பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தகுதியுடன், ஆசிரியர் பயிற்சி முடித்த தர்மன் உட்பட 6 பேர் கடந்த 1985-87-ம் ஆண்டுகளில் அரசுப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி பாஸ் செய்து, பி.லிட், பட்டம் பெற்றனர். அதன் பின்னர் பி.எட். படித்து முடித்தனர். இந்த நிலையில், 131 தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை கடந்த ஆண்டு ஜனவரியில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அந்தப்பட்டியலில் தர்மன் உட்பட 6 பேரின் பெயர் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித்துறையிடம் முறையிட்டனர். பிளஸ்-2 படிக்காமல் பட்டம் படித்துள்ளதால், அதை பதவி உயர்வைப்பெறும் தகுதியாகக் கருத முடியாது என்று அந்தத் “துறை கூறிவிட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதில், யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு) விதிகளின்படி எங்களுக்கு பதவி உயர்வு பெறும் தகுதி உள்ளதால் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- யு.ஜி.சி. விதிப்படி, பிளஸ்-2 முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ்-2 படிக்கவில்லை என்றால், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாவது முறைப்படி மனுதாரர்கள் பட்டம் படித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் பிளஸ்-2-விலும் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் யு.ஜி.சி. முறைப்படியே அவர்கள் பட்டம் படித்தனர். அதை அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களும் ஏற்றுள்ளன. எனவே, மனுதார்கள் பெற்ற பட்டம் செல்லும். அதன்படி, மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியானவர்கள். எனவே பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
தேர்வு வாரியம் முடிவு : ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு இல்லை
ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதித் தேர்வுகளை நடத்தும் போதெல்லாம் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை நடத்துவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதுவரை 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் நடந்த தகுதித் தேர்வில் போதிய ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாத காரணத்தால் 2011ம் ஆண்டில் 2 முறை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதையும் சேர்த்தால் 4 தேர்வுகள் வரை நடந்துள்ளது. ஒவ்வொரு முறை தகுதித் தேர்வு நடந்து முடிந்ததும், கீ&ஆன்சர் வெளியான நாளில் இருந்தே தேர்வு எழுதியோர் தரப்பில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்துள்ளனர்.
அந்த வழக்குகளை முடித்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் பல பிரச்னைகளை சந்தித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இந்த முறையை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து விட்டு பாதிப்பில்லாத வகையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய வெயிட்டேஜ் முறையை கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, பணி நியமனத்துக்கு 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டது, இதற்காக பலர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்படி பல பிரச்னை களை கடந்து வந்த நிலை யில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க வேண்டிய தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த பிறகே தகுதித் தேர்வை நடத்துவது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதனால் இப்போதைக்கு தகுதித் தேர்வு நடக்காது என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லேபிள்கள்:
TRB
உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சில வசதிகள்!
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
போனுடன் வந்த மென்பொருள் மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.
குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:
மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.
ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:
நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:
ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.
காட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.
தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:
ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.
கீ போர்ட் மேம்படுத்தல்:
பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:
ஆன்ட்ராய்டு சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.
முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:
உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.
திரைக் காட்சி ஸூம் செய்திட: பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
போனுடன் வந்த மென்பொருள்
மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.
குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:
மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும். இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.
ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:
நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:
ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.
காட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.
தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:
ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.
கீ போர்ட் மேம்படுத்தல்:
பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:
ஆன்ட்ராய்டு சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும். இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும். குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.
முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:
உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.
திரைக் காட்சி ஸூம் செய்திட: பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம். பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
இனி சான்றிதழ்களில் சான்றொப்ப அலுவலர்களிடம் (Gazetted officers) சான்றொப்பம் பெற தேவை இல்லை என தமிழக அரசு உத்தரவு
பட்டதாரிகள், வேலை தேடுவோர் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறுபணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பம் அனுப்பும் போது கல்வித் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களையும் குரூப் ‘ஏ’ அல்லது ‘பி’ பிரிவு அதிகாரிகளிடம் சான¢றொப்பம் பெற¢று விண்ணப்பிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.
GO
இவ்வாறு சான்றொப்பம் பெறும் முறையை ரத்து செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால் மத்திய அரசு பணிகளுக்கு சுய உறுதிச்சான்று அளித்தாலே போதுமானது என்ற நடைமுறை அமலில் உள்ளது.மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, தமிழக அரசும் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் டேவிதார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:உண்மைச் சான்றிதழ்கள், ஆவணங்களை அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற எடுத்துச் செல்வதால் பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வீணான கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பங்களை அனுப்ப முடிவதில்லை. இது மட்டுமல்லாது நேர்முகத் தேர்வின் போதும் உண்ணம சான்றுகள் சரி பார்க்கப்படுகிறது.
சான¢றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களால் மட்டுமே எந்த முடிவுக்கும் வர முடியாது. இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சான¢றிதழ்களில் அரசு அத¤காரிகள் சான்றொப்பம் தேவையில்லை. அதற்கு பதிலாக அந்தந்த சான்றுதாரர்களே சுய உறுதிச்சான்று அளிக்கலாம். நேர்முகத் தேர்வின் போது உண்மை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதை அனைத்து துறைகளும்பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

5% மதிப்பெண் தளர்வு ரத்து தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்தால் என்ன ஆகும்?
