டூ வீலர் வைத்திருந்தால் 4 சிலிண்டர் தான்! மக்கள் தலையில் இடியை இறக்குகிறது மத்தியஅரசு

புதுதில்லி, செப்.13-


மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்வதை குறைக்க பிரணாப் முகர்ஜி தலைமை யிலான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு 16ம் தேதி (வெள்ளி) ஆலோசனை செய்கிறது. இதற்கு முன்னர் இந்தக்குழு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கூடி மண்ணெண் ணெய், எல்பிஜி எரிவாயு, உரம் மீதான நேரடி மானிய மாற்றம் குறித்து நடவடிக்கை பிரிவு அளித்த பரிந்துரையை ஆலோசனை செய் தது. அந்தக் கூட்டத்தில் மானிய விலை சமையல்எரிவாயு சிலிண்டர் கள் எண்ணிக்கையை வீடுகளுக்கு குறைப்பது தொடர்பாக முடிவெடுக் காமல் தள்ளிவைத்தனர். தற்போதை யக் கூட்டத்தில் மானிய விலை சிலிண்டர்களைக் குறிக்கும் முடிவு எடுக்கப்பட்டால், தில்லியில் வீடு களுக்கு ரூ.395.95 விலையில் 4 முதல் 6 சிலிண்டர்கள் வரை அளிக்கப் படும். அதற்கு மேல் பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.666 செலுத்த வேண்டியிருக்கும். கட்டுப் படுத்தப்பட்ட சிலிண்டர் சப்ளை, சொந்தக்கார், 2 சக்கர வாகனம், சொந்தவீடு வைத்திருப்பவர்களுக் கும் வருமானவரிப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களுக்கும் பொருந்தும். பொது விநியோகத் துறை சமையல் எரிவாயு விநியோ கஸ்தர்கள் புள்ளி விவரப்படி, ஒரு ஆண்டிற்கு வீடுகளில் சராசரியாக 20-30 சிலிண்டர்கள் பயன்படுத்தப்படு கின்றன. மானிய விலை சமையல் எரி வாயு பெருமளவு வர்த்தக நிறுவன செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படு வதாக தெரியவருகிறது என குறிப் பிடப்பட்டுள்ளது. வர்த்தக பயன் பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தை விலையில் வேறுவிதமான அளவு சிலிண்டர் களுடன் விற்பனை செய்யப்படுகிறது. மானியவிலை சிலிண்டர்களை வீடு களுக்கு விநியோகம் செய்வதை குறைப்பதன் மூலம், அரசு நிறுவனங் களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக் கலாம் என கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு விற்பனை இழப்பு மட்டுமல்லாமல் டீசல், மண் ணெண்ணெய் ஆகியவற்றின் விற்ப னையால் ஏற்படும் இழப்பு குறித்தும் அமைச்சர்கள் குழு ஆலோசிக்கிறது. இந்த அத்தியாவசிய எரிபொருள் விற்பனையால் ஏற்படும் இழப்பை பாதியாக குறைக்க அமைச்சர்கள் குழு ஆலோசிக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய வருவாய் இழப்பு பகிர்வு நடைமுறையில் மாற்றம் செய்யவேண்டுமா என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. (பிடிஐ)
நன்றி! 
 

Popular Posts