சத்துணவுத் திட்டமும் ஊழியர் எதிர்பார்ப்பும்

பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு வயிற்றுப்பசி ஒரு தடையாக இருந்திடக்கூடாது. இவர்க ளுக்கு ஒரு வேளை உணவாவது நிறை வாக கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும், குழந்தைகளு க்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அவர்களிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவினை சரி செய்தல், அவர்களை கல்வி கற்க தூண்டி படிப்பை இடையிலேயே நிறுத்துவதை தவிர்க் கவும், மாணவர்களின் அன்றாட வருகை யை உத்தரவாதப்படுத்துவதும் போன்ற சீரிய நோக்கங்களின் அடிப்படையில் 1982ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழகத்தில் 1.7.1982 முதல் முதலமைச்சர் குழந்தை கள் சத்துணவுத் திட்டம் என்று அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக் கங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று மகத்தான திட்டமாக உருவெடுத்துள்ளது.




திட்டத்தின் விரிவாக்கம்



1.7.1982 முதல் ஊரகப் பகுதிகளிலு ள்ள குழந்தைகள் நல மையங்களில் 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் 5 முதல் 9 வயதிற்கு உட்பட்ட ஆரம்பப் பள்ளி குழந்தைகள் ஆகியோர் பயனடை யும் வகையில் துவங்கப்பட்டது. பின்னர் 15.9.1982 முதல் நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1984 முதல், 10 முதல் 15 வயது வரை யிலான பள்ளி மாணவ, மாணவிக ளும் பயனடையும் வகையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டது.



சமூக நல கட்டுப்பாட்டின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பள்ளி சத்துணவு மையங் களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையரின் கட்டுப் பாட்டின் கீழ் 2 முதல் 5 வயது குழந்தை களுக்கான குழந்தைகள் நல மையங்க ளும் செயல்பட்டு வருகின்றன.



திட்டத்தின் பயனாளிகள்



தமிழகம் முழுவதும் சுமார் 51 ஆயிரம் குழந்தைகள் நல மையங்களும் அதில் 2 முதல் 5 வயது வரை சுமார் 12 லட்சம் குழந்தைகளும், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பயனடைந்து வரு கின்றனர்.



இதே போல் ஊரக பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்க ளில் சுமார் 54 லட்சம் மாணவ, மாணவி களும் தினந்தோறும் பயனடைந்து வரு கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பயனாளிகளுக்கு மேல் பயன் பெறும் முன்னோடி திட்டமாக இத்திட்டம் செயல்பட்டு வருகின்றது.



3.6.1989 முதல் 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் வாரம் ஒருமுறை வேகவைத்த முட்டை யுடனும் 15.7.2006முதல், வாரம் மூன்று முட்டைகளுடன், இது தவிர வாரம் ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை) வேகவைத்த 20 கிராம் கருப்பு கொண்டை கடலை அல்லது 20 கிராம் வேக வைத்த பச்சை பயறும், வெள்ளிக்கிழமைகளில் 20 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கும் வழங் கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து 15.7.2008 முதல் முட்டை சாப்பிடாத 2 வயது முதல் 15 வயது வரை யிலான குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு முட்டைக்குப் பதி லாக, முட்டை வழங்கும் நாட்களில் வாழைப்பழமும், 15.9.2010 முதல், வாரத்தில் ஐந்து பள்ளி வேலை நாட்களி லும் முட்டையுடன் உணவு வழங்கப் பட்டு வருகின்றது. இது தவிர மாணவர் களுக்கு ஊட்டச்சத்து குறைவினால் ஏற் படும் இரும்புச் சத்து குறைவு/இரத்த சோகை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் நீக்கிடவும் சாதாரண உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பு சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.



ஒரு பள்ளி மையத்திற்கு ஒரு அமைப் பாளர், ஒரு சமையலர் மற்றும் ஒரு சமை யல் உதவியாளர் என்ற அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் சுமார் 42 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பள்ளி சத்துணவு மையங் களில் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளில் 80 சதவீதத்திற்கு மேல் பெண்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.



