தொடக்கநிலை / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 19.01.2013 அன்று "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் குறுவளமைய பயிற்சி நடத்துதல், கருத்தாளர்களுக்கான பயிற்சி தேதிகள் மற்றும் பயிற்சிகளை திட்டமிட்டு நடத்த SCERT உத்தரவு

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பதவியுயர்வு வழங்க தேர்ந்தோர் பட்டியல் 15.03.1999, 15.03.2000 மற்றும் 15.03.2001 நாளின்படி வெளியிடப்பட்டுள்ள பட்டியல் - முன்னுரிமையினை சரிசெய்தல் விவரங்கள் கோரி பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு மற்றும் முன்னுரிமைப்பட்டியல்

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான 05.01.2013 அன்று நடைபெறும் குறுவள மைய பயிற்சியான "கலை மற்றும் கைவினைப் பொருட்கள்" பயிற்சி கையேடு

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) -2013 - Restricted Holidays 2013

Click Here


Utmost care has been taken in preparing the list and in publishing it. Incase of any errors in the List, pls comment below with references

12ஆம் பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறும் SC/ST/ மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிட இன 1000 மாணவர்களுக்கு மற்றும் 1000 மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது, இவ்வாண்டு (2012-13) முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ரூபாய்.3000 வழங்க அரசு செய்தி வெளியீடு

தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அடுத்த குறுவள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று கலையும் கைவண்ணப் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் நடைபெறுகிறது

"National Means Cum Merits Scholarship" தேர்விற்கான அனுமதி சீட்டு 27.12.2012 முதல் விண்ணபித்த மாணவர்கள் அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே பெற்று கொள்ள இயக்குநர் உத்தரவு

பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு ஆகியவற்றை அனைத்து அரசு / தனியார் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2013 ஜனவரி மாதத்திற்குள் நடத்தி அறிக்கை சமர்பிக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

பல்வேறு படிப்பு படித்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்தாலும், அவர்கள் பணியில் சேர்ந்த்து பின் தகுதியுள்ள விடுப்பு எடுத்து படிப்பை தொடரலாம், படிப்பை முடித்து மீண்டும் பணியில் சேரலாம் - பழைய அரசாணை

Click Here

(இது தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று பணியில் சேர்ந்துள்ள புதிய ஆசிரியர்கள் தாங்கள் படித்து வந்த கல்வியை தொடர பொருந்தும் என அறியப்படுகிறது)

சமச்சீர் கல்வி முறையில் 2013 பொதுத் தேர்வுகள் எழுதும் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள் அமைத்தல் சார்பாக அறிவுரைகள் வழங்கி தேர்வுத் துறை இயக்குனர் உத்தரவு.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு


கடந்த மே 2012ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை.
இவர்கள் ஏற்கனவே பயின்ற ஒரு இளங்கலை பட்டத்தின் அடிப்படையில் வேறொரு ஒரு இளங்கலை பட்டத்தை முடித்து அதன் அடிப்படையில் முதுகலை பட்டத்தை முடித்தவர்கள். முதல் மற்றும் இரண்டாம் தேர்ச்சிப்பட்டியலில்  இவர்களை "SELECTED" என்று குறிப்பிட்ட போதும் கடைசி தேர்ச்சி பட்டியலில் "NOT SELECTED" என தேர்விக்கப்பட்டது, இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது, "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.


இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 5 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 21.12.2012 அன்று  இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் போட்டித்தேர்விற்கான விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும்  உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும்,  100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும் "TAMILNADU HIGHER EDUCATION COUNSEL" இரட்டை பட்டங்கள் பணிநியமத்திற்கு தகுதியுள்ளது என சான்றளித்ததற்கான சான்றுகளையும் சமர்பித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 5 ஆசிரியர்களுக்கும் 5 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர் நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இடைப்பட்ட காலத்தில் இணையவழி கலந்தாய்வு  நடைபெற்றால் இவர்களை பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும். இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன்  உத்தரவிட்டார்.