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தமிழ்நாடு அரசு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு சரியே இது அரசின் கொள்கை இதில் நீதிமன்றம் தலையிடாது என சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றம் என இரண்டு முக்கிய நீதிமன்றங்கள் கூறிய பின் இந்த 5% மதிப்பெண் வழங்கும் அரசானையை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
எனவே டெல்லி உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அதனை ஆதராமக கொண்டு அரசு மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு உறுதி தற்போது இதன் மூலம் பலர் வேலைக்கு சென்று விட்டனர் இதனால் இந்த 2013 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இது பொறுந்தும் என்பது உறுதி உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றம் 5% தளர்வுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு பின்வருமாறு:
IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPELLATE JURISDICTION
Special Leave Petition (C) No.28043 of 2013
J U D G M E N T
K. S. RADHAKRISHNAN, J.
1. The petitioner herein has approached the High Court seeking a writ of certiorari to quash the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) -2013 Notification/Advertisement No.13/2013 dated 22nd May, 2013 issued by the Teachers Recruitment Board and also sought a direction to the Board to issue fresh notification extending the constitutional benefits of reservation to TNTET by assigning minimum qualifying cut off marks for each communal category, in accordance with the prevailing reservation rule and also for the consequential reliefs.
2. The Madras High Court refused to grant the reliefs prayed for on the ground that the question as to whether relaxation/concessional marks to be granted or not to be granted is a policy matter, to be taken by the State Government and the court sitting under Article 226 of the Constitutional of India cannot give a positive direction to the State so as to reduce the minimum marks to any reserved category.
5. We find it difficult to accede to the request of the counsel. The question as to whether the cut off marks stipulated for the reserved category candidates have to be reduced or not, is entirely a matter for the State Government to decide. The Court exercising writ jurisdiction cannot grant such relaxation/concessional marks, as the same is the decision to be taken by the State Government. Taking into consideration a variety of factors, State/Authorities concerned in their wisdom would fix the cut off
marks and court cannot substitute its views to that of the experts. We, in such circumstances, are not inclined to interfere with these special leave petitions and the same are dismissed.
…………………………………J.
(K.S. Radhakrishnan)
………………………………...J.
(A.K. Sikri)
New Delhi,
December 13, 2013
உயர்நீதி மன்ற தீர்ப்பு சென்னை
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 23.01.2013
CORAM:
THE HONBLE MR. JUSTICE K.CHANDRU
W.P. Nos.30426, 31002, 31306, 31706, 31468,
32325, 34495, 34730, 34910 of 2012
and
W.P.Nos.1687 and 1705 of 2013
&
Connected Miscellaneous Petitions
10. In the instant cases, for conducting the test, two Government Orders came to be passed. A committee was appointed pursuant to the direction issued by this Court, which had gone into the issue. It was decided not to relax the standard from the minimum pass percentage. As rightly stated in the counter affidavit, the qualifying marks for a pass in the Tamil Nadu Teachers Eligibility Test has been fixed as 60% and above and the Teacher Eligibility Test is only a pre-requisite eligibility test for appointment as a Teacher. The qualifying marks are fixed in order to get quality education to teach the Children. The State Government has taken a policy decision not to compromise on the quality of Teachers and decided not to grant relaxation. When such a decision has been taken by the State Government, this Court is not inclined to consider the submissions made by the learned counsel for the petitioners and no such direction can be issued by this Court to the respondents to relax the standard or lower the standard, as contended by the petitioners.
வேலை நாட்களில் ஆசிரியர்கள்இயக்குனரகத்திற்கு வர தடை
ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாதத்தின் முதல் சனிக்கிழமை, மாவட்ட கல்வி அலுவலர் நிலையிலும், இரண்டாவது சனிக்கிழமை, முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலும், ஆசிரியர் குறை தீர்ப்பு முகாமை நடத்த வேண்டும். இதில், ஆசிரியர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
முதல், இரு முகாம்களிலும் தீர்க்க முடியாத பிரச்னையை, மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை, இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் முகாமிற்கு, மாவட்ட அதிகாரிகள் பரிந்துரைக்கலாம். ஆசிரியர்கள் எந்தக் காரணங்களுக்காகவும், வேலை நேரத்தில், கல்வித் துறை அலுவலகங்களுக்கு வரக் கூடாது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இயக்குனரகம் தெரிவித்திருப்பதற்கு மாறாக, தினமும் ஏராளமான ஆசிரியர்கள், பல்வேறு பிரச்னைகளுக்காக, இயக்குனர் அலுவலகங்களில் முகாமிடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் திருமண வயதை உயர்த்த மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
18 வயதில் பெண்ணுக்கு மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது என்பதால் பெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
என்ஜினீயரிங் மாணவிகடத்தல்
திருச்சியை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகள், திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
இவரை, மனோகரன் என்பவர் கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து திருச்சி ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, தன் மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தியாகராஜன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மேஜர்
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் மயில்வாகனராஜேந்திரன் கூறுகையில், “மனுதாரர், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அவருடைய மகள், கடத்தியதாக புகார் கூறப்பட்ட மனோகரன் ஆகியோரிடம் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மனுதாரரின் மகள் மேஜர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மனோகரனுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவரது விருப்பப்படி அனுப்பி வைக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.
