3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
தகுதிகாண் பருவம்
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்.
2. தகுதிகாண் பருவமானது பதவிகளின் தன்மையைப் பொறுத்து இரண்டாண்டு காலத்தொடரில் ஓர் ஆண்டு அல்லது மூன்றாண்டு காலத்தொடரில் இரு ஆண்டுகள் என இருக்கும்.
3. கடுமையான குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கைகள் நிலுவையிலிருப்பின் பழகு நிலை நிறைவு குறித்து தாமதப்படுத்தும் ஆணையை உரிய அலுவலர் வெளியிட வேண்டும்.
4. பணிக்காலமே தகுதி காண் காலமாகக் கொள்ளப்படும். சிறுவிடுப்புத் தவிர்த்து பிற அரசு விடுமுறைகள் அல்லாத விடுமுறைகளும் பிற விடுப்புகளும் (ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு) போன்றவை பழகு நிலையில் பணிக்காலமாக கொள்ளப்படமாட்டாது. பழகு நிலைக் காலத்தில் மேற்கூறியவாறு விடுப்புகளை எடுத்தால் பழகுநிளைக்காலம் விடுப்பு எடுத்த அளவிற்கு தள்ளி போகும்.
இவை தவிர
(அ) பழகு நிலைக் காலத்தில் எடுக்கப்படும் பணியேற்பிடைக் காலமும்
(ஆ) விடுப்புடன் இணைக்கப்படும் முன்,பின் அரசு விடுமுறை நாட்கள் அல்லது பதில் விடுப்பு போன்றவைகளும் பழகுநிலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாத காலமாகும்.
5. தற்காலிக பதவி உயர்வு, மற்றும் மேல்நிலை பதவியில் ஆற்றும் பணிக்காலமும் கீழ்நிலைப் பணியின் பழகுநிலைக்குகணக்கில் கொள்ளப்படும்.
6. பழகுநிலையில் இருப்பவருக்கு தற்காலிகமாய் பதவி உயர்வு அளிக்கப் படலாம். ஆனால் பதவி உயர்வுக்கு முன் இருந்த கீழ்நிலைப் பதவியில் பழகுநிலையை முடித்த பின்னரே உயர்நிலைப் பதவியில் பணி ஒழுங்கு படுத்தப்படும்.
7. ஒரு பணியில் பழகுநிலை முடித்தவர் அதே பணியில் பதவி உயர்வு செய்யப்பட்டால் மீண்டும் பழகுநிலை முடிக்கத் தேவையில்லை.
8. அலுவலக மெத்தனம் காரணமாக பழகுநிலை தாமதமாக நிறைவு செய்யப்படுமாயின் ஊதிய உயர்வு நிலுவையுடன் வழங்கப்படும். (Rule 23-A T.N.S.S.S.R)
9. பழகுநிலைக்காலத்தில் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலங்கள்:
அ) பணிக்காலம், சிறுவிடுப்பு, ஈடுகட்டும் விடுப்பு, அரசு விடுமுறைகள்,
ஆ) விடுமுறையுடன் தொடர்ந்து பணியேற்பு காலம் (Rule 3 Annex. F.R)
ஆ) பழகுநிலைக் காலத்தில் பயிற்சி பெறும் காலம். (G.O. Ms. No.610 P &A.R. DT. 28.6.82)

பணி ஒழுங்குபடுத்துதல்
1. தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிவிதிகள் (T.N.S.S.S.R) 23 ன் படி முதலில் பணி நியமனம் ஆன தேதியிலிருந்து நியமன அலுவலரால் பணி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். தாமதம் கூடாது. (அரசு கடித எண். 70916 மிசி 90 நாள். 04.10.90 )
2. பழகு நிலையில் இருக்கும் ஒருவர் பணிக்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றவராக இருந்தால் அவரின் பணி ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் .
3. தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் பணியை வரன்முறை படுத்துபவர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார்.

ஊக்க ஊதிய உயர்வுகள்
1.ஓர் இடைநிலையாசிரியர் B.Ed பட்டம் பெற்றால் அத்தகுதிக்கு ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஆண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் M.A., M.Sc., M.Ed., போன்ற முதுகலை பட்டங்களில் ஒன்றைப் பெற்றால் அத்தகுதிக்காக மேலும் ஓர் ஊக்க ஊதிய உயர்வு ( இரண்டு ஊதிய உயர்வுத் தொகைகள்) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.
2. இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் B.Ed பட்டம் பெறாமல் முதுகலை பட்டம் பெற்று அதன் பின்னர் B.Ed பட்டம் பெற்றால் ஒரே நிகழ்வில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் ( நான்கு ஊதிய உயர்வுத் தொகைகள்)அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படுகின்றது.
3. இவ்வூதிய உயர்வுகள் உரிய தேர்வுகள் எழுதி முடித்த நாளுக்கு மறுநாள் முதல் வழங்கப்படுகின்றன.
4. அண்ணாமலை பல்கலைகழகத்தின் திறந்த நிலைப் பல்கலைகழகத் திட்டத்தில் (Open University System) வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் அப்பல்கலைகழகத்தின் முறையான திட்டத்தின் (Regular Stream) வழங்கப்பெறும் பட்டங்களுக்கு சமமானவையாகக் கருதி பொதுப் பணிகளில் வேலை வாய்ப்புக்கு அரசு ஏற்ப்பளிப்பு (Recognition) செய்துள்ளது. அரசு மடல் 1630/R/97-1 (சீரமைப்பு) நாள் 20.2.97 மற்றும் அரசாணை எண்.216 /நிலை/ ப.ம.சீ.துறை/நாள் 26.8.97

பதவி உயர்வுகள்.
பதவி உயர்வுகள்.
1. ஓர் இடைநிலை ஆசிரியர் ஓர் அலகின் (Unit) முன்னுரிமைப்பட்டியல் (Seniority) அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வைப் பெறுகின்றார்.
2. ஓர் அலகிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய ஏற்ற முறையில் உள்ள ஆசிரியர்களின் கூட்டு முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலும் உயர்கல்வித் தகுதி அடிப்படையிலும் நடுநிலைப் பள்ளி பட்டநிலை ஆசிரியர் அல்லது தமிழாசிரியர் பதவியுயர்வு வழங்கப்படுகிறது.
3. ஓர் அலகின் கல்வியியல் பட்டத்தேர்ச்சி (B.Ed Degree) பெற்றுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / நடுநிலைப்பள்ளி பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் ஆகிய முவ்வகையினரின் ஊட்டுபதவி (Feeder Cadre) ஏற்ற நாளின் அடிப்படையிலான கூட்டு முன்னுரைப் பட்டியலின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வகையினரிடையே உள்ள அடிப்படை ஊதிய வேறுபாட்டை பொருட்படுத்தாமல் இப்பதவி உயர்வு வழங்கப்படும். அரசாணை நிலை எண் 166 ப.க.து. எண். 2 நாள்7.6.99
4. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டநிலை தலைமையாசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லது கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு மாற்றத்தக்கப் பணியாக (Inter Changeable) வழங்கப்பெறுகிறது. இதற்கு துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. வெளி ஒன்றியத்துக்கோ , நகராட்சிக்கோ மாற்றலில் செல்லும் இடைநிலை ஆசிரியர், தகுதிகாண்பருவம் முடித்தவராயின் புதிய மேலாண்மை அழகின் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் தகுதிகாண்பருவம் முடித்தவர்களுக்கு இறுதியில் சேர்க்கப் பெற்று பதவி உயர்வு பெறுவார்.
6. தமிழாசிரியர் பதவியில் உள்ளவர் கல்வியியல் இளையவர் (B.Ed.) பட்டம் பெற்றிடாவிடினும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியுயர்வுக்கு தகுதியுடையவராவார். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/2000 நாள் 13.6.2000 )
7. ஓர் இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் / பட்டநிலை ஆசிரியர் / தமிழாசிரியர் பதவியுயர்வில் எதையேனும் விட்டுக் கொடுத்து விடுவதனால் மற்ற பதவியுயர்வை பெரும் தகுதியை இழந்தவர் ஆகார். அவருக்கு மற்ற பதவியுயர்வு முன்னுரிமைப்படி வழங்கப்பெறல் வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 3926 /ED/ நாள் 23.12.1999)
8. Double Major, Trible Major பட்டம்பெற்றவர்களில் ,அவர்கள் பி.எட். பட்டம் பெற்றிருந்தால் , அவர்கள் படித்த முக்கிய பாடங்களின்படியும் உரிய முன்னுரிமையின்படியும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியலில் சேர்த்தல் வேண்டும். பி.எட். வுடன் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர் கூடுதலாக மற்றொரு பாடத்தில் ஒரு ஆண்டு படிப்பு முடித்து பட்டம் பெற்றிருந்தால் அந்தப் பாடத்திற்கும் அவரை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். (தொ.க.இயக்குனரின் ந.க.எண். 36679 /D3/2008 நாள் 18.11.2008)

அரசு ஊழியர்களின் விடிவெள்ளி :
-க.ராஜ்குமார்
அப்பன் - பரதன், தமிழக அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்கள். 1970-ல் நடைபெற்ற என். ஜி.ஓ.யூனியன் தேர்தலில் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் சங்கத்தை சேர்ந்த தோழர் எம்.ஆர்.அப்பன் மற்றும் தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.பரதன் ஆகியோர் சிவ இளங்கோவுடன் சேர்ந்து ஒரு அணியை அமைத்து தேர்தலில், அரசுக்கு விசுவாச மான தேவநாதன் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சிவ இளங்கோ தலைவராகவும். எம்.ஆர் அப்பன் பொருளாளராகவும், புறநகர் துணைத்தலைவராக ஜே.எஸ். பரதனும் தேர்வு செய்யப்பட்டனர்.