இரட்டை பட்டங்கள் பணிநியமனத்திற்கோ பதவியுயர்வுக்கோ செல்லாது என 14.08.2012 அன்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தது, தீர்ப்பிற்கு முன் மற்றும் பின் பள்ளிகல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மற்றும் அண்ணாமலைப் பல்கலைகழத்தால் வெளியிடப்பட்ட கடிதங்கள் மற்றும் தீர்ப்பு நகல்

2012-13 மூன்றாம் பருவ பாடநூல்கள் 26.12.2012 முதல் பள்ளிகளுக்கு வழங்கவும், தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகள் 22 வட்டாரங்களில் உள்ள விற்பனை மையங்களில் விடுமுறை நாட்களிலும் பெற்று கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தர

26.07.2011 அன்று துவங்கப்பட்ட நமது வெப்சைட்க்கு ஆதரவு தரும் தங்களுக்கு நன்றி !


PFRDA மசோதாவை கைவிட கோரியும் , ஒய்வூதிய நிதியில் 49% அந்நிய நேரடி முதலீட்டு முடிவை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒய்வூதிய நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை திரும்ப பெற வலியுறுத்தியும், CPS ஐ ரத்து செய்திட கோரியும் தொழிற்சங்கங்கள் நடத்திய டிச-20 இல் பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் இயக்க சார்பில் பங்கேற்ற விருதுநகர் TNPTF மாவட்ட செயலாளர் திரு.ஸ்ரீ.சங்கர்கணேஷ்..


இனிய கிறித்துமஸ் நல் வாழ்த்துக்கள் !

2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஆதி திராவிடர் நலப்பள்ளிககளை "அனைவருக்கும் கல்வித்திட்டம்" மூலமாக தொடங்க மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிளைப்பள்ளிகளாக தரம் உயர்த்த கருத்துருக்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

அரசு நிதியுதவி பள்ளிகளில் 2012-13 ஆம் கல்வியாண்டிற்கான இறுதி பணியிட நிர்ணயம் மாவட்ட வாரியாக 2/3 நாட்கள் 24.12.2012 முதல் 28.01.2013 வரை நடைபெறுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்ககத்தின் தேதிகளும் உத்தரவும்

தொடக்க/ நடுநிலை/ மேல்நிலை/ உயர்நிலை நிதியுதவிப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெறாமல் 23.08.2010க்கு பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கோரி பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு

மாற்று திறனாளி அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி மாதம் ரூபாய் 1000 கோரும் அரசாணை , கருத்துரு, இயக்குனர் செயல்முறை மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,000 பணியிடங்கள் காலி- Dinamalar


மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 7,000 பணியிடங்கள், காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும், 14 வகையான இலவச திட்டங்கள், உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படும் நிலையில், போதிய பணியாளர்கள் இல்லாததால், நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், சிக்கலான நிலை நீடித்து வருகிறது. 

தமிழகத்தில், 55 ஆயிரத்து, 667 பள்ளிகள் உள்ளன. இதில், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பிரிவுகளில், 8,266 பள்ளிகள், அரசு நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 33 லட்சம் மாணவ, மாணவியர், படிக்கின்றனர்; 95 ஆயிரம் ஆசிரியர், பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே, பல்வேறு இலவச திட்டங்கள் வழங்கப்பட்டுவந்த நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்குவந்தபின், இலவச நோட்டுகள், கலர் பென்சில், பேக், கணித உபகரணப் பெட்டி, காலணி என, 14 வகையான திட்டங்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்படுகின்றன. 

அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் என, பல வகையான பணியிடங்கள், உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன. ஆனால், உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு ஓரளவு அக்கறை செலுத்துகிறது. ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதில், சுத்தமாக கவனம் செலுத்துவதில்லை என, குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

ஒரு பள்ளியில், நான்கு, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இருந்தால், இரு பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களை அனுமதிக்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, தற்போது, காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமாவது நிரப்ப, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும், அத்தனை திட்டங்களையும், உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். ஆனால், நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், அதிகளவில், காலியாக உள்ளன.

இலவச பொருட்கள் குறித்த கணக்கு விவரங்களை பராமரித்தல், எத்தனை மாணவர்களுக்கு, பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, இன்னும் எத்தனை பேருக்கு வழங்க வேண்டும், பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கணக்கு பராமரிப்புகளை, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தான் கவனிப்பர். இந்த பணியாளர்கள் இல்லாததால், அந்தப் பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறோம். 

இதனால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வருகின்றன. மேலும், ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவதும், பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு பள்ளியிலும், காலியாக இருந்த இடங்கள், முழுமையான அளவில் நிரப்பப்படவில்லை.

