சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த
கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது
வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத்
துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை
அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது
நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சர் நியமனம்:
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வான விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இத்துறையின் அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக செயலாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை,
சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன்
ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக
கே.சி.வீரமணி வந்துள்ளார்.