மனுதாரரின் மகள் மேஜர் என்பதற்காக ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் அவர் அளித்து இருந்த பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகலையும் அரசு வக்கீல் கோர்ட்டில் ஒப்படைத்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மதுசூதனன், ‘சட்டவிரோத காவலில் இருக்கும் தன் மகளை மீட்க மனுதாரருக்கு உரிமை உள்ளது. மனுதாரரின் மகள் மிரட்டப்பட்டதன் காரணமாக அவர் மனோகரனுடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே, மனுதாரரின் மகள் மிரட்டப்பட்டாரா என்பதை நேர்மையான முறையில் போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.
வயது நிர்ணயம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
“திருமண வயதைப் பொறுத்தமட்டில் ஆணுக்கு 21 வயது என்றும், பெண்ணுக்கு 18 வயது என்றும் அரசு நிர்ணயித்துள்ளது. பல பெண்கள் பருவக்கோளாறால் 18 வயதில் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். இதுபோன்ற விவகாரங்களில் பெண் ‘மேஜர்’ என்பதால் கோர்ட்டு தலையிட முடியவில்லை. திருமணம் என்பது புனிதமானது. தன்னுடைய மகள், மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோருக்கு உரிமை உள்ளது.
காதலன் கைவிட்டு விட்டால் நாங்கள் தான் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவது நியாயமானது தான். கல்வி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். குடும்ப பாரம்பரியம், நல்ல பழக்கவழக்கம், அன்பு போன்றவற்றையும் பெற்றோர்கள் தான் கற்றுக்கொடுக்கின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக கம்ப்யூட்டர், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் போன்றவற்றின் மூலம் ஆணும், பெண்ணும் தகவலை பரிமாறி அதன்மூலம் காதல் வயப்படுகின்றனர். பெண்கள் திடீரென்று பெற்றோரை உதறி விட்டு செல்லும்போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
வேலைவாய்ப்பின்மை என்பது நாட்டில் அபாயகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நல்ல தகுதி உள்ளவர்களுக்கு கூட வேலை கிடைப்பது இல்லை. இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு உரிய ஆதரவு இல்லாவிட்டால் அந்த பெண் படும் கஷ்டத்தைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை.
உயர்த்த வேண்டும்
18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை வழங்குவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும்.
ஆனால், திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு 18 வயதில் மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமண வயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே, பெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்த வேண்டும். அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.
இந்த வழக்கில், மனுதாரரின் மகள் தனது விருப்பப்படி காதலனுடன் செல்வதாக இன்ஸ்பெக்டரிடம் கூறி வாக்குமூலம் எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால், மனுதாரர் தன் மகள் மிரட்டல் காரணமாக அதுபோன்று கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற விவகாரங்களில் பெண் கடத்தப்படவில்லை என்பது விசாரணையின் போது தெரியவந்தாலும்கூட, அந்த பெண்ணை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி உரிய உத்தரவை பெற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன. அனைத்து ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது.
இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
http://attendance.gov.in/
ஓய்வுபெற்ற பிறகும் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளித்தாளாளர் மற்றும் செயலர் என்.பாலசெüந்தரி. அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எம்.ஏ.,எம்.எட்., படித்ததற்காக 3வது ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தார். இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, பாலசெüந்தரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு 3ஆவது ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மற்றும் பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். மனுவில், பணிக் காலத்தின்போது ஊக்க ஊதியம் கோரி ஆசிரியை விண்ணப்பிக்கவில்லை. ஏற்கெனவே அவருக்கு அதிகபட்ச ஊக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. எனவே 3ஆவது ஊக்க ஊதியம் பெறத் தகுதியில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இம் மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர்களின் தகுதியை உயர்த்துவதற்காகவே அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. ஆசிரியர்கள் எந்த அளவுக்கு தங்கள் தகுதியை உயர்த்தி உள்ளார்களோ, அதற்குத் தகுந்த ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இந்த சலுகையைப் பெற பணிக் காலத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல. எனவே, ஆசிரியை ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் ஊக்க ஊதியம் பெற உரிமை உள்ளது. அவருக்கு 8 வார காலத்தில் உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தகுதித் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வுஅறிவிப்பிற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014
செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.
இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.
முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய முறையால், ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள், பதவி உயர்வு, ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.
அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளவழக்கு எண். W.P.NO.28785/2012.உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில் (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம்மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதி. உஷா பரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
50% அகவிலைப்படியை அடிப்படைஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட கிளை பொறுப் பாளர் மருதபாண்டியன் தலைமை வகித்தார். மாவ ட்ட செயலாளர் மோகன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி, கல்விப்படி வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊராட்சி உதவியாளர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் சங்க நிர்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் குறித்து பேச வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பொது சுகாதார துறை, ஊரக வளர்ச்சி துறை, பட்டு வளர்ச்சி துறை, வருவாய் துறை, கூட்டுறவு துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here