அதனால், ஏற்கனவே உள்ள காலி பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் என, 5,000 முதல், 7,000 பணியிடங்கள் வரை, காலியாக இருக்கின்றன. இந்த பணியிடங்களை நிரப்பாவிட்டால், நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில், வரும் கல்வியாண்டில் பெரும் சிக்கல் ஏற்படும். 

புதிய பணியிடங்களுக்கு அனுமதி வழங்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியிடங்களை மட்டும் நிரப்ப, அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

அலுவலகத்தில் பச்சை, நீலம், கருநீலம், கருப்பு மைகள் மற்றும் மை ஊற்று பேனா / பந்துமுனை (Gel) / கூழ்ம மை பேனா ( Ball Point) அரசு பயன்படுத்தல் மற்றும் சான்றொப்பம் (Attestation) இடுதலுக்கு பச்சை நிறம் பயன்படுத்துதல் மற்றும் சான்றொப்பம் இட தகுதியான அலுவலர்கள் குறித்த தமிழக அரசின் வழிகாட்டுதல்- அரசாணைகள்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன தமிழ் மொழி (ம) மொழியியல் புலம் சார்பாக Dec 2012, 3நாட்கள் பயிலரங்கத்திற்கு 25 ஆசிரியர்களை தெரிவு செய்து அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

2012-13 மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் ஆகியவற்றை விடுமுறையை அடுத்து பள்ளி தொடங்கும் நாளன்றே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

புதிய காப்பீடுத் திட்டத்தில் (NHIS) தமிழக அரசின் அரசாணைப் படி படிவங்கள், தகுதியான சிகிச்சைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், மாவட்ட வாரியாக நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் தொலைபேசி எண்கள்

இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து பிரிவை கண்காணிக்கும் கண்காணிப்பாளர்களுக்கான இணையவழி கலந்தாய்வு 21.12.2012 அன்று பிற்பகல் 03.00 நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

டிசம்பர் 22 தேசிய கணித தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசாக- இராமனுஜரின் எண்ணான 1729 நழுவங்களில் (Slides) சீனிவாச இராமானுஜன் வாழ்க்கை வரலாறு

Click Here

இத்தகைய முயற்சி ஈடுபட்ட  திரு. நாகேந்திரன் ஆசிரியருக்கு www.tnptfvirudhunagar.blogspot.comன்  பாராட்டுக்கள்கணிதத்தில் மாணவர்களை ஆர்வப்படுத்த இந்த சமர்பிப்பு  நிச்சயம் உதவும்.

SSA TamilNadu - District Wise - SSA- Open New Primary School & Upgrade the existing Primary School to Middle School Numbers

20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி


புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது.

டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18 ஆயிரம் பேர், முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பணியில் சேர்ந்து விட்டதாக, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், இன்னும், பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. 

ஓரிரு நாளில், "ஆன்-லைன்" வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, தேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், ஜனவரியில், ஐந்து நாள் பயிற்சியை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. கல்லூரி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால், பாட சம்பந்தமாக, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முப்பருவ கல்விமுறை, தொடர் மதிப்பீட்டு முறை, மாணவர்களுக்கான, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து, இரு நாட்களுக்கும், பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கும், ஐந்து நாள், பயிற்சி அளிக்கப்படும்.

ANNA பல்கலைக்கழகத்தில் 05.01.2013 அன்று நடைபெறும் "Q Quest"ல் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் கடிதம்

கல்வித்தரத்தினை மேம்படுத்த 1 முதல் 8 வகுப்பு வரை கணினி வழிக்கல்வியினை செயல்படுத்த பாட சம்பந்தமான E-Content தயாரிக்க பள்ளி/கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் கணினி ஆர்முள்ளவர்களுக்கு போட்டிகளை நடத்த வழிமுறைகள் வெளியிட்டு SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

2013-14 ஆம் கல்வியாண்டிற்கான அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலம் புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்குதல் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிளைப்பள்ளிகளாக தரம் உயர்த்த கருத்துருக்களை உரிய படிவங்களில் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

Click Here

Form

கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்: முதல்வர் அறிவுறுத்தல்


வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி, வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்கும், மூன்று நாள் மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், துறை செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாடு நடந்தது.

நேற்று, கலெக்டர்கள், துறை செயலர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: வளர்ச்சித் திட்டங்களின் மூலம், தமிழகத்தையும் மக்களையும் வளம் பெறச் செய்வது தான், இம்மாநாட்டின் நோக்கம். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்களை, இதில் விவாதிக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைப் பிரிவு மற்றும் கல்வி, சுகாதரம், கட்டமைப்பு வளர்ச்சியில் பலமான அடித்தளம் அமைத்தல் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும்.

