தின் சி மற்றும் டி பிரிவின் தலைவர் திரு. சவுந்திரராஜன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து பேசி உள்ளனர் என்றும், முதல்வர் உங்களுக்கு இனிப்பான செய்தி வரும் என கூறியுள்ளார் என்றும், பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவது தான் அந்த இனிப்பான செய்தி என்கின்றனர் அந்த ஊழியர் சங்க நிர்வாகிகள்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க மாநில அளவிலான நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இனிப்பான செய்தி வரும் என்று கூறியுள்ளாரே தவிர CPSஐ விலக்கி கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என கூறவில்லை என்றும் மேலும் CPSன் தற்பொழுது நிலை குறித்து விரிவான விவரங்களை அளித்தார்.
28.03.2012 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு எண். WP (MD). 3802 / 2012 CPSக்கு எதிராக தொடக்கப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கும் எடுத்து கொள்ளப்பட்டு அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இன்று வரை அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஆனால் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவின் தலைவரான அரசு செயலாளரிடமிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்து அரசிடம் பரிந்துரைகளை அளிப்போம் என்று உறுதி அளித்துள்ளார் என்று சுட்டிக்காட்டுகிறார்.
நிலைமை இவ்வாறு இருக்க அரசு, அரசு துறையிடமிருந்து அறிவிப்போ அல்லது எவ்வித பதிலும் வராத நிலையில், நிர்வாகிகளின் இச்செய்தி தன்னிச்சையாக விளம்பரத்திற்காக அளிக்கப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு ஆசிரியராக 7 வருடம் பணிபுரிந்து தற்பொழுது எந்தவித ஓய்வூதியம் பெறாமல் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் (100 நாள் வேலை) தினக் கூலி அடிப்படையில் வேலை செய்து வருகிறார். அவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் W.P.(MD). 10178 / 2012 வழக்கு தொடுத்துள்ளார், அந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் மேலும் அவர் தெரிவித்தார். எனவே பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் குறித்து எந்தவித பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
செப்.15 முதல் முப்பருவத்தின் இரண்டாம் பருவ கல்வி திட்டப் புத்தகங்கள் வினியோகம்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத் திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில், அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, 9.50 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. இவை, 15ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: மொத்தம், 140 அச்சகங்களில், இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், அச்சடித்து முடிக்கப்பட்டு, மாவட்டங்களில் உள்ள வினியோக மையங்களுக்கு, நேரடியாக அனுப்பப்பட்டு வருகின்றன. 15ம் தேதி முதல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கும் பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்வர்.
ஒன்று முதல், ஆறாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், அதிக பக்கங்களைக் கொண்டதாக இருந்ததால், இரு புத்தகங்களாக பிரித்து வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 70 பக்கங்களாகவும், அதிகபட்சம், 170 பக்கங்களை கொண்டதாகவும், இந்த புத்தகங்கள் இருக்கும்.
தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 30 சதவீத புத்தகங்கள், விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை, பாடநூல் கழக கிடங்குகளில் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக அலுவலக கவுன்டர்களில், 15ம் தேதியில் இருந்து, இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு, கோபால் தெரிவித்தார்.
அட்டகாசமாக தயாராகுது அரசு பள்ளிகளுக்கான அட்லஸ்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, அக்டோபர் மாத இறுதியில், தகவல் குவியல்களுடன் கூடிய, 90 பக்கங்கள் கொண்ட இலவச, அட்லஸ் வினியோகிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, பாடநூல் கழக வட்டாரம் கூறியதாவது:மொத்தம், 90 பக்கங்கள் கொண்டதாக, அட்லஸ் இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கும் பயன்படும் வகையில், உயர்ந்த தரத்தில், அதிக தகவல்கள், புள்ளி விவரங்கள், அதிக படங்களை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.