என்.ஜி.ஓ.யூனியனில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அன்றைய முதல்வர் கருணா நிதி விரும்பவில்லை. எனவே தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட சிவஇளங்கோ, அரசுடன் இணக்கமாகவே இருக்க விருப் பப்பட்டார். ஆனால் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்அப்பன் மற்றும் பரதன் போன்ற வர்கள் இடதுசாரிக் கண்ணோட்டத் துடன் செயல்படுபவர்கள் என ஆட்சி யாளர்கள் கருதுவதால் இவர்களை கழட்டிவிட அவர் திட்டமிட்டார்.
என்.ஜி.ஓ. மாநாடு- சேலம்
1972-ம் ஆண்டு சேலத்தில் நடை பெற்ற மாநாட்டில் அன்றைய முதலமைச் சர் கலைஞர் கலந்துகொண்டார். இம் மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான ஊழியர்கள், தங்களுக்கு ஊதியம், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முழக்கமிட்டு பேரணி யில் வந்தனர். மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களில் கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என பல மாவட்டங்கள் வலி யுறுத்தின. இவைகளுக்கு காரணம் எம்.ஆர்.அப்பனும், பரதனும்தான் என என்.ஜி.ஓ. யூனியன் தலைமை கருதியது. எனவே இவர்கள் இருவரையும் சங்கத்தி லிருந்து நீக்கிவிட தீர்மானித்தது.
இந்நிலையில் எம்.ஆர்.அப்பன் பொதுச்செயலாளராக இருந்த ஐ.டி.ஐ சங் கத்தில் துறைவாரியான கோரிக்கைக ளுக்காக வேலை நிறுத்தம் 1972 டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு என்.ஜி.ஓ.யூனி யன் ஆதரவு கிடையாது என அறிவித்த சிவஇளங்கோ, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.ஆர். அப்பனை நீக்கிவிட்டார். அதனை தொடர்ந்து என்.ஜி.ஓ.யூனியன் பொருளா ளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆதரவாக இருந்த ஜே.எஸ்.பரதனும் மாநில துணைத்தலைவர் பொறுப்பி லிருந்து நீக்கப்பட்டடார்.
நடவடிக்கைக் குழு
என்.ஜி.ஓ.யூனியனிலிருந்து நீக்கப்பட் டவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச் சியில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ஏ.கூடலிங்கம் தலைமையில் என். ஜி.ஓ.யூனியன் நடவடிக்கைக் குழுவை துவக்கி செயல்பட்டனர். இதன் விளை வாக அரசு கடுமையான நடவடிக்கை களை மேற்கொண்டது.
தோழர் எம்.ஆர்.அப்பன் அவர்களை யும் ஐ.டி.ஐ சங்கத்தின் சில தலைவர் களையும் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 311 2(ஏ) (பி) (சி) -ன் கீழ் பணிநீக்கம் செய்ய அன்றைய கலைஞரின் அரசு ஆளு நருக்கு பரிந்துரை செய்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். வருவாய்த்துறை அலுவலர் சங் கத்தின் மாநிலத் தலைவரும் நடவடிக் கைக் குழுவின் தலைவருமான மதுரை ஆர்.ஏ.கூடலிங்கம் ஓய்வு பெறும்வரை யிலும் (1975) தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தில் கண்காணிப்பாளராக பணி யாற்றிவந்த டி.என்.எஸ் என்கிற தோழர் சீனிவாசன், தட்டச்சராக பணி இறக்கம் செய்யப்பட்டார். நடவடிக்கைக் குழுவின் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கே.இரங்கநாதன் கட்டாய ஓய்வில் அனுப் பப்பட்டார். இதுபோல தமிழகம் முழு வதும் பல தோழர்கள் அரசால் பழிவாங் கப்பட்டனர். எனினும் அச்சமின்றி தோழர்கள் இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
பொது வேலை நிறுத்தம் - 1978
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், என்.ஜி.ஓ. யூனியன் தலைமை, ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட் டத்தை நடத்தியது. சிவ இளங்கோ திமுக அனுதாபி என்ற காரணத்தினால் அன் றைய முதல்வர் எம்.ஜி.ஆர். போராட்டங் களை அடக்க முயன்றார். 1978-ம் ஆண்டு ஜூன் 5 அன்று கோட்டையை நோக்கி சென்ற பேரணியை காவல்துறை யினர் பலப்பிரயோகம் செய்து தடுத்து நிறுத்தியதால், அதே இடத்தில் சிவ இளங்கோ வேலை நிறுத்தத்தை அறிவித் தார். ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில் நடவடிக்கைக் குழுவும் கலந்து கொண்டது. எனினும் சந்தர்ப்பவாத தலைமை இந்த போராட்டத்தின் இறுதி யில் அரசிடம் சரண் அடைந்தது. போராட்டக் காலத்தில் நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் தமிழகம் முழு வதும் அரசு ஊழியர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து நடந்த சங்க தேர்தலில் நடவடிக்கைக் குழு பங்கேற் பது என்ற முடிவினை எடுத்தது. நடவடிக் கைக் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறு பாடின் காரணமாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாநில தேர்தலில் தோல்வியை தழுவினாலும், வேலூர், கோவை, மதுரை போன்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினர் வெற்றி பெற முடிந்தது. வெற்றி பெற்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினரின் நடவடிக்கைகள் ஊழியர்களை ஈர்ப்பதை கண்ட சிவஇளங்கோ, 1984ம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாவட்டங்களில் சங்க தலைவர்களை நீக்கினார். இப்படி நீக்கப் பட்டவர்கள் வேலூரில் 01-04-1984-ல் கலந்து ஆலோசனை செய்து அரசு ஊழியர் சங்கத்தை துவக்க முடிவு செய்தனர்.
மதுரையில் அமைப்பு மாநாடு
மதுரையில் 1984-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதியன்று நடைபெற்ற மாநாட்டில் அரசுஊழியர் சங்கம் உதய மானது. மதுரையில் நடைபெற்ற மாநாட் டில் அரசுஊழியர் சங்கத்தின் அமைப்பா ளராக தோழர் எம்.ஆர்.அப்பன் அவர் களும். என்.எல்.சீதரன் பொருளாளராக வும் 21 தோழர்களைக் கொண்ட மாநில நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. தலைவராக கே.கங்காதரன் தேர்வு செய் யப்பட்டார். சங்கத்தின் அமைப்புச் சட்ட விதியை உருவாக்கிட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் தோழர் எப்.எம்.குத்புதீன் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது
பத்தாவது மாநில மாநாடு
அரசு ஊழியர் சங்கத்தின் 10-வது மாநிலமாநாடு, கிருஷ்ணகிரியில் நவம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ளது. தமிழ்நாடு அரசு மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், நடைபெறும் இம்மாநாடு மக் கள் பணியாளர்களின் துயர்துடைக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த 27 ஆண்டுகாலமாக செயல்பட்டுவரும் அரசுஊழியர் சங்கம், போராட்டப்பாதை யில் முன்னேறி வரும் சங்கமாகும்.
தாடியுடன் பிறந்த குழந்தை
1990-ல் கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசுஊழியர் சம் மேளனத்தின் 7-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற வெளி மாநிலத்தை சேர்ந்த அரசுஊழியர் சங்கங்களின் தலைவர்கள், 1984-ல் துவக்கப்பட்ட அரசுஊழியர் சங்கம் ஒரு குறுகிய காலத் தில் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவதை கண்டு வியப்பு தெரிவித் தனர். இதுகுறித்து அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் அன்றைய பொதுச் செயலாளர் சுகுமால்சென் குறிப் பிடுகையில், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் துவங்கி ஆறு ஆண்டுகளாயினும் அதன் முன்னோடிகள் தமிழக அரசு ஊழியர் இயக்கங்களில் நெடுங்காலம் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்றவர் கள். அந்த அனுபவங்களின் முதிர்ச் சியை தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் பெற்றுள்ளது. அரசுஊழியர் சங்கம் தாடியுடன் பிறந்த குழந்தை என பாராட்டிப் பேசினார்.
அரசுஊழியர்களின் விடிவெள்ளி
அரசுஊழியர் சங்கம் தோன்றிய பிறகு தான் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைமை மேம்படுத்தப்பட்டது. பணிப் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டது. தொகுப்பூதியம் பெறும் சத்துணவு ஊழி யர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வரு வாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத் தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் என மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஊழியர்களை ஒன்றுதிரட்டி போராட் டங்கள் நடத்தியதன் மூலமாக அவர்க ளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதிய மேம்பாடு கிடைத்தது. அரசுஊழியர் சங்கம் இன்றும் புதிய பென் சன் திட்டத்தை எதிர்த்தும், காலிப் பணி யிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறது. அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் வழங்கிட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு ஊழியர்களின் உரிமை களுக்காக போராடும் அரசு ஊழியர் சங்கம், தமிழக அரசுஊழியர்களின் அங்கீ காரத்தை பெற்றுள்ள சங்கமாக, விடி வெள்ளியாக திகழ்கிறது.