இந்த நோக்கம் பயன்பாட்டிற்கு வந்தால், அரசின் கொள்கை திட்டங்கள் யாவும், அந்தந்த களங்களில், நடைமுறைக்கு வரும் என நம்புகிறேன். மாவட்ட கலெக்டர்கள் தங்கள் அதிகாரங்கள் மூலம், இதற்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, இன்று, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட எஸ். பி.,க்கள் மாநாடு நடக்கிறது.இன்று மாலை, 5:00 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.

SSA - தமிழ்நாடு COHORT 2012 புள்ளிவிவர படிவம் செயல்படுத்துதல் மற்றும் நோக்கம் குறித்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

பெயிலாக்கியதால் ஆத்திரம்: தலைமை ஆசிரியை சிறைபிடித்த மாணவிகள் - Dinamalar


பரீட்சையில் பெயிலாக்கியதால் கோபமடைந்த மாணவிகள், கோல்கட்டாவில் தலைமை ஆசிரியை 21 மணி நேரம் சிறைபிடித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாணவர்களின் தேர்வுத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்படும் என உறுதிமொழியாக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
கோல்கட்டாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிஷி ஆரோபிந்தோ பலிகா வித்யாலாயா பள்ளி தலைமை ஆசிரியை நேற்று மாலை 3 மணியளவில், தேர்வில் தோல்வியடைந்த 12ம் வகுப்பு மாணவிகள் 29 பேர், தலைமை ஆசிரியை ஸ்மிரிதி கோஷ் என்பவரை சிறைபிடித்தனர். ஆசிரியர்கள் ஒரு சிலர், தேர்வில் தேர்ச்சியாக்கப்படுவார்கள் என கூறினர். அந்த பள்ளியில் சுமார் தேர்வெழுதிய 105 மாணவிகளில் 76 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 29 பேர் 2 பாடங்களுக்கு மேல் பெயிலாகினர். தாங்கள் நன்றாக தேர்வெழுதிய போதும், பெயிலாக்கப்பட்டதாக மாணவிகள் கூறினர். இந்த போராட்டத்தில் மாணவிகளின் சில பெற்றோர்களும் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போதும், சமரசம் ஏற்படுத்த முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் நீடித்த இந்த போராட்டம், இன்று காலை 11 மணியளவில் மாநில கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின்னர் மாணவிகளின் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - R T I 2005.. அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ? எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, ( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email :sic@tn.nic.inhttp://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :- 

Shri Satyananda Mishra Chief Information Commissioner Room No.306, II Floor August Kranti Bhavan Bhikaji Cama Place New Delhi - 110 066. Phone:- 011 - 26717355 E-mail :- s.mishra@nic.inhttp://cic.gov.in/

குறிப்பு :- மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம். சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது. 

தகுதி தேர்வில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எம்.பில் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 

பயனற்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை காரணம் காட்டி, ஊதியம் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண் டும்.

அரையாண்டு தேர்வு களை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம்  நடந்த கவுன்சலிங்கில் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதாக கூறி, சில ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தற்போது அதே பணியிடங்களில் மீண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட இணை செயலாளர் லூயி ஜான்பிரிட்டோ, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கலைத்தங்கம், கண்ணன், ரிஷிகேசவன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

மாணவர்களுக்கு விலையில்லா Geometry பாக்ஸ் வழங்குவது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகள் அளித்து தொடக்கக்கல்வித்துறை கடிதம்

6,7 மற்றும் 8ஆம் வகுப்புள்ள அனைத்து பள்ளிகளிலும் "ஆரோக்கிய சங்கங்களை" அமைக்க ரூபாய் 1000 ஒதுக்கியும் "தொற்றா வியாதிகள் " (NCD) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட / மாநில அளவில் போட்டிகள் வைத்தும் பரிசுகள் அளிக்க SSA மற்றும் TNHSP இணைந்து திட்டம்

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) - பலனற்ற ஓய்வூதிய திட்டத்தை என்ன செய்யப் போகிறோம்? 20.12.2012 அன்று நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து TNPTF மாநில பொது செயலாளர் கடிதம்

13.12.2012 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் 92 இலட்சம் மாணவர்களின் நலனுக்காக 20920 ஆசிரியர்களின் நியமன விழாவினை சிறப்பாக நடத்திய பணியினை பாராட்டி பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் முதன்மை செயலர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