அட்லஸ் தயாரிப்பதற்கு, டேராடூனில் உள்ள, இந்திய சர்வேயர் ஜெனரலிடம், அனுமதி பெற வேண்டும். கடந்த, 6ம் தேதி, அனுமதி கிடைத்து விட்டது. சென்னையைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடம், "அட்லஸ்' தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில், இந்த நிறுவனங்கள், அச்சடிப்பு பணியை துவங்கும். அக்டோபர் இறுதி வாரத்தில் இருந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும்.தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வது குறித்து, எந்த யோசனையும் இப்போது இல்லை. கோரிக்கைகள் வந்தால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: மறுதேர்வு எழுதுவோருக்கு திங்கள்முதல் ஹால் டிக்கெட்
ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றம் போன்ற தவறுகள் நடைபெற்ற 5 தேர்வு மையங்கள் இந்தமுறை மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல், புதிதாக 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 முதல் 600 தேர்வர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான 90 சதவீதப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன.அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேருக்கு, இன்றும், நாளையும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நான்கு இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 1,735 பேருக்கு இன்றும்; முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 713 பேருக்கு நாளையும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். 12ம் தேதிக்குள், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
வழக்கமாக, சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல்களை, சம்பந்தப்பட்ட மையங்களில் இருந்து, சென்னைக்கு கொண்டு வந்து, அதன்பின் இறுதிக்கட்டப் பணிகளை செய்து, பட்டியலை வெளியிடுவர்.
இந்த முறை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களில் இருந்தே, தேர்வர் குறித்த விவரங்களை, டி.ஆர்.பி., இணைய தளத்தில் உடனுக்குடன் சேர்க்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் பணி வழங்கப்படும்.
மாணவர்களை பிள்ளைகளாக பாவியுங்கள்: பள்ளிக்கல்வி அமைச்சர்
மாணவர்களை தங்களின் பிள்ளைகளாக ஆசிரியர்கள் எண்ண வேண்டும் என்று அமைச்சர் சிவபதி பேசினார். தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின், "ராதாகிருஷ்ணன் விருது" வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. துறை முதன்மைச் செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார்.
ஆசிரியர்களுக்கு, "ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி, அமைச்சர் சிவபதி பேசியதாவது: நானும் ஒரு ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அந்த வகையில் எனக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியை வழங்கிய, முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். விருது பெற்ற ஆசிரியர் அனைவருமே, வயது முதிர்ந்தவர்களாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர்களாக இருக்கிறீர்கள். உங்களது திறமையையும், உழைப்பையும் கவுரவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் மீது, முதல்வர் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். எப்போதும் இல்லாத அளவிற்கு, இத்துறையில், முதல்வர் மாபெரும் புரட்சியை செய்துள்ளார். மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், புத்தகம், நோட்டுகள், காலணி, பென்சில் என, அனைத்தையும் வழங்கியுள்ளார். கல்வியை மட்டும் போதிக்காமல், அதனுடன், வாழ்க்கையையும், வாழ்வியல் தத்துவத்தையும், ஆசிரியர் கற்றுத்தர வேண்டும்.
ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும், ஆசிரியருக்கு விடுக்கிறேன். மாணவ, மாணவியரை, தங்கள் பிள்ளைகளாக பாவிக்க வேண்டும். அதேபோல், ஆசிரியர் கண்டித்தாலும், அது நல்லதற்குத்தான் என, மாணவர் எண்ண வேண்டும். ஆசிரியரை, பெற்றோராக கருதி, மாணவ, மாணவியர் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.
பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்!
தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இணையதளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இந்த இணையத்தில் இடம் பெற்றுள்ளன. www.tnschools.gov.inஎன்பது அந்த இணையதளம்.
அனைத்து மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு" கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவருக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், விரைவில் இந்த கார்டு வழங்கப்படும்.
