50% அகவிலைப்படியை அடிப்படைஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட கிளை பொறுப் பாளர் மருதபாண்டியன் தலைமை வகித்தார். மாவ ட்ட செயலாளர் மோகன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி, கல்விப்படி வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊராட்சி உதவியாளர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் சங்க நிர்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பொது சுகாதார துறை, ஊரக வளர்ச்சி துறை, பட்டு வளர்ச்சி துறை, வருவாய் துறை, கூட்டுறவு துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.