12000 மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு டிஸ்மிஸ்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது
12000 மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு டிஸ்மிஸ் செய்துள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விருதுநகர் மாவட்டக்கிளை வன்மையாக கண்டிக்கிறது.
நவம்பர்-8 விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம்:
நவம்பர்-8 விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பி.எஸ்.என்.எல்.யு, எல்.ஐ.சி ஆகிய சங்கங்கள் இன்று மாலை 5 மணிக்கு விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 102 பேர் கலந்து கொண்டனர்.
DA Calculation Sheet
Month All India Index % of increase
Nov-08 148 21.44
Dec-08 147 22.38
Jan-09 148 23.39
Feb-09 148 24.32
Mar-09 148 25.12
Apr-09 150 25.98
May-09 151 26.84
Jun-09 153 27.78
July-09 160 29
Aug-09 162 30.23
Sep-09 163 31.45
Oct-09 165 32.67
Nov-09 168 34.11
Dec-09 169 35.7
Jan-10 172 37.43
Feb-10 170 39.01
Mar-10 170 40.59
Apr-10 170 42.03
May-10 172 43.54
Jun-10 174 45.06
July-10 178 46.35
Aug-10 178 47.50
Sep-10 179 48.66
Oct-10 181 49.81
Nov-10 182 50.81
Dec-10 185 51.97
Jan-11 188 53.12
Feb-11 185 54.20
Mar-11 185 55.28
Apr-11 186 56.43
May-11 187 57.51
Jun-11 189 58.59
Jul-11 193 59.67
Aug-11 194 60.82
Nov-08 148 21.44
Dec-08 147 22.38
Jan-09 148 23.39
Feb-09 148 24.32
Mar-09 148 25.12
Apr-09 150 25.98
May-09 151 26.84
Jun-09 153 27.78
July-09 160 29
Aug-09 162 30.23
Sep-09 163 31.45
Oct-09 165 32.67
Nov-09 168 34.11
Dec-09 169 35.7
Jan-10 172 37.43
Feb-10 170 39.01
Mar-10 170 40.59
Apr-10 170 42.03
May-10 172 43.54
Jun-10 174 45.06
Aug-10 178 47.50
Sep-10 179 48.66
Oct-10 181 49.81
Nov-10 182 50.81
Dec-10 185 51.97
Jan-11 188 53.12
Feb-11 185 54.20
Mar-11 185 55.28
Apr-11 186 56.43
May-11 187 57.51
Jun-11 189 58.59
Jul-11 193 59.67
Aug-11 194 60.82
G.O 274, Dt. 03.10.2011.
திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2011 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Cabinet decision: Railway employees to get Productivity Linked Bonus equivalent to 78 days of wages.
The Union Cabinet has accepted the proposal of the Ministry of Railways for payment of Productivity Linked Bonus (PLB) equivalent to 78 days' wages for the financial year 2010-2011 for all eligible non-gazetted Railway employees.
The financial implication of payment of 78 days' PLB to railway employees has been estimated to be Rs.1098.58 crore. The wage calculation ceiling prescribed for payment of PLB to the eligible non-gazetted railway employees is Rs.3500/- p.m.
About 12.61 lakh non-gazetted Railway employees are likely to benefit from the decision.
Payment of PLB to eligible railway employees is made each year before the Dusshera/ Puja holidays. The decision of the Cabinet shall be implemented before the holidays for this year as well.
This will be the highest PLB payment ever to be made by Railways. PLB is based on the productivity indices reflecting the performance of the Railways and its payment is expected to motivate the employees for working towards improving the same in future.
Source : PIB

கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றும் பணியிடம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்
விருதுநகர் : தமிழகத்தில் ஆசிரியர் கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றவர்கள், காலிப்பணியிடம் இல்லாததால் தவிக்கின்றனர். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுமதித்த காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் பணியிட மாறுதல் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்லும்போது, அங்கு காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது. நேரடி பணி மாறுதல் பெற்றவர்கள் பணியில் இருப்பதாலும், புதிய நியமனங்களின் மூலம் பணியில் சேர்ந்திருப்பதாலும் சிக்கல் உள்ளது. இதனால், பணியிட மாறுதல் பெற்றவர்கள், சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று, மீண்டும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் உத்தரவு பெற வேண்டிய நிலை உள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் கணேசன் கூறுகையில், "" பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், காலிப்பணியிடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கால விரையம், வீண் செலவு, மன உளைச்சலாலும் பாதிக்கின்றனர்,'' என்றார்.
நன்றி! தினமலர்
லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'
"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.
பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:
* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.
* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.
* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.
* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.
* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.
* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.
* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'
நன்றி! கல்விசோலை.
கூடங்குளமும் புகுஷிமாவும்
கூடங்குளமும் புகுஷிமாவும்
-என்.ராமதுரை
தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஜப்பானில் விபத்துக்குள் ளாகிய புகுஷிமா அணுமின் நிலையத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கூடங்குளம் தமி ழகத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. புகுஷிமாவும் அப்படித்தான். அது ஜப்பானின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
தமிழகத்தை 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. புகுஷிமாவை இதேபோல கடந்த மார்ச் மாதம் சுனாமி தாக்கியது. ஆனால், ஒற்றுமைகள் இதோடு சரி, புகுஷிமாவில் உள்ள நிலைமைகள் வேறு. கூடங்குளத்தில் உள்ள நிலைமைகள் வேறு. ஆகவே, புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி கூடங்குளத்துக்கு ஏற்பட வாய்ப்பே கிடையாது. முக்கிய காரணம் பூகோள நிலைமைகள்.
நிலப்பகுதியில் ஏற்படுவதைப்போலவே கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் ஏற்படுகின் றன. கடலடி பூகம்பங்கள் சில இடங்களில் மட்டுமே நிகழ்கின்றன. பூமியின் மேற்பரப்பா னது பல சில்லுகளால் ஆனது. ஆங்கிலத் தில் இவற்றை “பிளேட்’ என்கிறார்கள். உல கின் கண்டங்களும் கடல்களும் இந்தச் சில் லுகள் மீது தான் அமைந்துள்ளன. சில்லுகள் என்பவை பூமியின் மேற்பரப்புக்கு அடியில் அமைந்த பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள்.
ஒரு சில்லு என்பது பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாகவும், பல கிலோ மீட்டர் தடிமன் கொண்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக, இந்தியத் துணைக் கண்டமும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியச் சில்லு மீது அமைந்துள்ளது. சில்லு கள் ஆண்டுக்குச் சில சென்டிமீட்டர் வேகத் தில் நகருகின்றன. இந்தியச் சில்லு வடகிழக் குத் திசையை நோக்கி நகர்ந்து ஐரோப்பாவும் ரஷியாவும் மத்திய ஆசிய நாடுகளும் அமைந்த யூரேசிய சில்லுவை நெருக்குகிறது.
அண்மையில் சிக்கிமில் ஏற்பட்ட பூகம் பத்துக்கு இதுவே காரணம். ஒரு சில்லு இன் னொன்றை நெருக்காமல் அதை உரசிச்செல் வது உண்டு. வேறு இடங்களில் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போவதும் உண்டு. பூமியின் மேற்பரப்பில் பிரதானமாக ஏழு பெரிய சில்லுகளும் மற்றும் பல சிறிய சில்லுகளும் உள்ளன. இந்தச் சில் லுகள் சந்திக்கும் இடங்களில்தான் பிரச்ச னைகள் தோன்றுகின்றன.
இந்தியா அமைந்த சில்லுவின் கிழக்குப் பகுதியானது வங்கக் கடலுக்கு அடியில் பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது. இப்படி நிக ழும்போது கடலடியில் கடும் பூகம்பம் ஏற் படும். 2004-ல் இப்படி நிகழ்ந்தபோதுதான் சுனாமி தோன்றி தமிழகத்தைத் தாக்கியது. மிகக் கடுமையான கடலடி பூகம்பங்களே சுனாமியை உண்டாக்குகின்றன. சுனாமி யைத் தோற்றுவிக்கக்கூடிய கடலடி மடு தமி ழகக் கரையிலிருந்து குறைந்தது 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. 2004-ல் சுனாமி தோன்றியதற்குக் காரணமான கடலடி பூகம்பம் தமிழகக் கரையிலிருந்து சுமார் 1,860 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
தமிழகத்துடன் ஒப்பிட்டால், ஜப்பானைச் சுற்றி பசிபிக் சில்லு, யூரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, பிலிப்பின்ஸ் சில்லு எனப் பல சிறிய சில்லுகள் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகளின் சந்திப்புகள் ஜப்பானின் கரை களுக்கு மிக அருகில் உள்ளன. ஜப்பானில் ஓயாது பூகம்பங்கள் நிகழ்வதற்குக் காரணம், இந்தச் சில்லுகளின் நகர்வுகளே.