மாணவரின் புகைப்படத்துடன், அவர் பயிலும் பள்ளி குறித்த விவரங்கள், இந்த கார்டில் இருக்கும். இந்த கார்டை, "பார் கோடு ரீடர்" முறையிலோ அல்லது, கார்டில் உள்ள குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், மாணவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த, ஐ.டி., கார்டு, "டிசி"க்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பயிற்சி பெறும் ஆசிரியர், தன் அனுபவம் குறித்த தகவல்களை, இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அது குறித்து, மற்ற ஆசிரியர் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, இந்த இணைய தளம் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேவராஜன் கூறினார். மாநிலத்தின் வரைபடம், மக்கள் தொகை, மொத்தப் பள்ளிகள் எண்ணிக்கை, புதிய மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரம், மாநிலத்தின் எழுத்தறிவு நிலவரம் உட்பட, 30 தலைப்புகளில், ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
"பள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்குண்டு"
"போலீஸ், போக்குவரத்துத் துறை, பெற்றோர், பள்ளி நிர்வாகம், வாகன நிர்வாகிகள் என அனைவரும் தங்கள் வேலையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட்டால் விபத்துக்களை தடுக்கலாம் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா தெரிவித்தார்.
சென்னை, சேலையூரில் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் செல்லும்போது அதில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனம் மோதி பள்ளி மாணவர்கள் இறப்பு என்பது தினசரி கதையாகிவிட்டது. தினமும் காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மீண்டும் வீடு திரும்புவதை பெற்றோர் எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். முந்தைய விபத்துக்களை தொடர்ந்து, அம்பத்தூரில் பள்ளி மாணவி பெரியநாயகி, தண்ணீர் லாரி மோதி பலியான சம்பவம், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: விபத்துகளில் பள்ளி மாணவர்கள் இறப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது.
விபத்துக்களை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
பள்ளி நிர்வாகங்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களிடமும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி விடும்போது அவர்கள் பாதுகாப்பாக செல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், வேன் ஓட்டுனர்களுக்கும் பள்ளி மாணவர்களை ஏற்றுவது தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியுமா? இந்த விஷயத்தில் ஒருவர் மட்டும் சம்பந்தப்படவில்லை. பெற்றோர், குழந்தைகள், பள்ளி நிர்வாகம், பள்ளி வாகன ஓட்டுனர், போலீஸ், போக்குவரத்துத் துறை என அனைவரும் இந்த விஷயத்தில் கடமைப்பட்டவர்கள்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை உரிய போக்குவரத்து வாகனங்களில் அனுப்ப வேண்டும். பாதுகாப்பிற்கான அம்சங்கள் வாகனங்களில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக பாரம் ஏற்றும் ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றி விடக் கூடாது. மாணவர்களுக்கும் போக்குவரத்து விதிகள் அவற்றை கடைப்பிடிப்பது குறித்து பெற்றோர் விளக்க வேண்டும். பள்ளிகளும் இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.
பெற்றோர், வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள், பள்ளிகள் விதி மீறும் போது போலீசும், போக்குவரத்துத்துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெற்றோர், மாணவர்கள், பள்ளி நிர்வாகம், வாகன உரிமையாளர்கள், போலீசார், போக்குவரத்துத்துறை என அனைவரும் கடமையை உணர்ந்து, பொறுப்புடன் பணியாற்றினால் பாதுகாப்பை உறுதி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
துறை ரீதியான விசாரணை அடிப்படையில்ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது' - டில்லி சுப்ரீம் கோர்ட்
லஞ்ச புகாருக்கு ஆளான அரசு ஊழியரை, துறை ரீதியான விசாரணை, "குற்றமற்றவர்' என, கூறினாலும், அதனடிப்படையில், அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
குடி தண்ணீர் இணைப்பு தர, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, டில்லியைச் சேர்ந்த, குடிநீர் வாரிய பொறியாளர் ஒருவர் மீது, வழக்கு தொடரப்பட்டது; இந்த லஞ்ச புகார் தொடர்பாக, துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், அவர் குற்றமற்றவர் என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அந்தப் பொறியாளர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "லஞ்சம் வாங்கியதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, துறை ரீதியான விசாரணை நடந்தது. அதில், என் மீது, எந்த தவறும் இல்லை என, கூறப்பட்டுள்ளது. எனவே, என் மீதான லஞ்ச வழக்கை, ரத்து செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.
