SSA திட்ட இயக்குனர் உட்பட தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றம்

தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.



இந்த உத்தரவின்படி, 
 
வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளராக டி.கே.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
ஆவின் மேலாண்மை இயக்குநராக சுனில் பாலிவால் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் ஆணையராக அபூர்வாவும், 
 
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநராக பூஜா குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநராக டி.விவேகானந்தனும், 
 
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சி.என்.மகேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல், செய்தித்துறை இயக்குநர் குமரகுருபரன், அரசு கேபிள் டிவி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Posts