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் சில்லுகள் ஒன்றுக்கு அடியில் இன்னொன்று புதைவதும் நிகழ்ந்து வருகிறது. இவை கடலடி பூகம்பங் களை உண்டாக்கும்போது சுனாமிகள் தோன் றுகின்றன. ஜப்பானில் சுனாமி தாக்குதல் என்பது சகஜம். சுனாமி என்பதே ஜப்பானியச் சொல்லாகும். ஜப்பானில், பூகம்ப எச்சரிக்கை நிலையங்களும், சுனாமி எச்சரிக்கை நிலை யங்களும் நிறையவே உள்ளன. ஆனால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் உஷார் ஆவதற்குப் போதுமான அவகாசம் இருந்தால் தான் எச்சரிக்கைக்கு அர்த்தம் உண்டு.
இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி புகுஷிமா வைத் தாக்கிய பூகம்பம் ரிக்டர் அளவுகோ லில் 9-ஆக இருந்தது. உடனே பூகம்ப எச் சரிக்கையும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட் டன. ஆனால், சுனாமிக்குக் காரணமான கட லடி பூகம்பம் புகுஷிமாவிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சுனாமி அலைகள் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத் தில் செல்பவை. ஆகவே, சுனாமியிலிருந்து தப்ப, போதுமான அவகாசம் கிடைக்கவில்லை.
இத்துடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் கரை ஓரமாகக் கடலடியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. கடலடி பூகம்பம் ஏற்படக் கூடிய, அதாவது சுனாமி தோன்றக்கூடிய பகுதி என்பது தமிழகத்திலிருந்து குறைந்தது 1,800 கிலோமீட்டரில் உள்ளது. ஆகவே, அப் பகுதியில் எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் பெரிய சுனாமி தோன்றியது என்றால் தமி ழகக் கரை ஓரமாக உள்ள இடங்களில் முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் குறைந் தது மூன்றரை மணி நேரம் அவகாசம் கிடைக்கும்.
2004-ம் ஆண்டுக்கு முன்னர் வங்கக் கடல் பகுதியில் சுனாமியைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்ய எந்த ஏற்பாடும் இல்லா திருந்தது. அவ்வித ஏற்பாடு இல்லாமல் இருந்த நிலையிலும், தமிழகத்தின் கரை ஓரமாக அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலை யத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இப் போது சுனாமி எச்சரிக்கை நிலையங்கள் உள் ளதால், சுனாமி தாக்குதல் ஏற்படும் என்றால் கல்பாக்கத்திலும் சரி, கூடங்குளத்திலும் சரி முன்கூட்டி தக்க நடவடிக்கைகளை மேற் கொள்ள நிறைய அவகாசம் கிடைக்கும்.
எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் முக் கியமான பகுதி அணு உலையாகும். யுரேனி யம் அடங்கிய உலோகத் தண்டுகள் கட்டுக் கட்டாக அணு உலைக்குள் வைக்கப்பட்டி ருக்கும். யுரேனியம் அடங்கிய தண்டுகளை அருகருகே வைத்த மாத்திரத்தில் சில நூறு சென்டிகிரேட் அளவுக்குப் பயங்கர வெப்பம் தோன்றும். யுரேனியத்தின் விசேஷத்தன்மை இதற்குக் காரணம். இத்தண்டுகளை அப்படி யேவிட்டால் உருகும், ஆவியாகும், காற்றில் கலந்து சுற்று வட்டாரத்தில் கதிர்வீச்சு ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆகவே, அணுஉலை எப்போதும் தண் ணீருக்குள் இருக்க வேண்டும். ஒருபுறத்திலி ருந்து குளிர்ந்த நீர் வந்து கொண்டிருக்கும். மறுபுறம் அந்த நீர் பயங்கரமாகச் சூடேறி நீராவி யாகி வெளியே சென்று கொண்டிருக்கும். இவ்விதமாகத் தோன்றும் நீராவியைக் கொண்டு ஜெனரேட்டரை இயக்கி மின்சாரத் தை உற்பத்தி செய்கிறார்கள்.
பூகம்பம் ஏற்பட்டால் அணுமின் நிலை யம் பாதிக்கப்படலாகாது என்பதற்காக, எல்லா அணுமின் நிலையங்களிலும் அணுமின் நிலையம் தானாகவே செயல்படாது நின்று விடும். ஆகவே, மின்சார உற்பத்தி அடியோடு நின்றுவிடும். அப்படியானால் அணு உலை என்னாவது? அதற்குத் தொடர்ந்து நீர் கிடைக் காவிட்டால் ஆபத்தாயிற்றே. ஆகவே, எல்லா அணுமின் நிலையங்களிலும் டீசலால் இயங் கும் ஜெனரேட்டர்களை வைத்திருப்பர். அணு உலைக்கு நீரை அளிப்பதற்கான பம்புகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை டீசல் ஜெனரேட்டர்கள் அளிக்கும்.
புகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுனாமி தாக்கியபோது டீசல் ஜெனரேட்டர்கள் கடல் நீரில் மூழ்கிப்போயின. அவை கடலோ ரமாகத் தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டி ருந்ததே காரணம். இவை மட்டும் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால் புகுஷிமா வில் எந்த விபத்தும் ஏற்பட்டிராது. கல்பாக்கத் தில் டீசல் ஜெனரேட்டர்கள் உயரமான இடத் தில் இருந்ததால் 2004-ல் சுனாமி தாக்கிய போது பிரச்சனை ஏற்படவில்லை. இப்போ தெல்லாம் அணுமின் நிலையங்களில் நீரை அளிக்கும் பம்புகளை இயக்குவதற்குக் கூடு தல் ஏற்பாடாக பெரிய மின்சார பாட்டரி களையும் வைத்திருக்கின்றனர்.
டீசல் ஜெனரேட்டர் செயலிழந்தால் பாட் டரிகளைப் பயன்படுத்துவர். புகுஷிமாவில் இப்படியான நவீன ஏற்பாடுகள் இல்லாத தற்கு அது கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்பதேயாகும். தவிர, சில ஆண்டுக ளில் புகுஷிமா அணுமின் நிலையத்தை மூடி விடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆகவே, அங்கு நவீன ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சுருங்கச்சொன்னால் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டதற்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனதே காரணம்.
உலகில் இப்போது 30 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் உள் ளன. புகுஷிமா விபத்துக்குப் பிறகும் இவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. எனினும், புகுஷிமா விபத்துக்குப் பிறகு பொதுவில் மக்களிடையே அணுமின் நிலையங்கள் பற்றி ஒரு பயம் தோன்றியுள்ளது.
எங்கோ ஒரு ரயில் விபத்தில் 100 பேர் மடிந்ததாகச் செய்தியைப் படிக்கின்ற ஒருவர், மறுநாள் காலையில் ரயிலில் ஏறும்போது அவர் மனதில் ஓர் அச்சம் நிலவும். இது இயல்பு. கூடங்குளம் பற்றிய அச்சமும் கிட் டத்தட்ட இது போன்றதே. எனினும் ரயில் விபத்தையும் அணுமின் நிலைய விபத்தையும் ஒப்பிட முடியாதுதான்.
எல்லாம் சரி, அணுமின் நிலையங்க ளுக்கு மாற்று உள்ளதா? நிலக்கரியைப் பயன் படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைப்பது தலைவலிபோய் திருகுவலி என் பதற்கு ஒப்பானது. காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலை கள் மூலம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட் டுமே மின்சாரம் கிடைக்கும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற இயலும். ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 25 வீதம் செலுத் தத் தயாராக இருக்க வேண்டும். எரிவாயு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
தமிழகத்தில் போதுமான எரிவாயு கிடைக் கவில்லை. ஆந்திர மாநிலத்தின் கரை ஓர மாகக் கடலுக்கு அடியில் ஏராளமான அள வில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராட்சதக் குழாய்கள் மூலம் இதைத் தமிழகத் துக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமா னால் எரிவாயுவைப் பயன்படுத்தும் மின் நிலையங்களை அமைக்க முடியும்.
ஏற்கெனவே நிறுவப்பட்டுத் தயார் நிலை யில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை என்ன செய்வது? அது பாதுகாப்பானதுதான் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரையில் காத்திருப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்றே தோன்று கிறது.
