எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பில், பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், மூன்று நாள், குறுவள மையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால், எந்த உறுப்பினர்களும் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறவில்லை. பலர் பயிற்சி வகுப்பிற்கு வரவே இல்லை.

பயிற்சி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் காலை சிற்றுண்டிக்கு 25 ரூபாயும், மதியம் சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், இரவு சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், காலை மற்றும் மாலையில் தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிக்காக 40 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. விதிகள் மீறல் மேலும், பயிற்சி வகுப்பில் ஜெனரேட்டர் வசதி, சாமியானா, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதே போல், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நடந்த வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பிற்கும் ஒரு குழந்தைக்கு, 100 ரூபாய் வீதம் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு, தலா 400 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்த இந்த குழந்தைகளை, அவரவர் வயதிற்கு தகுந்தாற்போல், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஆண்டு, இந்த குழந்தைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த இரு பயிற்சி முகாம்களுடைய விதிமுறையை பின்பற்றவில்லை. முறைகேடு புகார் இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில், 60 சதவீதம் பணத்தை அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூட்டணி அமைத்து முறைகேடு செய்தனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி முகாம் செலவினங்களை மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெயர்களில் வங்கியில் இணைப்பு கணக்கு உள்ளது.

ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கலெக்டர் மகேஷ்வரன், முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளதால், அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் தமிழுக்கு கெட்அவுட், ஆங்கிலத்துக்கு கட்அவுட்டா?: தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு

சென்னை: அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று தமிழக அறிஞர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்நிலையில் மாநில அரசு நடத்தும் துவக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியை புகுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் ஆகும்.
அனைத்து பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பது சான்றோர்களின் எண்ணம். அவர்களின் எண்ணத்தைப் புறக்கணிக்கும் வகையில் உள்ள இந்த திட்டத்தால் தமிழ் நெஞ்சங்கள் கொதித்துள்ளன. தமிழகத்தில் தாய்மொழியாம் தமிழை புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் தமிழக அரசின் இந்த திட்டத்தை கண்டிக்கிறோம்.
தமி்ழ் மொழியைக் காத்து, குழந்தைகளின் வாழ்வு வளம் பெற தமிழ் வழிக்கல்வியையே தொடர வேண்டும் என்றும், ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

RTE Training to AEEO/ Supervisor/ DIET Lecturer/ Nursery AEEO per District at Chennai


வேலைவாய்ப்பு புதிவை புதுப்பிக்க மறந்தவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை



2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். 18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

   1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Out of School Children - 7 STD English 1st Term Module


நிதியுதவி பள்ளி - 1990-91 & 1991-92 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பெற்றவர்களை முறையான நியமனம் செய்ய - தொடக்கக் கல்வி இயக்ககம் விவரம் கேட்பு


TRB published TN-TET 2012 - Paper 2 Answer Keys


2013-14 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க - விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் கடிதம்


S-ABL Student Achievement Chart Std 1 to 4


IGNOU Postponed B.Ed / M.Ed Entrance to 26.08.2012


தொடக்கக்கல்வி - RTEன்படி உபரி இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் மற்றும் 2012 - 13ஆம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல்


கல்வி தகவல் மேலாண்மை முறை மற்றும் ஸ்மார்ட் கார்ட் திட்டம் -பள்ளிகளில் பூர்த்தி செய்து தயார் நிலையில் வைக்க வேண்டிய படிவங்கள்


CCE Scholastic & Co - Scholastic Forms in Tamil & English Forms

மாற்றுதிறன் கொண்டுள்ள குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்துதல் சார்ந்த வழிமுறைகள்


பள்ளிச்செல்ல குழந்தைகளுக்கான சிறப்பு மைய கற்றல் கற்பித்தல் உபகரணப் பயிற்சி கையேடு - அறிவியல் - 6,7,8 வகுப்புகளுக்கு - முதல் பருவம்


IGNOU மற்றும் SSA இணைந்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு Teleconferencing மூலம் பல்வகை பயிற்சியளிக்க திட்டம்.


RMSA திட்டத்தின்கீழ் 2011-12 ஆம் கல்வியாண்டில் 710 நடு நிலை பள்ளிகள் உயர் நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தி வெளியிடப்பட்ட ஆணை பிழை திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது


அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (RMSA) - தனக்கான இணையதளம் உருவாக்குதல் - ஊழியர்களின் விவரம் கோருதல்


Pay Grievance Redressal Cell – Extension of the tenure of Pay Grievance Redressal Cell and Appointment of a Member – Orders – Issued.


