மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.: அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வருமா?

புதுச்சேரி பகுதி தனியார் பள்ளி கல்லூரிகளில், மாணவர் பற்றிய முழு விபரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க, உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடைமுறையை அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றினால், தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்பு ஏற்படும்.

புதுச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும், மாணவர்கள் பற்றிய முழு விபரம் பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையிலும், மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் நடைமுறையை பின்பற்றுகின்றன.
தேர்வு பற்றிய விபரங்கள், மாதாந்திர தேர்வு கால அட்டவணை, தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பள்ளிக்கு லேட்டாக வருவது, விடுப்பு எடுப்பது, ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, வீட்டு பாடம், மாணவர்களின் தகுதி நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் பெற்றோருக்கு தெரிந்துவிடுவதால், தங்களுடைய பிள்ளைகளின் படிப்பு நிலையை தெரிந்து கொண்டு, அவர்களை வழிநடத்த ஏதுவாக அமைகிறது.
இதுபற்றி தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.எம்.எஸ்., தகவல்களை மாணவர்களுக்கு அனுப்பி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் மாதத்திற்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மாணவர் பற்றிய தகவல்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியும்" என்று தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விபரங்கள் பெற்றோர்க்கு தெரியாமல் போய்விடுவதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் ஆண்டுக்காண்டு சரிந்து வருகிறது.
கடந்த மே மாதம் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 118 பள்ளிகள் நூறு சதவீதம் பெற்றன. இதில் 10 அரசு பள்ளிகள் மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற முடிந்தது.
எனவே, அரசுப்பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் உள்ள மிகுந்த இடைவெளியை சரி செய்ய, தனியார் பள்ளி நடைமுறைகளை ஓரளவாவது பின்பற்ற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி அரசை பொறுத்தவரை கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதியை செலவு செய்கிறது. தனியார் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பும் முறையை, வருங்காலங்களில் அரசு பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்தினால் மாணவர்களின் கல்வித்தரமும் தேர்ச்சி சதவீதமும் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு *நீதிமன்ற உத்தரவுப்படி அரசாணை. வெளியீடு *உத்தரவினை பெற்றுத்தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!!-CPS -RTI

*அப்புடீன்னு தகவல் பெரும் உரிமைச்சட்டத்துல கேட்கப்பட்ட புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS )சம்பந்தமான கேள்வி பதில்கள் 
* CPS திட்டத்தில் உள்ள அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கட்டும் பணத்திற்கு
ஈடான பங்கு பணம் அரசும்,சேர்ந்து மத்திய அரசின் அமைப்பான PFRDA விற்கு கட்டவேண்டும் ஆனால் ........எந்த பணமும் வரவில்லை என்கிறது தகவல்!!*இதுவரை குறைந்தபட்ச ஓய்வூதியம் என்று .நிர்ணயம் செய்யப்படவில்லை ......இது நியாயமா !!!
*எதோ வேலை வெட்டி இல்லாதவன் RTI  இல் போட்டு கேட்கிறான் என நினைக்காதீர்கள்!!! கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் !!! !

 


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 90 சதவீதாக உயர்வு

மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 90 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 80 சதவீதமாக உள்ளது. இதனை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை வைக்கப்பட்டிருந்தது.

இதனை பரிசீலித்த அமைச்சரவை, கடந்த ஜூலை 1ம் தேதியைக் கணக்கிட்டு அகவிலைப்படியை 90 சதவீதமாக உயர்த்த வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பில் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் மாவட்டம் இடமாறுதல் பெறலாம்: தடையை விலக்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. 
இதில் 2008-ம் ஆண்டு வரை மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர். இதனால், சில மாவட்டங்களில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ற வாறு குறைவான நியமனங்களே நடந்தது.

இதை எதிர்த்து மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் வேண்டி வழக்கு தொடரப்பட்டது. மாநில பதிவு மூப்பை அளித்த போதும் மாவட்ட மாறுதல் இன்றி தீர்ப்பு வழங்கப்பட்டது.

 ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டதால் குறிப்பிட்ட மாவட்டங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற முடியாத நிலை ஏற்பட்டது, இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாவட்ட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது. 
மாநில பதிவு மூப்பு பற்றியோ. மாவட்ட பதிவு மூப்பு பற்றியோ இன்று எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மாவட்ட மாறுதல் சம்பந்தமாக இடைக்கால உத்தரவில் உள்ள தடை மட்டுமே இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விடுவிப்பு, உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் கல்வித்துறையையும் கூடுதலாக கவனிப்பார்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் கல்வித்துறையையும் கூடுதலாக கவனிப்பார்.
Thanks  : Dinamalar

பென்சன் (PFRDA) மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்!.... அரசு ஊழியர்களுக்கான கருப்பு தினம்... கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!... என்ன செய்யப்போகிறோம் நாம் ?

புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் இன்று (04.09.2013) மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இருக்கிறது. இதனால் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) சட்டப்பூர்வமாக மாறுகிறது. 