நன்றி: தினமணி (23.9.2011)

பள்ளிகல்வி புதிய இயக்குனர்கள்:
DIRECTORS OF EDUCATION DEPARTMENT OF TAMIL NADU
S.NO DESIGNATION DIRECTORS PHONE NUMBER
1. DIRECTOR OF SCHOOL EDUCATION Mr P.MANI 044-28278796,
044-28232580 (Fax)
2. DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS Mrs D.VASUNDHARADEVI
044-28278286, 9444216250
3. DIRECTOR OF ELEMENTARY EDUCATION Mr A.SANKAR 044-28270169, 9840615670
4. DIRECTOR OF MATRICULATION SCHOOLS Mrs T.H.CHENTHAMIZHSELVI 044-28271169, 9444188868
5. DIRECTOR OF PUBLIC LIBRARIES Mr ANBAZHAGAN 044-28550983,
6. DIRECTOR OF NON FORMAL AND ADULT EDUCATION Mr KARUNAKARAN 044-28272048, 9884802396
7. DIRECTOR OF TEACHERS EDUCATION RESEARCH AND TRAINING Mr K.DEVARAJAN 044-28278742, 9444028803
8. SARVA SHIKSHA ABHIYAN Mrs JEYASHREE RAGHUNANTHAN 044-28278068,
9. TAMIL NADU TEXT BOOK SOCIETY 044-28271468
10. TEACHERS RECRUITMENT BOARD Mr G.ARIOLI 044-28269968,9444028268
11. RMSA Mr Dr R.ELANGOVAN 044-
PFRDA மசோதா எதிர்ப்புக் கருத்தரங்கம் - 26-09-2011 அன்று சென்னை சின்னமலையில் உள்ள செயிண்ட் தாமஸ் கம்யூனிட்டி ஹாலில் - மாலை 2 மணிக்கு
தோழர்களே. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுப் பணிகளை மேற்கொண்டதன் காரணமே, வேலைக்குப் பாதுகாப்பு உண்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் உண்டு என்பதுதான். ஆனால் இன்று பணிப்பாதுகாப்பும், ஓய்வூதியமும் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகி உள்ளது. இந்திய நாட்டின் அரசியல் சட்டம் முதியோருக்கு ஓய்வூதியம் அளிப்பதை வழிகாட்டும் நெறிமுறையாக ஏற்றுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பிலும் ‘ஓய்வூதியம் என்பது பிச்சைக்காரன் தட்டில் போடப்படும் பிச்சைக்காசு அல்ல. ஒவ்வொரு ஊழியனின் சட்டப்படியான உரிமை’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்வேறு அணி திரட்டப்படாத துறைகளில் பணி புரியும் படிக்காத பாமரர்களுக்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஓய்வூதிய திட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களாகவே தங்களுடைய ஓய்வூதியத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். ஆனால் முப்பது வருடம், முப்பத்தி ஐந்து வருடம் என்று உழைத்து ஓடாய்த் தேய்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம் கிடைக்குமா? தோழர்களே, பா.ஜ.க. தலைமையிலான NDA அரசாங்கம் 2002ல் புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை நாடாளூமன்றத்தில் அறிமுகம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினால் மசோதா நாடாளூமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக் குழுவிலும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும், இரயில்வே ஊழியர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் சம்மேளனங்களும் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான UPA-I மீண்டும் நாடாளுமன்றத்தில் ஓய்வூதிய மசோதாவை அறிமுகப்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. எனவே, அன்றைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டி, அந்த மாநாட்டின் முடிவாக ஒரு Executive Orderஐப் போட்டு 1-1-2004 முதல் பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. இந்த புதிய ஓய்வூதிய மசோதாவின்படி, ஊழியர்களிடமிருந்து 10% ஊதியம், பஞ்சப்படி பிடிக்கப்படும். மற்றும் அரசு தன் பங்காக 10% வழங்கும். அரசு, ஊழியர் பங்களிப்பு இரண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இதை நிர்வகிப்பதற்கென்று ஒரு நிதி மேலாளரும், உறுப்பினரும் நியமிக்கப்படுவார்கள். அதன்படி, 1. SBI Funds Pvt.Ltd. 2.UTI Retirement Solutions 3. LIC Pension Fund Pvt. Ltd. ஆகிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணத்தைப் பராமரிப்பதற்கென்று National Securities and Depositories Limited நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் போடப்படும் பணத்திற்கும் அதன் வருமானத்திற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த PFRDA Billல் Section 20(f) படி நம்முடைய ஓய்வூதியத்திற்கு எந்த ஒரு implicit மற்றும் explicit உத்தரவாதம் இல்லை என்றும், சந்தைதான் அதை நிர்ணயிக்கும் என்றும் கூறியுள்ளது. அதாவது பங்குச் சந்தையில் இலாபம் ஈட்டினால் ஒரு வேளை ஓய்வூதியம் கிடைக்கலாம். மேலும் இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும் போது, தான் சேர்த்த 60%ஐ மட்டுமே கையில் பெற முடியும். மீதமுள்ள 40%த்தை பங்குச் சந்தையில் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். VRSல் செல்வோர் 20%த்தைக் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். இப்படி முதலீடு செய்யும் பணத்தின் வருமானத்திற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஒரு வேளை முதலீடு செய்த பிறகு இறந்து போனால், போட்ட பணமும் கிடைக்காது. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. பணத்தை சேமித்து வைத்து விட்டு ஒருவர் இறந்து போனால், அந்தப் பணம் அவருடைய குடும்ப வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்திய திருநாட்டின் சட்டம். ஆனால், இந்தத் திட்டத்திற்கு இந்த சட்டம் பொருந்தாதாம். நாம் வாங்கிக் கொண்டிருக்கும் ஓய்வூதியத் திட்டத்தின் பெயர் Defined Benefit Scheme. இந்தத் திட்டத்தில் என்ன ஓய்வூதியம் கொடுக்கப்படும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டமான Defined Contribution Schemeல் சம்பளத்தில் எவ்வளவு பிடிக்கப்படும் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. நண்பர்களே, தோழர்களே, இப்போது சொல்லுங்கள். இது New Pension Schemeமா? அல்லது No Pension Schemeமா? எனவே இதை முறியடிக்க ஊழியர்களை அணி திரட்டவும், மக்களின் ஆதரவைத் திரட்டவும் ஒரு புதிய ஒற்றுமை உருவாகியுள்ளது. ரயில்வேயில் உள்ள SRMU, DREU, Loco Running Staff, ICF Workers union, பாதுகாப்புத் துறையில் உள்ள AIDF, BSNL ஊழியர் சங்கங்கள், Confederation, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர் இயக்கங்களான TNGEA, TNGEU, Secretariat Employees Union, தமிழ்நாடு அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, AUT, MUTA, GCTA உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் அமைப்புகள், பல ஓய்வூதியம் பெறுவோர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து 10-09-2011 அன்று PFDRA மசோதா எதிர்ப்புக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அதன் தலைவராக SRMU தலைவர் தோழர் C.A. இராஜா ஸ்ரீதர் மற்றும் தோழர் M. துரைப்பாண்டியன் அவர்களை Convenor ஆகவும், அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இணை கன்வீனர்களாகவும் செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரும் 26-09-2011 அன்று மாலை 2 மணிக்கு சென்னை சின்னமலையில் உள்ள செயிண்ட் தாமஸ் கம்யூனிட்டி ஹாலில் PFRDA மசோதா எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெறும். அதன்பின் தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இந்த மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை முறியடிக்கும் விதமாக அன்றைய தினமே இந்த மசோதாவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தோழர்களே, நம்முடைய ஓய்வூதியத்தைப் பாதுகாக்க ஓரணியில் அணி திரள்வோம். புதிய ஒற்றுமையை மேலெடுத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைக் குவிப்போம்.
தோழமையுடன் C.A. இராஜா ஸ்ரீதர்
தோழமையுடன் C.A. இராஜா ஸ்ரீதர்
விடுப்பும் ஊதியமும்:
துய்க்கும் விடுப்பு உரிய ஊதியம்
ஈட்டிய விடுப்பு:
முழு ஊதியம்+ அனைத்து படிகள் (விதி 28-ஏ)
மருத்துவ விடுப்பு:
(ஈட்டா விடுப்பு ) முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(விதி 28-ஏ)
சொந்த காரண ஈட்டா விடுப்பு:
அடிப்படை ஊதியம் 50%+
அனைத்து படிகள் (விதி 28-ஏ)
ஒப்புவிப்பு விடுப்பு:
(ஈட்டிய விடுப்பு) முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை
ஒப்புவிப்பு விடுப்பு சொந்த காரண விடுப்பு:
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
அ.வி. 18.85 எ & (விதி 23-எ)
மகப்பேறு விடுப்பு:
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
அ.வி. 18.85 எ & (விதி 23-எ)
ஊதியமில்லா விடுப்பு:
ஊதியம் இல்லை
முடியாமை விடுப்பு:
Disability Leave முதல் 4 மாதங்கள் =முழு ஊதியம் +படிகள்
அடுத்த 2 மாதங்கள் =அரை ஊதியம்&படிகள் (அ.வி. 83& 83 ஏ)
மருத்துவமனை விடுப்பு (Hospital) :
முதல் 3 மாதங்கள் =முழு ஊதியம்
அடுத்த 3 மாதங்கள் =அரை ஊதியம் (அ.வி. 101 ஆ 2)
தற்செயல் விடுப்பு &சிறப்பு தற்செயல் விடுப்பு:
முழு ஊதியம்+ அனைத்து படிகள்
ஊதியமில்லா விடுப்பும் கருணைத்தொகையும்:
மருத்துவ விடுப்பு 540 நாள்கள் எடுத்துவிட்ட தொழு/காச/புற்று நோயாளி பணியாளருக்கு ஊதிய வேறுபாடின்றி 24 மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பிளிருக்கும்போது மாதந்தோறும் ரூ 250 கருணைத்தொகையாக வழங்கப்படும் (அரசாணை ப.நி.சீ. நாள் 17.10.88)
தத்தெடுப்பதற்கு: வளர்ப்பதற்கு விடுப்பு:
முழு ஊதியம்+ அனைத்து படிகள் (அரசாணை 342 ,சமூக நலம் நாள் 08.12.95 ) (அரசு கடிதம் 20300 சமுக நலம் 96-1 நாள் 05.09.96 )

ஆசிரியர் கவுன்சிலிங் முன்னுரிமை: "ஸ்பவுஸ்' கட்டுப்படுத்த திட்டம்
ஆசிரியர் கவுன்சிலிங் நடைமுறைகளில், "ஸ்பவுஸ்' சான்றிதழ் முன்னுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் கவுன்சிலிங், பலருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
• ராணுவத்தில் பணிபுரிவோரின் கணவன், மனைவி,
•கண்பார்வை இல்லாதவர்,
•விதவை,
•40 வயதுவரை மணமாகாத முதிர்கன்னி,
•மூன்று சக்கர வாகனம், ஊன்றுகோல் துணையுடன் நடக்கக் கூடிய மாற்றுத்திறனாளி,
•இதய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்,
•மனவளர்ச்சி, உடல்நலம் குன்றிய குழந்தையின் பெற்றோர்
போன்றவற்றின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் கணவர், மனைவி, தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் (ஸ்பவுஸ்) சான்றிதழ் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் சலுகை பெற முடியும். பலர் செல்வாக்கை பயன்படுத்தி, ஆண்டுதோறும் விரும்பிய பள்ளிகளுக்கு இச்சான்றிதழ் மூலம் இடமாறுதல் பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு, பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் 2009(எண் 148) அரசாணையின்படி, மாறுதலுக்கான கட்டுப்பாடுகள் கையாளப்பட்டது. தற்போது இதில் சில திருத்தங்களை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. "ஸ்பவுஸ்' முன்னுரிமையை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற உள்ளன.