பள்ளிக் கல்வி - அனைத்து வகை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுப்பதற்கு ஆலோசனை வழங்க வல்லுநர் குழு (Expert Committee) அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.


1999 உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுபடுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு


தமிழ் வகுப்புகளில் பிற மொழி கலப்பின்றி தூய தமிழிலேயே ஆசிரியர்களும் மாணவர்களும் பேச வேண்டும் - RMSA - மாநில திட்ட இயக்குனர் கடிதம்


TET - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த க. ரங்கநாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.
       இந்த மனு மீது நீதிபதி என். பால் வசந்தகுமார் புதன்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். மனு விவரம்: நான் கடந்த 2004-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப் படிப்பை முடித்துள்ளேன்.

    அதே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறேன். விரைவில் ஆசிரியராக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான அறிவிக்கையை கடந்த 2011-ம் ஆண்டு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டது. 

    இதன்படி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று மாநில தொடக்கக் கல்வித் துறையும், மாநில ஆசிரியர் தேர்வு வாரியமும் கூறியுள்ளன. ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்து, பயிற்சிக்குப் பின் தேர்வு எழுதி, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதியை நான் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஒரு தகுதித் தேர்வு எழுதச் சொல்வது சட்ட விரோதம் என்று அந்த மனுவில் ரங்கநாதன் கூறியுள்ளார்.

டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு



வரும் டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

  சிறந்த முறையில் தேர்வுக்குத் தயாரானவர்கள் மட்டுமே தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பரில் நடத்தப்படுகிறது.



இந்தத் தேர்வில் விண்ணப்பம் வழங்கல், சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் ஆன்-லைன் மூலமே நடைபெறும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். பணியில் சேர்ந்துள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் பட்டதாரிகளுக்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தேர்வர் இந்தத் தேர்வில் ஒருமுறை வெற்றிபெற்றால், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 23.08.10-ம் தேதியன்றோ அல்லது அதற்குப் பிறகோ பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்போதுள்ள நடைமுறையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தலாம். தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவதற்கு மட்டும் அரசாணை பெறப்பட்டுள்ளது.


ஆனால், தேசிய அளவில் இந்தத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோர், ஆசிரியர் பட்டதாரிகள் ஆகியோருக்கும் இந்தத் தேர்வு கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இப்போது முதல் முறை என்பதால், விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால், அதை சரிசெய்துகொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அடுத்தமுறை ஆன்-லைன் மூலம் விண்ணப்ப விநியோகம், சமர்ப்பிப்புப் பணிகள் நடைபெறும்.


அப்போது, விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதுவே தகுதிக் குறைவாகக் கருதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Contributory Pension Scheme (CPS) பென்ஷன் திட்டத்தில் ஒய்வு பெற்றவரின் கதி-நேற்று ஆசிரியர் ஆனால் இன்று 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை செய்கிறார் ! ஆசிரியர் இனமே விழித்திடு cps-ஐ மாற்ற உரிய சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள முனைந்திடு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தால் பாதிக்கப்பட்டவரின் கடிதத்தை படியுங்கள்


தொடக்கக் கல்வி - பள்ளி வயது குழந்தைகள் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் அடிப்படை அடைவுத் திறனை சோதித்து பட்டியிலிட்டு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவு - திருத்தப்பட்டது


வங்கிகளில் ரூ.10,000 வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு கட்டணம் ரூ.2.50 ஆக குறைப்பு!


வங்கிகளில் ரூ.10,000 வரையான ஆன் லைன் பணபரிமாற்றத்துக்கு(இடிரான்ஸ்பர்கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.2.50 ஆககுறைக்கப்பட்டுள்ளது.
    வங்கிகளில் பண பரிமாற்றங்களுக்கு காசோலைகள்பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் அதிகமாக உள்ளதால்,காசோலை பயன்பாட்டை முழுமையாக கைவிட வேண்டுமெனநிதியமைச்சராக பிரணாப் இருந்த போது கூறியிருந்தார்ஆன்லைன் பணபரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ்வங்கியிடம் கோரியிருந்தார்.

      தற்போது ஒரு வங்கி கணக்கில் இருந்துஇன்னொரு கணக்குக்குரூ.1 லட்சம் வரை ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்வதற்கு ரூ.5கட்டணம் வசூலிக்கப்படுகிறதுஇந்நிலையில்ரூ.10 ஆயிரம் வரை பணபரிமாற்றம் செய்வதற்கு ரூ.2.50 காசுகளாக குறைத்து ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது.