புதிதாக பணி நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் பள்ளியில் பணி ஏற்பது உட்பட 15 விதிகள் செயல்படுத்தி தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி பணியமர்த்தப்பட்ட மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கோர இயலாது

மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக 2009 முதல் மாநில பதிவு மூப்பு படி பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். 
மேற்காணும் தீர்பு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி இட மாறுதல் கோர மாட்டோம் என்ற நிபந்தனையை மனுதாரர்கள் ஏற்றதன் அடிப்படையில் அளிக்கப்பட்டதால், அவ்வுத்தரவின் படி 2009திற்கு பிறகு நியமிக்கப்படும்  இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டும், மாவட்டத்திற்குள்  மட்டுமே பணியிட மாறுதலும்  அளிக்கப்படுகிறது.


 தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் உள்ள TET தொடர்பான வழக்கின் காரணமாக  அவர்களுக்கு "weightage" முறைப்படி நியமிக்காமல், TET தேர்ச்சி பெற்றோரின் மாநில பதிவு மூப்புப்படியே நியமிக்கப்பட்டனர் . எனவே அவர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட பணி இட மறுத்தல் தற்போது பெற இயலாது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (12.12.12) ஸ்டிரைக் : தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

ஏழாவது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. கிராமப்புற தபால் சேவைகள் நிறுத்தப்பட்டன.


மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனை உடனே அமைக்க வேண்டும். 50 சதவீத பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைத்து ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். கிராம அஞ்சலகங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கருணை அடிப்படையிலான வேலையை எந்த நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும். அரசு வேலையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. தபால்துறையின் அனைத்து பிரிவு ஊழியர்கள், வருமான வரி, கணக்கு தணிக்கை துறை, கல்பாக்கம் அணுமின் நிலையம், தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ, சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ராஜ்பவன், சாஸ்திரி பவனில் உள்ள 45க்கும் அதிகமான அரசு அலுவலக ஊழியர்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் துறையில் முக்கிய தொழிற்சங்கமான அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் (என்எப்பிஈ) போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. இந்த சங்கத்தின் கீழ் 60 சதவீத ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் தபால் துறை அலுவலகங்களில் சுமார் 50 சதவீத ஊழியர்கள் வேலைக்கு வராததால் தபால் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. கிராமப்புறங்களில் தபால் சேவை இன்று நிறுத்தப்பட்டது. தபால் ஆபீஸ்களில் கவுன்டர்களில் ஆள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள வருமான வரித்துறை, ஆயத்தீர்வை அலுவலங்களில் ஊழியர்கள், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் பணிகள் முழுமையாக பாதித்துள்ளது. அண்ணாசாலையில் உள்ள கணக்கு தணிக்கை துறை அலுவலகம், நுங்கம்பாக்கம், பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும் ஊழியர்கள் வேலைக்கு வராததால் வழக்கமான பணிகள் நடக்கவில்லை. 

இதே கோரிக்கைகளுக்காக ரயில்வே மற்றும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. ஆனால், அந்த சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. ரயில்வே, பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் இன்று உணவு இடைவேளையின்போது தங்கள் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து மத்திய அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘இது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்தான். இதற்கு பிறகும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் பிப்ரவரியில் ஊழியர் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் ஒன்று கூடி காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளன’’ என்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஆசிரியர்கள் TRB - தேர்வு நுழைவுச்சீட்டை (Hall Ticket) அவசியம் 13.12.2012 அன்று முதல்வர் பங்கேற்கும் நியமன ஆணை பெறும் விழாவில் அவசியம் கொண்டு வர - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

இன்று (11.12.2012) நடைபெறும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமன இணையவழி கலந்தாய்வில் எவ்வித புகாருக்கு இடமின்றியும், ஒவ்வொரு அறையில் 50 பேர் வீதம் உட்காரவைத்து, காலை 7.30 மணி முதல் தொடங்கவும் மற்றும் சில கூடுதல் அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளியிலும், பள்ளி வாகனங்களிலும் முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள் நடைமுறையில் உள்ளதை "Fire Service Society" ஆய்வு செய்ய உள்ளதால் அதன் முக்கியத்துவத்தை உரிய உதவித்தொடக்கக்கல்வி மூலம் விளக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