நன்றி!

டூ வீலர் வைத்திருந்தால் 4 சிலிண்டர் தான்! மக்கள் தலையில் இடியை இறக்குகிறது மத்தியஅரசு
புதுதில்லி, செப்.13-
மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்வதை குறைக்க பிரணாப் முகர்ஜி தலைமை யிலான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு 16ம் தேதி (வெள்ளி) ஆலோசனை செய்கிறது. இதற்கு முன்னர் இந்தக்குழு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கூடி மண்ணெண் ணெய், எல்பிஜி எரிவாயு, உரம் மீதான நேரடி மானிய மாற்றம் குறித்து நடவடிக்கை பிரிவு அளித்த பரிந்துரையை ஆலோசனை செய் தது. அந்தக் கூட்டத்தில் மானிய விலை சமையல்எரிவாயு சிலிண்டர் கள் எண்ணிக்கையை வீடுகளுக்கு குறைப்பது தொடர்பாக முடிவெடுக் காமல் தள்ளிவைத்தனர். தற்போதை யக் கூட்டத்தில் மானிய விலை சிலிண்டர்களைக் குறிக்கும் முடிவு எடுக்கப்பட்டால், தில்லியில் வீடு களுக்கு ரூ.395.95 விலையில் 4 முதல் 6 சிலிண்டர்கள் வரை அளிக்கப் படும். அதற்கு மேல் பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.666 செலுத்த வேண்டியிருக்கும். கட்டுப் படுத்தப்பட்ட சிலிண்டர் சப்ளை, சொந்தக்கார், 2 சக்கர வாகனம், சொந்தவீடு வைத்திருப்பவர்களுக் கும் வருமானவரிப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களுக்கும் பொருந்தும். பொது விநியோகத் துறை சமையல் எரிவாயு விநியோ கஸ்தர்கள் புள்ளி விவரப்படி, ஒரு ஆண்டிற்கு வீடுகளில் சராசரியாக 20-30 சிலிண்டர்கள் பயன்படுத்தப்படு கின்றன. மானிய விலை சமையல் எரி வாயு பெருமளவு வர்த்தக நிறுவன செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படு வதாக தெரியவருகிறது என குறிப் பிடப்பட்டுள்ளது. வர்த்தக பயன் பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தை விலையில் வேறுவிதமான அளவு சிலிண்டர் களுடன் விற்பனை செய்யப்படுகிறது. மானியவிலை சிலிண்டர்களை வீடு களுக்கு விநியோகம் செய்வதை குறைப்பதன் மூலம், அரசு நிறுவனங் களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக் கலாம் என கூறப்படுகிறது.
சமையல் எரிவாயு விற்பனை இழப்பு மட்டுமல்லாமல் டீசல், மண் ணெண்ணெய் ஆகியவற்றின் விற்ப னையால் ஏற்படும் இழப்பு குறித்தும் அமைச்சர்கள் குழு ஆலோசிக்கிறது. இந்த அத்தியாவசிய எரிபொருள் விற்பனையால் ஏற்படும் இழப்பை பாதியாக குறைக்க அமைச்சர்கள் குழு ஆலோசிக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய வருவாய் இழப்பு பகிர்வு நடைமுறையில் மாற்றம் செய்யவேண்டுமா என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. (பிடிஐ)

திருத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்தேர்வுப் பட்டியல் வெளியீடு
சென்னை:மாறுதலுக்குப் பின், புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஆறு பாடங்களுக்கு 1,110 பேரும், தொடக்க கல்வித்துறையில் மூன்று பாடங்களுக்கு 216 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள, 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் தேர்வுப் பட்டியலை, கடந்த பிப்ரவரி இறுதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்நிலையில், மாநில பதிவு மூப்பில் விடுபட்டவர்களின் பட்டியலை, காலதாமதமாக வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அளித்தது.இதனால், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டன. அப்பட்டியலில் இருந்த பலர், தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் நிலை ஏற்பட்டதால், ஏற்கனவே தயாரித்திருந்த தேர்வுப் பட்டியலை திருத்தி, புதிய பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதன்படி, பாட வாரியாக புதிய பட்டியலை தயாரித்துள்ளது.
முதற்கட்டமாக, பள்ளிக் கல்வித்துறையில், தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியில் ஆகிய ஆறு பாடங்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. மீதமுள்ள பாடங்களுக்கு, பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.
பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழில் 210 பேர், இயற்பியலில் 444, தாவரவியலில் 193, விலங்கியலில் 58 மற்றும் புவியியலில் 12 பேர் என மொத்தம் 1,110 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர் விவரங்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண)வெளியிடப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறைக்கு, இயற்பியலில் 116 பேர், தாவரவியலில் 50 பேர், விலங்கியலில் 50 பேர் என 216 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டில், 29 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இன சுழற்சிகளில் 131 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பணியிடங்கள், கோர்ட் உத்தரவுப்படி, "ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறையில், எட்டு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை என்றும், 9 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியிடம்,"ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் அரசு தெளிவு : இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பகுதி நேர பணியிடமாகாது
முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஓவிய ஆசிரியர்கள், தையல், கைவேலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய, மூன்று பிரிவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, அதிகபட்சமாக, 1,221 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வகையில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான பணியிடங்கள், அரியலூர், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
பகுதி நேர ஆசிரியர்களாக ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தையல், கை வேலைப்பாடு ஆகிய, மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே, தேர்வு செய்யப்பட இருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது. மாணவர்கள், கல்வி கற்பதற்கு தேவைப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தேர்வு செய்யப்படவில்லை. பகுதி நேர பணியில் சேர, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், இவர்கள் தேர்வு செய்யப்படாதது, அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறும் போது, "இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள், முறையான அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணியிடங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களை பணி நியமனம் செய்துவிட்டால், கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்காது. அதனால் தான், பகுதி நேர ஆசிரியர் பட்டியலில், இவர்கள் இடம் பெறவில்லை' என்றனர். மொத்த பணியிடங்களான 16 ஆயிரத்து, 549ல், ஓவிய ஆசிரியர்கள் 5,253 பேரும், உடற்கல்வி ஆசிரியர்கள் 5,392 பேரும், தையல் உள்ளிட்ட ஆசிரியர்கள் 5,904 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 30 மாவட்டங்களுக்கான பணியிட ஒதுக்கீட்டில், அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, 1,221 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மட்டுமில்லாமல், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு, முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 944 பணியிடங்கள், வேலூர் மாவட்டத்திற்கு, 1,093 பணியிடங்கள், கடலூர் மாவட்டத்திற்கு, 706 பணியிடங்கள், தர்மபுரிக்கு, 535 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சத்துணவுத் திட்டமும் ஊழியர் எதிர்பார்ப்பும்
பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு வயிற்றுப்பசி ஒரு தடையாக இருந்திடக்கூடாது. இவர்க ளுக்கு ஒரு வேளை உணவாவது நிறை வாக கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும், குழந்தைகளு க்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அவர்களிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவினை சரி செய்தல், அவர்களை கல்வி கற்க தூண்டி படிப்பை இடையிலேயே நிறுத்துவதை தவிர்க் கவும், மாணவர்களின் அன்றாட வருகை யை உத்தரவாதப்படுத்துவதும் போன்ற சீரிய நோக்கங்களின் அடிப்படையில் 1982ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழகத்தில் 1.7.1982 முதல் முதலமைச்சர் குழந்தை கள் சத்துணவுத் திட்டம் என்று அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக் கங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று மகத்தான திட்டமாக உருவெடுத்துள்ளது.