    இது பற்றிரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு வருமாறுகாசோலைசெயல்பாட்டை குறைத்துஆன்லைன் பண பரிமாற்றங்களைஅதிகரிப்பதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்எனவே,ரூ.10 ஆயிரம் வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு அதிகபட்சமாகரூ.2.50 மட்டுமே கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.இதன்மூலம்ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பணபரிமாற்றத்துக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுஇவ்வாறுரிசர்வ் வங்கி கூறியுள்ளதுஎனினும்ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரூ.1லட்சம் வரையான ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு ரூ.5ம்,  ரூ.1 லட்சம்முதல் ரூ.2 லட்சம் வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு அதிகபட்சம்ரூ.15ம் கட்டணமாக வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

RTI Letters Regarding PG Economics Promotion in Aided School


RTI letter Regarding Aided school BT promotion


அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 180 நாள் மகப்பேறு விடுப்பை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்களுக்கும் விரிவுப்படுத்த ஆலோசனை மேலும் மகப்பேறு சார்ந்த முக்கிய அரசாணைகள் 51 மற்றும் 61C


வரும் ஞாயிற்று கிழமை (15.07.2012) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை " கல்வி வளர்ச்சி நாளாக " அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் இளம் செஞ்சிலுவை சங்கம் தொடங்கி செயல்படுத்த - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


விருது - வீர தீர செயலுக்கான நடுவன் அரசின் உயரிய விருதான அசோக சக்ரா விருதுகள் 2012 க்கான விண்ணபங்கள அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்


தொடக்கக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது 2011 - 2012 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து கருத்துருக்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்


TET EXAM Paper-I & II Answers


ஏற்கனவே B.Lit தமிழ் பட்டப்படிப்பு முடித்த இடைநிலை ஆசிரியர் ஒருவர் ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கால அட்டவணையில் இளங்கலை அறிவியல் (B.Sc Maths) மற்றும் இளங்கலை கல்வியியல் (B.Ed) முடித்தாலும் பதவி உயர்விற்கு தகுதி உண்டு - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்


Independence Day Celebration 15th August 2012 - Govt of India Arrangement Regarding Letter


1 முதல் 4 வகுப்பு வரை எளிய செயல் வழிக் கற்றல் (S-ABL) அட்டைகளையே பின்பற்ற வேண்டும் , அச்சடிக்கும் பணி தாமதத்தால் முதல் பருவத்திற்கு (1st Term) பள்ளிகளுக்கு DVD மூலம் நகல் (Xerox) எடுத்து வழங்கி கல்வி அதிகாரிகள் கண்காணிக்க மாநில திட்ட இயக்குனர் கடிதம்


SSA அல்லது RMSA நிதியை பயன்படுத்தி கல்விவளர்ச்சி விழாவினை கொண்டாட இயக்குனர் உத்தரவு


மாற்றத்தை விரும்பும் பள்ளியா உங்களுடையது ? (Design For Change) மாணவர்களை சமூக பணியில் ஈடுபடுத்தி பல் திறனை மேம்படுத்த விருப்பமுள்ள பள்ளிகளிடம் 14.07.2012 CRC ல் விண்ணப்பத்தை பெற மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


Pupil Teacher Ratio Fixation - அரசாணை எண். 231 பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2010


தொடக்கக்கல்வி - 2012 - 2013 ஆம் ஆண்டுக்குரிய உபரியாக உள்ள பணியிடங்கள் - பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கால அட்டவணை வெளியிட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


தொடக்கப் பள்ளித் துறையில் 01.09.2011 அன்று உள்ளபடி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டாயக் கல்வி சட்டத்தின் மாணவர் ஆசிரியர் விகிதப்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை நிரவ அரசாணை வெளியீடு


அனைத்து பள்ளிகள் உரிய நேரத்தில் தொடங்கவும், ஆசிரியர் மாணவர்கள் சுத்தமாகவும், பள்ளி வளகங்கத்தை சுத்தமாக வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு


அரசாணை எண். 231 ன் படி 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதத்தின் படி ஆசிரியர் பணியிடங்கள் விவரம்


முதுகலை வேதியியல் ஆசிரியர் பணிக்கு எம்.எஸ்.சி (வேதியியல்) படிப்புக்கு இணையான பிற படிப்புகள்


