புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி பணியமர்த்தப்பட்ட மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோர இயலாது

மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக 2009 முதல் மாநில பதிவு மூப்பு படி பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். 
மேற்காணும் தீர்பு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி இட மாறுதல் கோர மாட்டோம் என்ற நிபந்தனையை மனுதாரர்கள் ஏற்றதன் அடிப்படையில் அளிக்கப்பட்டதால், அவ்வுத்தரவின் படி 2009திற்கு பிறகு நியமிக்கப்படும்  இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டும், மாவட்டத்திற்குள்  மட்டுமே பணியிட மாறுதலும்  அளிக்கப்படுகிறது.


 தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் உள்ள TET தொடர்பான வழக்கின் காரணமாக  அவர்களுக்கு "weightage" முறைப்படி நியமிக்காமல், TET தேர்ச்சி பெற்றோரின் மாநில பதிவு மூப்புப்படியே நியமிக்கப்பட்டனர் . எனவே அவர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட பணி இட மறுத்தல் தற்போது பெற இயலாது.

Popular Posts