பெயிலாக்கியதால் ஆத்திரம்: தலைமை ஆசிரியை சிறைபிடித்த மாணவிகள் - Dinamalar


பரீட்சையில் பெயிலாக்கியதால் கோபமடைந்த மாணவிகள், கோல்கட்டாவில் தலைமை ஆசிரியை 21 மணி நேரம் சிறைபிடித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவர்களின் தேர்வுத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்படும் என உறுதிமொழியாக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
கோல்கட்டாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிஷி ஆரோபிந்தோ பலிகா வித்யாலாயா பள்ளி தலைமை ஆசிரியை நேற்று மாலை 3 மணியளவில், தேர்வில் தோல்வியடைந்த 12ம் வகுப்பு மாணவிகள் 29 பேர், தலைமை ஆசிரியை ஸ்மிரிதி கோஷ் என்பவரை சிறைபிடித்தனர். ஆசிரியர்கள் ஒரு சிலர், தேர்வில் தேர்ச்சியாக்கப்படுவார்கள் என கூறினர். அந்த பள்ளியில் சுமார் தேர்வெழுதிய 105 மாணவிகளில் 76 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 29 பேர் 2 பாடங்களுக்கு மேல் பெயிலாகினர். தாங்கள் நன்றாக தேர்வெழுதிய போதும், பெயிலாக்கப்பட்டதாக மாணவிகள் கூறினர். இந்த போராட்டத்தில் மாணவிகளின் சில பெற்றோர்களும் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போதும், சமரசம் ஏற்படுத்த முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் நீடித்த இந்த போராட்டம், இன்று காலை 11 மணியளவில் மாநில கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின்னர் மாணவிகளின் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Popular Posts