திட்டத்தின் பெருமை



நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 22ல் தமிழக முதல்வர் கல்வி மானியக் கோரிக்கைக் கான கேள்வி-பதில் நேரத்தில், எம்.ஜி. ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் நாட்டிற்கே முன்னோடியான திட்டம் எனவும், இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது எனவும், இந்தியாவிலேயே இதற்கு ஈடான திட்டம் எதுவும் இல்லை என்றும் இத்திட்டத் தைப் பற்றி பெருமையாக கூறியுள்ளார். இப்படி பெருமைக்குரிய இத்திட்டத்தில் பணியாற்றுவது என்பது ஊழியர்களுக் கும் பெருமையே.



திட்டத்தில் ஊழியர் நிலையும்-எதிர்பார்ப்பும்



திட்டம் துவங்கப்பட்டு கால் நூற் றாண்டை கடந்தும் அரசின் மிகப்பெரும் நிரந்தரமான இத்திட்டத்தில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் முழுநேர அரசு ஊழி யர்களாக அறிவிக்கப்படாமல், பணி நிரந் தரமின்றி பணி பாதுகாப்பில்லாமல் பணி யாற்றுகின்றனர். இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான பல உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்பட்டு வருகிறது. இன்றுள்ள கடுமையான விலைவாசி உயர்வில் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாத வரையறுக்கப்படாத ஊதியத்திலும், பணி ஓய்வுக்கு பின் சட்டப்பூர்வ ஓய்வூதியம் இல்லாத நிலையிலும் பணியாற்றி வருகின்றனர்.



கடந்த கால ஆட்சியாளர்கள், நடு ஆற்றில் தவிக்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் படகில் பத்திரமாக கரை சேர்ப்பேன் என்றும், பள்ளி இறுதி வகுப் பில் தேரியவர்களை பல்வேறு அரசுத் துறை காலிப்பணியிடங்களில் இள நிலை உதவியாளர்களாக பணியமர்த்த பரிசீலனை உள்ளது எனவும் பல்வேறு அறிவிப்புகளை வழங்கியது என்பது அம லாகாமல் தண்ணீரில் எழுதப்பட்ட வையாகவே ஆனது.



இந்நிலையில் தான் ஊழியர்கள் தங்க ளுடைய வாழ்வாதார கோரிக்கையான வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சட் டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியம் உள் ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க 2010 ஆகஸ்ட் 30ல் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட் டனர். அப்போது அன்றைய ஆட்சியாளர் கள் போராட்ட நடவடிக்கைகளை கொச் சைப்படுத்தி விமர்சனப்படுத்தியதோடு, காவல்துறையை ஏவிவிட்டு பெண்கள் என்றும் பாராமல் கடுமையான அடக்கு முறைகளை தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களிடம் கையாண்டனர். பொய் யான காரணம் கூறி சங்கத் தலைவர்கள் மீது எதேச்சதிகாரப் போக்கில் பணி நீக்க நடவடிக்கையும் எடுத்து, போட்டி சங் கங்களை உருவாக்குவதற்கான முயற்சி களையும் அந்த அரசு மேற்கொண்டது.



அன்றைய காலக்கட்டத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சி தலைமைகளும், தொழிற்சங்க தலைமை களும், துறைவாரியான தோழமை மற்றும் பொதுச் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தந்து அறிக்கைகள் விடுத்தன. அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வரும் இன்றைய முதல்வரும் தனது அறிக்கையில் போராட்டம் நியாயம் என் றும், போராடும் தலைமையை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், விரைவில் அஇஅதி முக தலைமையிலான எம்.ஜி.ஆர். ஆட்சி மலரும், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில், சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் முன்னுரி மையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும், தேர்தல் பிரச் சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந் தால் சத்துணவு ஊழியர்களின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படும் என்ற அறி விப்புகளும், ஒட்டுமொத்த ஊழியர்களின் ஆதரவோடு ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்ததோடு, ஊழியர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பை யும் உருவாக்கியுள்ளது.



இத்திட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து, வரையறுக்கப் பட்ட ஊதிய விகிதம் மற்றும் சட்டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியத்தினை வழங்கும் அறிவிப்புகளை நடைபெறுகின்ற சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் வழங்கி, சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பார் என்பதே ஒட்டுமொத்த சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



-கட்டுரையாளர், சத்துணவு



ஊழியர் சங்க பொதுச்செயலாளர்





Popular Posts