இந்த மனுவை, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான, "பெஞ்ச்' விசாரித்து தீர்ப்பளித்தது; தீர்ப்பில் கூறப்பட்ட தாவது:லஞ்ச புகாருக்கு ஆளான, அரசு ஊழியரை, துறை ரீதியான விசாரணை, "குற்றமற்றவர்' என, கூறினாலும், அதை காரணமாக வைத்து, ஊழல் வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க முடியாது; அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது. ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே, அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்வதா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏ.டி.எம்.,மில்( A.T.M ) பணத்தை எடுக்காவிட்டாலும் இனி உள்ளிழுக்காது - ரிசர்வ் வங்கி புது உத்தரவு
ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளை, கையில் எடுக்கத் தவறினால், அப்பணத்தை மீண்டும், இயந்திரம் உள்ளிழுத்துக் கொள்ளும் வசதியை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள், தேவையான தொகையை இயந்திரத்தில் பதிவு செய்ததை அடுத்து, சில வினாடிகளில், ரூபாய் நோட்டுகள் வெளிவரும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வாடிக்கையாளர்கள் அவற்றை கையில் எடுக்காவிட்டால், அந்த ரூபாய் நோட்டுகளை இயந்திரம் மீண்டும் உள்ளிழுத்துக் கொள்ளும்.
அனைத்து வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்களிலும் இந்த நடைமுறையே அமலில் இருந்தது. இந்நிலையில், பணத்தை இயந்திரம் இழுத்துக் கொண்டதாக ஏராளமான புகார்கள், வங்கிகளுக்கு வந்த வண்ணம் இருந்தன.இப்புகார்களை பரிசீலித்த, தேசிய பணப்பட்டுவாடா கமிஷன், ஏராளமானவை பொய் புகார்களாக இருப்பதை கண்டுபிடித்தன. இதையடுத்து, ஏ.டி.எம்., மையங்களில் இந்த வசதியை நீக்க உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து, வங்கி ஏ.டி.எம்.,களில், வாடிக்கையாளர்களால் எடுக்கப்படாத ரூபாய் நோட்டுகளை இயந்திரம் உள்ளிழுக்கும் வசதியை ரத்து செய்து, கடந்த வாரம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும் கடைபிடிக்கத் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டும் வருகின்றன.
தேர்வு மையத்திற்கு ஆன்-லைனில் வினாத்தாள்: டி.என்.பி.எஸ்.சி
வினாத்தாள் அவுட் ஆவதை தடுக்க டி.என்.பி.எஸ்.சி. புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வினாத்தாள்கள் ஆன்லைன் மூலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டது.
சென்னையில் நேற்று நடந்த நூலகர் பணிக்கான தேர்விற்கு வினாத்தாள்களை முன்கூட்டியே அச்சிட்டுக் கொடுக்காமல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக தேர்வு மையத்திற்கு வினாத்தாள் அனுப்பப்பட்டது.
கம்ப்யூட்டர் கிளவுட் டெக்னாலஜி என்ற அதிநவீன தொழில்நுட்பம் மூலம், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அனுப்பப்பட்ட வினாத்தாள், பின்னர் தேர்வு மையத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வர்களுக்கு விநியோகப்பட்டது.
நூலகர் தேர்வை தொடர்ந்து, இனி படிப்படியாக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக வினாத்தாள்கள் குறிப்பிட்ட அச்சகங்களில் ரகசியமாக அச்சடிக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்ட மற்றும் தாலுகா கருவூலங்கள் வழியாக தேர்வு மையங்களைச் சென்றடையும்.அவ்வாறு செல்லும்போது இடையில் வினாத்தாள் கட்டுகளை பிரித்துப் பார்க்கவும் அதன் மூலம் வினாத்தாள் அவுட் ஆகவும் அதிக அபாயம் உள்ளது.
