ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்கம்


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 202 பேர் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


   தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஜூலை 12ம் தேதி நடந்த தகுதித் தேர்வில் 67,483 பேர் தேர்வெழுதினர். இதில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts