சமச்சீர்கல்வி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக அரசு காத்திருக்கிறது- ஜெயலலிதா :
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல்செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை முடித்து விட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
தீர்ப்பு நாளை அல்லது நாளை மறு நாள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதத்தின்போது சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குக் குறுக்கிட்டுப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா,
சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்தவுடன் அதை அமல்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்