13.12.2012 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் பங்கேற்கும் கல்வித்துறை விழாவிற்கு 50 புதிய ஆசிரியர்களுக்கு 2 பொறுப்பாசிரியரை நியமித்தும் இருக்கை ஏற்பாடுகள் குறித்தும் பள்ளிகல்வித்துறையின் வழிக்காட்டுதல் நெறிமுறைகள்

புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய ஊதியமும்



இடைநிலை ஆசிரியர்:

ஊதிய விகிதம்:
Pay Band 1:
5200--20200+2800+750

5200--20200 என்பது Pay Band
2800 என்பது Grade Pay (தர ஊதியம்)
750 என்பது  Personnel Pay (தனி ஊதியம்)

01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 5200+2800+750                 = 8750
அகவிலைப்படி (Dearness Allowance: DA) 72% : 8750 x 72 = 6300
மருத்துவப்படி (Medical Allowance: MA)                                 =   100
                                                                                             --------------------
                                                                                Total:           ரூ.15150
                                                                                            ---------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி  ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800



பட்டதாரி ஆசிரியர் :



ஊதிய விகிதம்:
Pay Band 2:
9300--34800+4600

9300--34800 என்பது Pay Band
4600 என்பது Grade Pay (தர ஊதியம்)

01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 9300+4600                            =13900
அகவிலைப்படி (Dearness Allowance:DA)72% : 13900 x 72    =10008
மருத்துவப்படி    (Medical Allowance:MA)                                    =   100
                                                                                                ---------------------
                                                                                        Total:       ரூ.24008
                                                                                               ----------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance:HRA) : 260/660/880/1100/1600

இடைநிலை ஆசிரியர்களுக்கு 11.12.12 அன்று நடைபெற இருக்கும் இணையவழி கலந்தாய்வில் சில அறிவுரைகள் வழங்கி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றிபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான (SGT) ONLINE கலந்தாய்வு 11.12.2012 அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 08.30 நடைபெறுகிறது- தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

TRB - TET ஆசிரியர்களுக்கு நியமன ஆணை, மாணவர்களுக்கான விலையில்லா கற்றல் மேம்பாட்டு பொருட்கள் வழங்க மாண்புமிகு தமிழ் முதல்வர் 13.12.12 அன்று பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய குழு அமைத்து அரசாணை 286 வெளியீடு.

நேரடி நியமன புதிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனரகத்தில் ஒருவார கால பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

அரசு / நிதி உதவி பள்ளிகளில் பணியாற்றி 2012-13ஆம் நிதியாண்டில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

ஊராட்சி/நகராட்சி /நிதியுதவி பள்ளி ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய (CPS) கணக்குத்தாள்கள் வழங்க ஆசிரியர் வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து பிப்ரவரி 2013க்குள் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கு அனுப்ப பங்களிப்பு ஓய்வூதிய விவரப் பேரேடுகள் தயார்நிலையில் வைக்க உத்தரவு - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

ஆசிரியர்கள் கண்காணிக்க பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம்


ஆசிரியர்கள் மாற்று பணிகளில் ஈடுபடுவதை கண்காணிக்க, பள்ளி மேலாண்மை குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பெற்றோர் 15, ஆசிரியர் 5 பேர் கொண்ட மேலாண்மைக்குழு அமைக்கப்படுகிறது. இவர்களில் ஆறு பேர், பள்ளி நிர்வாகத்தை கண்காணிக்க தேர்வு செய்யப்படுவார்கள். 

குழு தலைவராக பெற்றோர், செயலாளராக தலைமை ஆசிரியர் இருப்பர். பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் வருகை, இடைநின்றல் மாணவர்களை சேர்த்தல்,கட்டட வசதி, ஆசிரியர் மாற்று பணி செய்வதை கண்காணிக்கும் அதிகாரமும், இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி , ஆசிரியர் மற்றும் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தல் சார்ந்து பள்ளிக்கல்வி துறையின் வழிக்கட்டுதல்கள் - செயல்முறை

அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளி களில் (1 முதல் 5ஆம் வகுப்புகளில்) இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களில், TRB மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பணி நாடுனர்களை கொண்டு நிரப்ப விவரம் கோருதல், பணி நாடுனர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் , தன் பங்கேற்பு ஓய்வூதிய இரத்து உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறித்தி TNPTF ஐந்து கட்ட போராட்டம் அறிவிப்பு

3 முதல் 8 வகுப்பு வரை பயிலும் அரசு/நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வட்டாரத்திற்கு 20 (BRTs & Others) கருத்தாளர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 07.12.12 அன்று பயிற்சியளிக்க - சுகாதாரத்துறை செயல்முறை

அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்-

SSA - மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணைப்படி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் SABL பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த உத்தரவு

Rs.2000 Award of cash incentive and Certificate to the Government employees who have rendered 25 years of unblemished service - Orders Issued.

