கழிப்பறை பராமரிப்பு நிதி: ஊராட்சியில் பெற அறிவுரை

பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்கும் பணியை, ஊராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டும்' என, தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இயக்குனர் இளங்கோவன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கழிப்பறை பழுதடைந்திருந்தால், அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட நிதியை பயன்படுத்தி, சீர் செய்ய வேண்டும். 
 கழிப்பறைகளை பயன்படுத்துவதன் அவசியத்தை, மாணவர்களிடையே வலியுறுத்தி கூற வேண்டும். கழிப்பறைகளை, தினமும் சுத்தம் செய்து, பராமரிக்கும் பணிக்கான செலவை, ஊராட்சி நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தலைமை ஆசிரியர்கள், ஊராட்சித் தலைவரை அணுகி, உரிய நிதியை பெற்று, செலவழிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள், முழுமையான அளவில் பயன்பாட்டில் இருப்பதை, வரும், 15ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

Popular Posts