திட்டத்தின் விரிவாக்கம்
1.7.1982 முதல் ஊரகப் பகுதிகளிலு ள்ள குழந்தைகள் நல மையங்களில் 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் 5 முதல் 9 வயதிற்கு உட்பட்ட ஆரம்பப் பள்ளி குழந்தைகள் ஆகியோர் பயனடை யும் வகையில் துவங்கப்பட்டது. பின்னர் 15.9.1982 முதல் நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1984 முதல், 10 முதல் 15 வயது வரை யிலான பள்ளி மாணவ, மாணவிக ளும் பயனடையும் வகையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டது.
சமூக நல கட்டுப்பாட்டின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பள்ளி சத்துணவு மையங் களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையரின் கட்டுப் பாட்டின் கீழ் 2 முதல் 5 வயது குழந்தை களுக்கான குழந்தைகள் நல மையங்க ளும் செயல்பட்டு வருகின்றன.
திட்டத்தின் பயனாளிகள்
தமிழகம் முழுவதும் சுமார் 51 ஆயிரம் குழந்தைகள் நல மையங்களும் அதில் 2 முதல் 5 வயது வரை சுமார் 12 லட்சம் குழந்தைகளும், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பயனடைந்து வரு கின்றனர்.
இதே போல் ஊரக பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்க ளில் சுமார் 54 லட்சம் மாணவ, மாணவி களும் தினந்தோறும் பயனடைந்து வரு கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பயனாளிகளுக்கு மேல் பயன் பெறும் முன்னோடி திட்டமாக இத்திட்டம் செயல்பட்டு வருகின்றது.
3.6.1989 முதல் 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் வாரம் ஒருமுறை வேகவைத்த முட்டை யுடனும் 15.7.2006முதல், வாரம் மூன்று முட்டைகளுடன், இது தவிர வாரம் ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை) வேகவைத்த 20 கிராம் கருப்பு கொண்டை கடலை அல்லது 20 கிராம் வேக வைத்த பச்சை பயறும், வெள்ளிக்கிழமைகளில் 20 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கும் வழங் கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து 15.7.2008 முதல் முட்டை சாப்பிடாத 2 வயது முதல் 15 வயது வரை யிலான குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு முட்டைக்குப் பதி லாக, முட்டை வழங்கும் நாட்களில் வாழைப்பழமும், 15.9.2010 முதல், வாரத்தில் ஐந்து பள்ளி வேலை நாட்களி லும் முட்டையுடன் உணவு வழங்கப் பட்டு வருகின்றது. இது தவிர மாணவர் களுக்கு ஊட்டச்சத்து குறைவினால் ஏற் படும் இரும்புச் சத்து குறைவு/இரத்த சோகை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் நீக்கிடவும் சாதாரண உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பு சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பள்ளி மையத்திற்கு ஒரு அமைப் பாளர், ஒரு சமையலர் மற்றும் ஒரு சமை யல் உதவியாளர் என்ற அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் சுமார் 42 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பள்ளி சத்துணவு மையங் களில் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளில் 80 சதவீதத்திற்கு மேல் பெண்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
திட்டத்தின் பெருமை
நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 22ல் தமிழக முதல்வர் கல்வி மானியக் கோரிக்கைக் கான கேள்வி-பதில் நேரத்தில், எம்.ஜி. ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் நாட்டிற்கே முன்னோடியான திட்டம் எனவும், இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது எனவும், இந்தியாவிலேயே இதற்கு ஈடான திட்டம் எதுவும் இல்லை என்றும் இத்திட்டத் தைப் பற்றி பெருமையாக கூறியுள்ளார். இப்படி பெருமைக்குரிய இத்திட்டத்தில் பணியாற்றுவது என்பது ஊழியர்களுக் கும் பெருமையே.
திட்டத்தில் ஊழியர் நிலையும்-எதிர்பார்ப்பும்
திட்டம் துவங்கப்பட்டு கால் நூற் றாண்டை கடந்தும் அரசின் மிகப்பெரும் நிரந்தரமான இத்திட்டத்தில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் முழுநேர அரசு ஊழி யர்களாக அறிவிக்கப்படாமல், பணி நிரந் தரமின்றி பணி பாதுகாப்பில்லாமல் பணி யாற்றுகின்றனர். இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான பல உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்பட்டு வருகிறது. இன்றுள்ள கடுமையான விலைவாசி உயர்வில் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாத வரையறுக்கப்படாத ஊதியத்திலும், பணி ஓய்வுக்கு பின் சட்டப்பூர்வ ஓய்வூதியம் இல்லாத நிலையிலும் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த கால ஆட்சியாளர்கள், நடு ஆற்றில் தவிக்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் படகில் பத்திரமாக கரை சேர்ப்பேன் என்றும், பள்ளி இறுதி வகுப் பில் தேரியவர்களை பல்வேறு அரசுத் துறை காலிப்பணியிடங்களில் இள நிலை உதவியாளர்களாக பணியமர்த்த பரிசீலனை உள்ளது எனவும் பல்வேறு அறிவிப்புகளை வழங்கியது என்பது அம லாகாமல் தண்ணீரில் எழுதப்பட்ட வையாகவே ஆனது.
இந்நிலையில் தான் ஊழியர்கள் தங்க ளுடைய வாழ்வாதார கோரிக்கையான வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சட் டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியம் உள் ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க 2010 ஆகஸ்ட் 30ல் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட் டனர். அப்போது அன்றைய ஆட்சியாளர் கள் போராட்ட நடவடிக்கைகளை கொச் சைப்படுத்தி விமர்சனப்படுத்தியதோடு, காவல்துறையை ஏவிவிட்டு பெண்கள் என்றும் பாராமல் கடுமையான அடக்கு முறைகளை தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களிடம் கையாண்டனர். பொய் யான காரணம் கூறி சங்கத் தலைவர்கள் மீது எதேச்சதிகாரப் போக்கில் பணி நீக்க நடவடிக்கையும் எடுத்து, போட்டி சங் கங்களை உருவாக்குவதற்கான முயற்சி களையும் அந்த அரசு மேற்கொண்டது.
அன்றைய காலக்கட்டத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சி தலைமைகளும், தொழிற்சங்க தலைமை களும், துறைவாரியான தோழமை மற்றும் பொதுச் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தந்து அறிக்கைகள் விடுத்தன. அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வரும் இன்றைய முதல்வரும் தனது அறிக்கையில் போராட்டம் நியாயம் என் றும், போராடும் தலைமையை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், விரைவில் அஇஅதி முக தலைமையிலான எம்.ஜி.ஆர். ஆட்சி மலரும், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில், சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் முன்னுரி மையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும், தேர்தல் பிரச் சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந் தால் சத்துணவு ஊழியர்களின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படும் என்ற அறி விப்புகளும், ஒட்டுமொத்த ஊழியர்களின் ஆதரவோடு ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்ததோடு, ஊழியர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பை யும் உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து, வரையறுக்கப் பட்ட ஊதிய விகிதம் மற்றும் சட்டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியத்தினை வழங்கும் அறிவிப்புகளை நடைபெறுகின்ற சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் வழங்கி, சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பார் என்பதே ஒட்டுமொத்த சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-கட்டுரையாளர், சத்துணவு
ஊழியர் சங்க பொதுச்செயலாளர்

Cabinet Committee to decide on additional dearness allowance hike tomorrow, 8th September 2011
Cabinet Committee to decide on additional dearness allowance hike tomorrow, 8th September 2011
The Union Cabinet Committee tomorrow may decide on raising additional dearness allowance to central government employees, official sources said.
The Union Cabinet Committee likely to approve the second additional instalment of 7% dearness allowance for this year to Central Government employees and dearness relief to Central Government pensioners due from 1.7.2011.
More than 50 lakh serving employees and 38 lakh pensioners are expecting eagerly for this announcement to compensate the price hike in essential commodities and other goods.

பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்
சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
காலை அல்லது பிற்பகல் என அரை நாள் வேலை,தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கும் வகையில்,சமீபத்தில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 775 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், இதற்காக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்தும் முதல்வர் அறிவித்தார்.
மேலும், கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்காக, 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன்கீழ்,உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கை வேலைப்பாடு, தையல் ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பல அரசுப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 70, 80 மாணவர்கள் இருக்கின்றனர். இதுபோன்ற பள்ளிகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் ஏற்கனவே அடையாளம் கண்டு, மாவட்டம் வாரியாக பட்டியல் எடுத்துள்ளது. அதன்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பணி நியமனம் எப்படி? பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள், 32 மாவட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்ற விவரங்களையும் பட்டியலிட்டு, அதை பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையிடம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவு மூப்பு பட்டியலை பெற்று,சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், அவர்களை அந்தந்த உள்ளூர் மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, இரு துறைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாவட்டத்தில் அதிக காலிப் பணியிடங்கள் இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, &'எந்த முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறித்து, இதுவரை முடிவு எடுக்கவில்லை. அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும்&' என்றார்.