பத்தாண்டு பணிமுடித்து தேர்வுநிலை பெறுவதர்க்கு கல்விசான்றுகள் உன்மைதன்மை அறிய வேண்டியது அவசியமில்லை தகவலறியும் உரிமை சட்டம்மூலம் பெறப்பட்ட விளக்கம்

நடுநிலைப்பள்ளியில் பயிலும் SC/ST 6,7 மற்றும் 8 வகுப்பு குழந்தைகளுக்கு புதிய அணுகுமுறையிலான கல்வி மூலம் 2 நாள் வாழ்க்கைத் திறன் பயிற்சி அளிக்க SSA செயல்முறை

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தொழில்நுட்ப கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2012-12 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணபங்கள் கேட்டு - பள்ளிக்கல்வி செயல்முறை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக்கத்தால் வழங்ககப்படும் B.A Communication English என்ற பட்டப்படிப்பு B.A English என்ற பட்டப்படிப்பிற்கு சமமாக கருதி பணியமர்விற்கு வாய்ப்பளிக்க அரசாணை வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த கை,கால் பாதிக்கப்பட்ட 9 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியீடு

2012ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் விருதுகளுக்கான தகுதியான விண்ணப்பங்கள் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

அரசு Cable TV மூலம் கல்வித்தொலைக்காட்சி அலைவரிசையினை SSA மூலம் தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலை பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியீடு

அரசுப் பணியாளர்கள் இடமாற்றம் பொது மாற்றல்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையாணை 2012 - 2013 ஆம் ஆண்டுக்கு விலக்கி ஆணை வெளியிடப்படுகிறது.

"இரட்டைப் பட்டம்" பட்டங்களால் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு

 'டபுள் டிகிரி' பட்டங்களால் பதவி உயர்வு மற்றும்பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டு சென்னை ஐகோர்ட்டில் இந்த வாரம் (26 - 30.11.12) விசாரணைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தமிழகத்தில் ஏதாவது பட்டப்படிப்பு படித்திருந்தால் ஒரு ஆண்டில் கூடுதல் பட்டப் படிப்பு (டபுள்டிகிரி) படிக்கும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல்,ஏதாவது முதுகலை பட்டம் படித்திருந்தாலும் ஒரு ஆண்டில் கூடுதல் முதுகலை பட்டமும் பெறும் வசதி இருந்து வருகிறது.

இந்த வசதியின் மூலம்பட்டங்களை பெற்றவர்கள் கல்வித் துறை பல்வேறு துறைகளில் புதிய நியமனம், பதவி உயர்வு போன்றவற்றையும் பெற்று வந்தனர். கடந்த ஒரு சில ஆண்டுகளாக புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் பலர் பயன் பெற்று வந்தனர்.இதனால் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் இதுசம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து பதவி உயர்வு மற்றும் பணி நியமனங்களுக்கு டபுள் டிகிரி பட்டங்கள் செல்லாது என உத்தரவு வெளியானது. இதனால் ஏற்கனவே டபுள்டிகிரி பட்டங்களை பெற்று பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தொடர்ந்து இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதி கொண்ட குழுவிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் மேல்முறையீடு செய்துள்ளனர்.இந்த வழக்கு குறித்தவிசாரணைஇந்த வாரம் (26 - 30.11.12) விசாரணைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் இந்த உத்தரவு வெளியானால் ஏற்கனவே பதவி உயர்வு பெற முடியாதவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டவர்களும் பயன் பெறுவர் என்ற சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேர்முக உதவியாளர் பணியிடங்களுக்கு ONLINE வசதியின் மூலம் பதவியுயர்வு கலந்தாய்வு 27.11.12 அன்று அந்தந்த மாவட்ட தலைநகரில் நடைபெறுகிறது

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 30.09.2011 ன் படி காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி - பள்ளிக்கல்வித்துறை செயல்முறை

SSA பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் பயன்பாட்டு விவரங்களை கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

பள்ளிக்கல்வி - டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தடுப்பு முறைகளையும் பள்ளிகளில் கையாள வழிமுறைகளையும் வகுத்து அரசு கடிதம் வெளியீடு

