இனி சான்றிதழ்களில் சான்றொப்ப அலுவலர்களிடம் (Gazetted officers) சான்றொப்பம் பெற தேவை இல்லை என தமிழக அரசு உத்தரவு

பட்டதாரிகள், வேலை தேடுவோர் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறுபணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பம் அனுப்பும் போது கல்வித் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களையும் குரூப் ‘ஏ’ அல்லது ‘பி’ பிரிவு அதிகாரிகளிடம் சான¢றொப்பம் பெற¢று விண்ணப்பிப்பது நடைமுறையில் இருந்து வந்தது. 
GO
இவ்வாறு சான்றொப்பம் பெறும் முறையை ரத்து செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் மத்திய அரசு பணிகளுக்கு சுய உறுதிச்சான்று அளித்தாலே போதுமானது என்ற நடைமுறை அமலில் உள்ளது.மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, தமிழக அரசும் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் டேவிதார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:உண்மைச் சான்றிதழ்கள், ஆவணங்களை அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற எடுத்துச் செல்வதால் பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வீணான கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பங்களை அனுப்ப முடிவதில்லை. இது மட்டுமல்லாது நேர்முகத் தேர்வின் போதும் உண்ணம சான்றுகள் சரி பார்க்கப்படுகிறது.

சான¢றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களால் மட்டுமே எந்த முடிவுக்கும் வர முடியாது. இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சான¢றிதழ்களில் அரசு அத¤காரிகள் சான்றொப்பம் தேவையில்லை. அதற்கு பதிலாக அந்தந்த சான்றுதாரர்களே சுய உறுதிச்சான்று அளிக்கலாம். நேர்முகத் தேர்வின் போது உண்மை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதை அனைத்து துறைகளும்பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular Posts