பென்சன் (PFRDA) மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்!.... அரசு ஊழியர்களுக்கான கருப்பு தினம்... கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!... என்ன செய்யப்போகிறோம் நாம் ?

புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் இன்று (04.09.2013) மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இருக்கிறது. இதனால் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) சட்டப்பூர்வமாக மாறுகிறது. 



இதன் ஆபத்தை சிறிதும் அறியாத அளவு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் அறியாமையே இதற்கான அடிப்படையான காரணமாக இருந்தது. இதன் விளைவை எதிர்நோக்கும் போது தான் இந்த பேராபத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் உணர பொகிறோம்.


புதிய ஒய்வூதிய திட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்:
கடந்த 2 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த புதிய ஓய்வூதிய மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.

வயதான காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வூதிய திட்டங்களை வகுக்கவும் 

இவற்றை நடைமுறைப்படுத்த தனியான ஒரு ஆணையத்தை ஏற்படுத்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. 

மேலும் ஓய்வூதிய திட்டங்களை திறம்பட நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவற்கும் இம்சோதா வழி ஏற்படுத்துகிறது. இந்த சட்டத்தின் மூலம் ஓய்வூதிய திட்டங்களில் அன்னிய முதலீடுகள் வரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றும் முனைப்பில் அரசு உள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாகவே இந்த மசோதா நிறைவேற்றம் பார்க்கப்படுகிறது. 

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றது. 

இந்த மசோதாவுக்கு இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.
மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் டி.கே. எஸ். இளங்கோவன், ஓய்வூதிய திட்டங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என எதிர்ப்பை பதிவு செய்தார். 

ஓய்வூதிய நிதியை தனியார் பங்குகளில் முதலீடு செய்யும் அம்சத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

உறுப்பினர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவேண்டும் என்றும் இளங்கோவன் குறிப்பிட்டார்.

Popular Posts