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 செயல்படுத்தும் போது தடை மற்றும் பிரச்சனைகள் காரணிகளை அறிக்கையாக அனுப்ப கல்வித்துறை அலுவலர்களுக்கு - அரசு கடிதம்

உதவிபெறும் பள்ளிகள் - பணியாளர் நிர்ணய பட்டியல் தொகுக்கும் பணிக்காக பணியாளர் வருகை புரிய தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

10 வயது முதல் 19 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கான இலவச சுகாதார திட்டத்தினை கண்காணிக்க பள்ளி மற்றும் மாவட்ட அளவிலும் பொறுப்பு ஆசிரியர்களை நியமித்தல் - பள்ளிக்கல்வி செயல்முறை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி.


கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. 



     ஆனால் டிசம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன ஆணையில் TET தேர்வில் 5 ஆண்டுக்குள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 




       இதனால் இதே நிபந்தணையின் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் கல்வித்துறை மூலமாக நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர் - என்ற தினகரன் செய்தியால் அரசு நிதி உதவி பெறும்பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் Posting நிலைக்குமா என்று குழப்பம் அடைந்துள்ளனர்.

      TET தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பள்ளியிலயே வேலை வாய்ப்பு கிடைக்கும் போது அரசு நிதி உதவி பள்ளி பணியை  ஆசிரியர்கள் விரும்ப மாட்டார்கள். 

     இதனால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிரப்ப இயலாத காரணத்தினால்  மாணவர்களின் கல்வி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

      இது குறித்து கல்வி துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இது மாநிலம் தழுவிய பிரச்சினை என்பதால் விரைவில் கல்வி துறை இயகுனரகம் மூலம் தெளிவுரை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினர்.

 

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி - கொயம்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறுதல் - கூடுதல் விவரம் கோரும் செயல்முறை

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் (SABL) பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த உத்தரவு - அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்முறை

இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளருக்கான Online முறையில் கலந்தாய்வு செய்வது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவுரை

தொடக்கக்கல்வி - 22.11.12ன் படி காலியாக உள்ள நடுநிலை தலைமையாசிரியர் / பட்டதாரி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பருவ சுகாதார வாழ்வியல் பயிற்சியினை உரிய மருத்துவர்களைக்கொண்டு அளிக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

பத்தாண்டு பணிமுடித்து தேர்வுநிலை பெறுவதர்க்கு கல்விசான்றுகள் உன்மைதன்மை அறிய வேண்டியது அவசியமில்லை தகவலறியும் உரிமை சட்டம்மூலம் பெறப்பட்ட விளக்கம்

மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளுக்கான "உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா" -12.12.12 அன்று நடத்த வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி SSA செயல்முறை

TET - தகுதிதான் அடிப்படை! - தினமணி கட்டுரை

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை. வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள். 

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது. 

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

2013 ஆம் ஆண்டிற்கான அரசு பொது (அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள்) விடுமுறை நாட்கள் அறிவித்து - அரசாணை 981 வெளியீடு

1.6.1988 முன் இடைநிலை ஆசிரியராய் பணியாற்றி 1.6.88 பிந்தைய தலைமையாசிரியர் பணிகாலத்தோடு சேர்த்து தேர்வு/ சிறப்பு நிலை வழங்குதல் - கூடுதல் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SABL Training) பயிற்சி - குறு வள மைய அளவில் அளிக்க இருப்பதால் மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி அளிக்க - SCERT செயல்முறை

School Development Planning Power point

மாற்று திறனாளிகளுக்கு பொது தேர்வில் வழங்கப்படும் சலுகைகள் -திருத்த அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி - 131 மேல்நிலைப்பள்ளிகளுக்கு NABARD திட்டம் XIன் கீழ் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த உரிய பள்ளிபெயர்களுடன் அரசாணை வெளியீடு

மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை கல்வி உதவித்தொகை விவரங்கள் கோரி - பள்ளிக்கல்வித்துறை செயல்முறை

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு? மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம் - dinamani

நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி உத்தரவிட்டார். பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந் நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவனை சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கும் வரை பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை

பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு


பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

வர்மா குழு
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் நிலைப்பாடு: வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.

30 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.
ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

எப்போது வெளியாகும்?
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என திர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது: கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.  இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும். வ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

Popular Posts