தொடக்கக்கல்வி - 1 முதல் 8 வகுப்பு வரை கற்றல் திறனை மேம்படுத்த இயக்குநரின் வழிகாட்டுதல் செயல்முறைகள் மேலும் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் அடிப்படை அடைவுத் திறனை சோதித்து பட்டியிலிட்டு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவு


TET - Child development and pedagogy as per guidelines given by NCTE and TRB


தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் 01.09.2011 மற்றும் 01.07.2012 ல் உள்ளவாறு மாணவர்கள் பதிவு விவரங்களை தொடக்கக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார்


CCE Implementation of Yoga & Meditation


வேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை - தினமலர் செய்தி - ஆனால் இத்தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை


விருதுநகர்: கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், கல்வி வளர்ச்சி தினத்தை, பள்ளி வேலை நாளில் கொண்டாட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

      காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி , கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஜூலை 14 அல்லது ஜூலை 16 ஆகிய இரு தினங்களில், ஏதாவது ஒரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    கல்வி வளர்ச்சி நாளில், மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் குறித்து, அதன் போட்டோக்களுடன் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க, தலைமையாசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசாணை வெளியீடு , பள்ளிகளுக்கு ரூபாய் 250 ஒதுக்கீடு மேலும் 2012 முதல் சிறந்த பள்ளிக்கான " பரிசளிப்பு திட்டம்" (Award scheme) அறிமுகம்!


ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான, புதிய அடையாள அட்டையை, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், அரசு ஊழியர்களுக்கு வழங்க, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    நான்கு ஆண்டு காலத்திற்கு...தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான, காப்பீடு வழங்கும், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தேசிய அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டது. தொடர்ந்து, "தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்' நிறுவனம், வரும் ஜூலை முதல் தேதி முதல், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக, தேர்வு செய்யப்பட்டது.
  
    புதிய அரசாணை: ஏற்கனவே, அமலில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை 11 முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு, கடந்த மாதம், 10ம் தேதியுடன், முடிவடைந்துள்ளது. புதிய திட்டம், வரும் ஜூலை 1ம் தேதி முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக, ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், பயன் பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக, புதிய அரசாணை ஒன்றை நிதித்துறை பிறப்பித்துள்ளது.

     புதிய நடைமுறைகள்: இதன் படி, பழைய காப்பீட்டு திட்டத்தில் இருப்பவர்களும், சமீபத்தில் அரசு பணியில் சேர்ந்தவர்களும், புதிய திட்டத்தின் கீழ் இணைவதற்கான, விண்ணப்பங்கள் பெறுதல், பூர்த்தி செய்தல், புதிய அட்டை வழங்குதல் தொடர்பான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, அரசு அலுவலகங்களில் உள்ள, சம்பளக் கணக்கு அதிகாரிகளுக்கு, அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை அளித்து, பூர்த்தி செய்து, பெற்று, மீண்டும், காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

    20ம் தேதிக்குள் விண்ணப்பம்: இதில், ஏற்கனவே பயன்பெறும் ஊழியர்கள், புதியதாக சேர்ந்துள்ள ஊழியர்கள், என அனைவரும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ,வரும் 20ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும். அந்த விண்ணப்பங்களை, இம்மாதம் 31ம் தேதிக்குள், காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

     விண்ணப்பத்தை பெறும் காப்பீட்டு நிறுவனம், ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு வேளை புதிய அடையாள அட்டையை தொலைத்து விட்டால், 50 ரூபாய் செலவில், புதிய அட்டையை, ஊழியருக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், காப்பீடு தொடர்பான தகவல்கள், அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் குறித்த விவரங்களை, www.tn.gov.in/karuvoolamஎன்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - அரசு / நகராட்சி மேல்நிலப்பளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக வழங்க கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு


குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரை நீதிமன்றம் விடுவித்தாலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் - அரசு விளக்கக் கடிதம் வெளியீடு


SCERT - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான RTE 2009 சட்டம் சார்பாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது


New Health Insurance Scheme - புதிய மருத்துவ காப்பீடு திட்டம் - மருத்துவ சிகிச்சைகள், மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் விவரம் மேலும் மாத பிடித்தம் ரூபாய். 150 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் திருத்தும் வெளியிட்டுள்ளார்


S-ABL Class Wise Cards - New materials

Tamil Nadu Commission for Protection of Child Rights : Advt for recruitment

https://www.box.com/s/93e4c46576acfee2cc44
https://www.box.com/s/403cfe819eef19e2daa4

அனைத்து மாவட்ட DIET விவுரையாளர்களும் 09.07.2012 முதல் 13.07.2012 வரை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் CCE-யை ஆய்வு செய்கிறார்கள்


பகுதி நேர ஆசிரியர்களின் விவரங்கள் - மாநில திட்ட இயக்ககம் மூலம் சேகரிப்பு


Elementary Dept General Transfer/ Deployment Counselling Schedule


தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு


     தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.

        இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. 
        அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் காலிப் பணியிடம்/ கூடதல் தேவையுள்ள பணியிடம் / உபரி பணியிடம் ஆகியவற்றை 01.07.2012 நிலவரப்படி தொடக்கக்கல்வி அலுவலர் கோரியுள்ளார் மேலும் உபரி பணியிடம் உள்ள பள்ளியின் இளையவரையே (Junior Most) குறிப்பிட ஆணை


எளிய செயல் வழிக்கற்றல் (Simplified Activity Based Learning- SABL) 1 முதல் 4 வகுப்பிற்கான 2012 - 13 அட்டைகள், குழு அட்டைகள், ஏணிகள் மற்றும் விளக்கங்கள் (SABL Materials 2012-13)


1 முதல் 8 வகுப்பிற்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைக்கான SCERT-ன் 2012-13 வகுப்புவாரியான பாடவாரியான பாட செயல் திட்டம் (CCE STD 1 to 8 Subject & Class wise Manual)


9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான 2012-13 கல்வி ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் புதிய பாடத்திட்டம் ( Std 9 & 10 New Syllabus)


உங்களுக்கு SMS வரவில்லையா? - உங்கள் கவனத்திற்கு!... Alternate SMS Channel....


நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆகும். உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனே

ACTV

என்று type செய்து 

என்ற 98 70 80 70 70  எண்ணிற்கு SMS செய்யுங்கள். 

       இந்த SMS ஐ அனுப்பிய உடன் தங்களுக்கு "Your Account is Successfully Activated" என்று Reply SMS உங்கள் Mobile-க்கு வரும்,  தாமதமின்றி மீண்டும்   தாங்கள் செய்ய வேண்டியது:

INSPIRE Award 2012-13 Application & Instructions


முப்பருவ கல்விமுறை பயிற்சி: ஆப்சென்ட் ஆசிரியர் விவரம் சேகரிப்பு


    முப்பருவக் கல்வி முறை பயிற்சி வகுப்புகளில், "ஆப்சென்ட்" ஆன ஆசிரியர்கள் குறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், விவரம் சேகரித்து வருகின்றனர். இதனால், "ஆப்சென்ட்" ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
    தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டில் முப்பருவக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, கற்றலின் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்புகள், ஆசிரியர்களுக்கு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல கட்டங்களாக நடத்தப்படுகின்றன.
     கடந்த வாரம் (ஜூலை 23) சனிக்கிழமை குறுவள மையம் அளவில், 6, 7, 8ம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பில், மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர் "ஆப்சென்ட்" ஆகினர். இதனால், அதிர்ச்சியுற்ற எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், "ஆப்சென்ட்" தகவலை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
  பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள், முப்பருவக் கல்வி முறையை, மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் கற்பிக்க முடியும்? "ஆப்சென்ட்" ஆனவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

     இதுகுறித்து, மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் முகமது அஸ்லம், முப்பருவக் கல்வி முறையில், கற்றலில் தொடர் மதிப்பீட்டுப் பயிற்சி வகுப்பு, மாநில அளவில் நடக்கின்றன. இதில், ஆசிரியர்கள் பலர், "ஆப்சென்ட்" ஆகியுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மற்றும் "ஆப்சென்ட்" ஆசிரியர்கள் விவரங்கள் சேகரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆசிரியர்கள் நாகரிகமான உடைகளையே அணிய வேண்டும்-பள்ளி கல்வி இயக்குனர் அறிவுரை


பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாத தற்காலிக 4748 பணியிடங்களுக்கு 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு


பள்ளிகளில் உள்ள 1869 ECO - Club-களை மேம்படுத்த 2012-13 ஆம் கல்வி ஆண்டிற்கு ரூபாய்.46.73 லட்சம் ஒதுக்கி அரசாணை 48 வெளியீடு


