பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பில் சேரும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஏழ்மையினால், படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நடப்பு ஆண்டு முதல் கிராமப்புற ஆதிதிராவிட மாணவிகள் மட்டுமின்றி, ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தை வரவேற்ற, பழைய மாணவர் சங்கத்தினர்,தொகை உயர்த்தி வழங்கினால், மேலும் பயனுள்ளதாக இருக்கும் என அரசை வலியுறுத்தி உள்ளனர்.