தகுதித் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வுஅறிவிப்பிற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 
 
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வில்லை.இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

Popular Posts