சம்பளம் எவ்வளவு? பகுதி நேர ஆசிரியர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் வழங்கும். மாவட்டம் வாரியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
வேலை நேரம்: ஆசிரியர்களின் பணியைப் பொருத்து, காலை அல்லது பிற்பகல் என, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அரை நாள் வேலை செய்யும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் பணி நியமனங்கள், அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு, பட்டதாரிகளிடையே படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

G.O. 2D no. 6 February 22, 2011-மாற்றுத் திறனாளிகள் நலம் - தொகுதி IV -ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் - மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பின்னடைவு பணியிடங்களைத் (Backlog Vacancies ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக சிறப்புப் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்தல் - ஆணை
G.O. 2D no. 6 February 22, 2011/சிறப்பு போட்டித் தேர்வு - மாற்றுத் திறனாளிகள் நலம் - தொகுதி IV -ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் - மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பின்னடைவு பணியிடங்களைத் (Backlog Vacancies ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக சிறப்புப் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க சில திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு:
சென்னை, ஆக.26: உண்மையான சமச்ச்சீர் கல்வி கிடைக்க அரசு சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.அதன்படி, 65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் படுவதாகத் தெரிவித்தார். மேலும், 9735 பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப் படவுள்ளதாகத் தெரிவித்தார். பள்ளிகளில் தொழிற்கல்வி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 16549 பகுதி நேர ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார். இதனால் 6,7,8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். மேலும், பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என சீரமைப்பு மேற்கொள்வதற்கு, ரூ.1082.71 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார் முதல்வர்.நிலை உயர்த்தப்பட்ட மேல் நிலைப்பள்ளிகளில் 3187 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.எல்லா மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் ஒரே மாதிரியாக அளிக்கப்படுவது போல், எல்லாருக்கும் ஒரே மாதிரியாக புத்தகப் பைகள் கொடுக்கப்படவுள்ளன. கணக்கு உபகரணப் பெட்டி (ஜியாமெண்ட்ரி பாக்ஸ்), வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடம் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களாக, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5000 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.ஒரே வருடத்தில் புத்தகத்தை மூன்று பருவங்களுக்கு மூன்று தொகுப்பாகப் பிரித்து, முப்பருவ முறை கொண்டுவரப்படும் என்றார் முதல்வர். இதன்மூலம் பள்ளிக் குழந்தைகள் புத்தகச் சுமையைக் குறைக்க முடியும் என்றும், எளிதாகக் கையாள இயலும் என்றும் தெரிவித்தார்.பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் பட்டியல், இனி, மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு, தொழில்நுட்பம் சார் ரகசியக் குறியீடு இருக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது.மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்க 7 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார் முதல்வர்.அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி வகுப்பு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த, தகவல் தொழில்நுட்ப திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது, பள்ளி ஆசிரியர்களுக்கான திட்டமாக செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்களுக்கான தனிப் பயிற்சி திட்டம் உருவாக்கப்படும்.அனைத்து மாணவர்களுக்கும் தரமான கணினி மூலமான நவீனக் கல்வி கிடைக்க, செயற்கைக் கோள் மூலம் பாடங்களைப் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மெட்ரிகுலேஷன் என்ற பெயரை நீக்க மாட்டோம்- மெட்ரிக் பள்ளிகள் பிடிவாதம்
சென்னை: மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டன் என்ற பெயர்களை விட்டுத் தர மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடருவோம் என்று தமிழ்நாடு நர்சரி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தரமற்ற சமச்சீர் கல்வித் திட்டத்தைத்தான் நாங்கள் எதிர்த்து வந்தோம். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம்.
அதேசமயம், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தனியாரிடமே சமச்சீர் கல்வி புத்தகங்களை வாங்குவோம். இதுதொடர்பாக ஏற்கனவே அரசு அனுமதித்துள்ளது. தமிழ் புத்தகங்களை மட்டும் அரசிடமிருந்து பெறுவோம்.
எங்களது பள்ளிகளில் மெட்ரிகுலேஷன், ஓரியண்டன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற பெயர்களை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அவைதான் எங்களது உயிர்நாடி. அவற்றை விட மாட்டோம். அவற்றை நீக்குமாறு அரசு கூறினால் நாங்கள் வழக்கு தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.
NEW G.O 195
அரசாணை எண் : 195 ஒய்வுதியதரர் மரhttp://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_9_2011.pdfுத்துவ நிதி :
25 காரணங்கள் என்னென்ன? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்!
புதுடெல்லி : சமச்சீர் கல்வியை 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ‘அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கக்கூடாது’ என்று தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. பல தரப்பினரும் நடத்திய அமைதி போராட்டத்துக்கு இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஒரே பாடதிட்டம் அமலாகிறது. முதல்வர் ஜெயலலிதாவும், சமச்சீர் கல்வி தீர்ப்பை உடனே ஏற்பதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
முந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை நிறுத்த சட்ட திருத்தம் கொண்டு வந்து, பழைய பாடத்திட்டத்தை அமல்படுத்த அதிமுக அரசு முயற்சித்தது. இதை எதிர்த்து 10 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 18ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘உடனடியாக பாடபுத்தகங்களை வழங்க ஆரம்பிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறியது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்தது.
ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டிலும் அரசு கோரிய தடையை வழங்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவின் மீது 26ம் தேதி முதல் விசாரணை நடந்து முடிந்தது. இதற்கிடையே பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் அச்சிடும் பணியை அரசு ஒரு புறம் மேற்கொண்டு வந்தது.
ஆனால், நீதிமன்றம் கூறிய தீர்ப்பின்படி நடந்து கொள்ளாத தமிழக அரசு, பாடப்புத்தகங்களை வழங்காமலே காலம் கடத்தி வந்தது. உயர் நீதிமன்றம் சொன்னபடி ஜூலை 22ம் தேதிக்குள்ளும் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி ஆகஸ்ட் 2ம் தேதிக்குள்ளும் புத்தகம் வழங்கவில்லை. ஆனால், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படியும் புத்தகம் கொடுக்கவில்லை. இதற்கிடையே பழைய பாடப்புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களில் இருப்பு வைக்கும் பணியை மட்டுமே பள்ளிக் கல்வித் துறை செய்து வந்தது.
இதற்காக ஸீ200 கோடி செலவாகியுள்ளது. 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட புத்தகங்கள் என்பதால் அதை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர். மற்ற வகுப்புகளுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் வழங்காமல் உள்ளதால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தகம் வழங்க வேண்டும் என்று பள்ளிகளில் முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடந்த விசாரணையின்போது, ‘இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பழைய பாடப்புத்தகங்களை வழங்க உள்ளது’ என்று அரசு தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டது. மேலும் பாடப்புத்தகங்களை 10ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அடுத்த கட்ட கெடுவையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும் தமிழக அரசு புத்தகங்களை வழங்காமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக்வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினர். 3 நீதிபதிகளும் சமச்சீர் கல்வி குறித்து ஒருமித்த கருத்தையே தெரிவித்து இருந்தனர். நேற்று காலை 10.34 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு மற்றும் பொது மக்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துகளில் 25 காரணங்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. வரும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர். இது தவிர தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மெட்ரிக். பள்ளிகள் அத்தியாயம் முடிகிறது
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் முதல் முறையாக 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் ஆலமரம் போல பரந்து, விரிந்து நகரங்கள் முதல் கிராமங்கள் வரை என்று 16 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மெட்ரிக் பள்ளிகளின் அத்தியாயம் முடிந்து, பொதுக் கல்வி வாரியத்தின் கீழ் இயங்குகின்றனர்.
தனியார் பள்ளிகள் பெயர் மாறும்
சமச்சீர் கல்வி முறையை கொண்டு வரும் போதே தற்போது நடைமுறையில் இருந்து வந்த 4 கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து பொதுக் கல்வி வாரியத்தை அரசு உருவாக்கியது. இதற்காக ஒரு சட்டத்தையும் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி இனிமேல் தமிழகத்தில் ஒரே கல்வி வாரியம் தான் செயல்படும். 4 கல்வி முறைகள் இருக்காது. மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ இந்தியன் என இதுவரை இருந்து வந்த கல்வி முறைகளுக்கு இனிமேல் தனித்தனி இயக்குநர்கள் இருக்க வாய்ப்பில்லை.
தனியார் பள்ளிகளும், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் என்றெல்லாம் பெயர்களில் இயங்காது. பெயர்கள் பொதுவாக இருக்கும். எனவே மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி பள்ளிகள் இனிமேல் பொதுக்கல்வி வாரியத்தின் கீழ் வந்துவிடும். சமச்சீர் கல்வி அனைத்து வகுப்புகளுக்கும் வந்துவிட்டால் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு நடக்கும் காலங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்தான் கேள்வித்தாளை முடிவு செய்வார்கள்.
25 காரணங்கள் என்னென்ன? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்
சமச்சீர் கல்வி வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம்.
அவை வருமாறு:
1. தமிழகத்தில் தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியில் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.
2. கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.
3. சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
4. கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.
5. கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.
6. புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.
7.தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் கல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
8. தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
9. சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
10. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.
11. கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
12. தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.
13. தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை.
14. சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.
15. பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.
16. ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.
17. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
18. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.
19. கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.
20. சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
21. ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவைத்துள்ளது.
22. தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.
23. சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.
24. ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.
25. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.
சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.
ஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்கிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here