பள்ளிக்கல்வி - அனைவருக்கும் கல்வி திட்டம் - மலைப் பிரதேசம் மற்றும் தொலைத்தூர குடியிருப்புகளில் உள்ள மாணவ / மாணவிகள் கல்வி கற்க ஏதுவாக போக்குவரத்து வசதியினை ஏற்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது


7979 பட்டதாரி ஆசிரியர் , 32 முதுகலை ஆசிரியர் மற்றும் 6239 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டு பணிக்காலம் நீட்டித்து அரசாணை 197, 199 & 200 வெளியீடு


2012-2013 பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பெற்றோர் 29.06.2012 பிற்பகலே விடுவிக்கப்பட்டு அன்றே புதிய பணியிடத்தில் சேர - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


ஜூலை மாத தொடக்க மற்றும் உயர்தொடக்க பள்ளிகளுக்கான வட்டார வளமைய பயிற்சி (CRC) 14.07.2012 அன்று கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் எனும் தலைப்பில் நடைபெறுகிறது


இரட்டை பட்டம் எனும் ( Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு கலந்தாய்வில் பதவியுயர்வு வழங்க உயர்நீதி மன்றம் இடைக்கால தடை - அதை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் (CPS) பிடித்தம் தொடர்பான விளக்கக் கடிதம் அரசு வெளியீடு


10+2+3 மற்றும் 11+1+3 பட்டதாரி பதவி உயர்வுக்கு தகுதி உண்டு ஆனால் பட்டம் படித்தப்பின் பன்னிரெண்டாம் (+2) வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு இல்லை - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


TET தேர்வு காரணமாக 12.07.2012 அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அரசாணை வெளியீடு


28.06.12 மற்றும் 29.06.12 அன்று நடைபெற உள்ள அரசு / நகராட்சி உயர் நிலை பள்ளி தலைமை பதவி உயர்வு மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பனி மாறுதல் கலந்தாய்வு-இல் கலந்து கொள்ள வேண்டிய தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது


RTE 2009 PowerPoint & Fill Up Instruction Format form


அங்கன்வாடி பள்ளிகளில் ஓடி விளையாடு பாப்பா பாடத்திட்டம்!


ஆதி திராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை



பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பில் சேரும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஏழ்மையினால், படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நடப்பு ஆண்டு முதல் கிராமப்புற ஆதிதிராவிட மாணவிகள் மட்டுமின்றி, ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தை வரவேற்ற, பழைய மாணவர் சங்கத்தினர்,தொகை உயர்த்தி வழங்கினால், மேலும் பயனுள்ளதாக இருக்கும் என அரசை வலியுறுத்தி உள்ளனர்.

தொடக்கக் கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு - மேற்பார்வை செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இணை இயக்குநர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவு


தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2012 - 13 பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதி மற்றும் கலந்தாய்வு நடத்தும் மையங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு


9 கள்ளர் பள்ளிகளை தரம் உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு


தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்


அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.
வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான/ விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுதும் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் அரசாணை 165 ன் மீது உரிய நடவடிக்கை எடுக்க - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் - சென்னை 6 ந. க . எண் : 14333/ ஜே1/2012 , நாள் : 20.06.2012 மேற்காணும் அரசாணையின் மீது தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கடிதம்


முப்பருவமுறை ( Trimester) மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE) 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணை 143 - 19.11.2011க்கு திருத்த ஆணை 140 வெளியீடு


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்


திரு.தாஸ் அவர்கள், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கென தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது.அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர்.
பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக் கணக்கை, அவர்களால் சரிபார்க்க முடியவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை கண்காணிக்க, முறையான நிர்வாக நடைமுறை இல்லை. இந்தக் குழப்பங்களால், பி.எப்., நிதியில் சிலர் முறைகேடு செய்கின்றனர். தற்போது, பி.எப்., கணக்கை அரசு தகவல் தொகுப்பு விவர மையம் நிர்வகிக்கிறது. இங்கு பணியாற்றும் சிலர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பி.எப்., நிதி, தணிக்கைக்கு உட்பட்டது. 85 ஆயிரம் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கில் வரும் பணத்தை நிர்வகிக்க, தணிக்கை செய்ய, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் போல், எந்த தனிப்பட்ட அலுவலகமும் இல்லை. இதனால், சில நகரங்களில் பி.எப்., நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 210 கோடி ரூபாய், பி.எப்., மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.

மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்ட அறிவுரைகள் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை


Popular Posts