தற்போதைய புதிய முறையில் ஆன்லைனில் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து நேரடியாக தேர்வு மையங்களுக்கு சென்றுவிடுவதால் கேள்வித்தாள் அவுட் ஆகும் பேச்சுக்கே இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பல்கலைக்கழகங்களில் இதுபோன்றுதான் ஆன்லைன் மூலமாக வினாத்தாள் அனுப்பப்பட்டு, பின்னர் பிரிண்ட் எடுத்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி குரூப்௨ தேர்வை நடத்தியது. தமிழகம் முழுவதும் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள்.
இந்த நிலையில், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆனது. இதையடுத்து, குரூப்௨ தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்வி உதவித்தொகை: செப்.7 வரை விண்ணப்பிக்கலாம்
தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வரும் நவம்பர் 18ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க, வரும் 7ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு
ஆதி திராவிட, பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்காக ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பு ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 2012- 13ம் ஆண்டு முதலே இதனை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் கல்வி உதவித்தொகை பெறும் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். மேலும், நரிக்குறவர் என்ற குருவிக்காரர் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியும் பணி தொடக்கம்
தமிழகம் முழுவதும், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறியும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்திற்கு ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாணவர்களின் கல்வித்திறன் விவரம் சேகரிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, கழிப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதான வசதிகள் என, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
தற்போது, தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிய, ஆய்வு நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், ஒன்றியத்திற்கு, ஐந்து தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூன்று; அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் நகராட்சி பள்ளி அல்லது ஆதிதிராவிட நலத்துறை பள்ளி தலா, ஒன்று என பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளிக்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், இரண்டு ஆசிரியர் பயிற்றுனர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு மாணவரிடமும், வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் ஆகியவற்றை சோதித்து, அவற்றுக்கு மதிப்பெண் போடுகின்றனர்.
மொழிப் பாடங்களில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; வாசிப்புத் திறனுக்கு, 40 மதிப்பெண்; கணிதப் பாடத்தில், எழுத்துத் திறனுக்கு, 60 மதிப்பெண்; மனக்கணக்கிற்கு, 40 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படுகிறது.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை கண்டறிவதற்காக, தற்போது ஆய்வு நடத்தப்படுகிறது. இப்பணி முடிந்ததும், ஆறாம் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வித்திறன் கண்டறியப்படும்.
ஆய்வின் போது கிடைக்கும் விவரங்கள் அனைத்தும், அரசுக்கு அனுப்பப்படும். ஆய்வு அடிப்படையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கு நிலம் கொடுத்தாலும் பெயர் சூட்ட முடியாது: ஐகோர்ட் உத்தரவு
பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: ஊரில் செயல்படும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு, 1966ல், தாத்தா அய்யணன் செட்டியார், இரண்டு ஏக்கர் நிலமும், நான் ஓர் ஏக்கர் நிலமும் கொடுத்தோம். ஆக, மூன்று ஏக்கர் நிலமும் எங்களுக்குச் சொந்தமானது. நிலம் கொடுத்த என் தாத்தா பெயரை பள்ளிக்குச் சூட்டாமல், கேட் கொடுத்தவர்கள் பெயர்களை போட்டுள்ளனர். தாத்தா பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி சந்துரு:
நிலம் கொடுத்ததற்கு மட்டுமே தாத்தா பெயர் வைக்க உரிமை கோர முடியாது, இப்பள்ளிக்குத் தனியார் பெயர் வைத்தால், தனியார் பள்ளி மாதிரியாகும். கட்டடங்கள் கட்டும் போது கல்வெட்டுகள் வைக்க மட்டுமே அரசாணை உள்ளது. நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்:
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here