இதன் ஆபத்தை சிறிதும் அறியாத அளவு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் அறியாமையே இதற்கான அடிப்படையான காரணமாக இருந்தது. இதன் விளைவை எதிர்நோக்கும் போது தான் இந்த பேராபத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் உணர பொகிறோம்.


புதிய ஒய்வூதிய திட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்:
கடந்த 2 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த புதிய ஓய்வூதிய மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.

வயதான காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வூதிய திட்டங்களை வகுக்கவும் 

இவற்றை நடைமுறைப்படுத்த தனியான ஒரு ஆணையத்தை ஏற்படுத்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. 

மேலும் ஓய்வூதிய திட்டங்களை திறம்பட நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவற்கும் இம்சோதா வழி ஏற்படுத்துகிறது. இந்த சட்டத்தின் மூலம் ஓய்வூதிய திட்டங்களில் அன்னிய முதலீடுகள் வரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றும் முனைப்பில் அரசு உள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாகவே இந்த மசோதா நிறைவேற்றம் பார்க்கப்படுகிறது. 

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றது. 

இந்த மசோதாவுக்கு இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.
மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் டி.கே. எஸ். இளங்கோவன், ஓய்வூதிய திட்டங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என எதிர்ப்பை பதிவு செய்தார். 

ஓய்வூதிய நிதியை தனியார் பங்குகளில் முதலீடு செய்யும் அம்சத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

உறுப்பினர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவேண்டும் என்றும் இளங்கோவன் குறிப்பிட்டார்.

Lok Sabha paves way for pension sector regulator

The Lok Sabha on Wednesday passed the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) Bill, which seeks to give statutory powers to the interim regulator, constituted way back in 2003 by an executive order.

The pension reforms Bill has fixed the ceiling on foreign direct investment (FDI) in the pension sector at 26% — to move in sync with that for the insurance sector.


The Bill passed by the lower house on Wednesday carried some amendments to the one tabled in 2011.

The earlier version had kept the option of FDI cap outside the purview of the legislation, as it was believed the FDI cap could be raised through an executive order.

However, the revised Bill included it as part of the legislation following objection from Parliament’s standing committee on finance. Other amendments include providing subscribers the option of investing in the schemes that provide minimum assured returns.

On this, Bhratuhari Mahtab (BJD) asked for amendments that the government should give minimum assured returns equivalent to at least rate of interests provided by the Employees' Provident Fund Organisaiton (EPFO).

Finance minister P Chidambram said how can he give an undertaking in advance that assured returns would be higher or lower to EPFO rates. However, all the money could be invested in government securities, he said.

The proposed new pension fund regime would make it mandatory that at least 40% of the subscribers' money has to be annuitised.

The new pension fund regime, if it comes into force, will allow subscribers to withdraw up to 25% of their contributions in some cases. These cases and the number of withdrawals will be decided by PFRDA.

The proposed law will give statutory powers to PFRDA, which is anyway regulating funds to the tune of Rs 35,000 crore at the moment. It has been regulating NPS since January 1, 2004. NPS is different from the earlier pension system in that it has defined contributions, while the earlier one had defined benefits.

All central government employees, except armed forces, who joined the services since January 1, 2004, are part of NPS. So far, 27 states and Union Territories have notified NPS for their employees. There are now eight fund managers for NPS.

NPS has been launched for all citizens of the country. It also includes unorgnised-sector workers, on a voluntary basis, since May 1, 2009. To encourage people from the unorganised sector to voluntarily save for their retirement, the government also launched the co-contributory pension scheme, called the ‘Swavalamban Scheme’ in Budget 2010-11. As on September 7, 2012, NPS had a subscriber base of 3.75 million.

The PFRDA Bill was originally introduced in 2005 to provide for a statutory PFRDA. However, that Bill and the official amendments, based on the recommendations of the standing committee, could not be considered by the 14th Lok Sabha and lapsed with the lower House’s dissolution.

Lok Sabha passes PFRDA Pension Bill, 10 key facts

The Lok Sabha today passed the Pension Fund Regulatory and Development Authority Bill 2011, which will open the doors for foreign investment in pension funds. The bill aims to create a regulator for the pension sector and extend the coverage of pension benefits to more people. The Pension Bill has been hanging fire since 2005 when it was first introduced in the Parliament. It was again reintroduced in 2011.
Here are the salient features of the bill:
  1. The Pension Fund Regulatory and Development Authority Bill 2011 will give statutory powers Pension Fund Regulatory and Development Authority (PFRDA) which was established in August 2003 as a regulator for the pension sector.
  2. The bill allows 26% foreign direct investment (FDI) in the pension sector or such percentage as may be approved for the insurance sector, whichever is higher. At least one of the pension fund managers shall be from the public sector

  3. The subscriber seeking minimum assured returns shall be allowed to opt for investing their funds in such scheme providing minimum assured returns as may be notified by the authority
  4. Withdrawals will be permitted from the individual pension account subject to the conditions, such as, purpose, frequency and limits, as may be specified by the regulations
  5. This bill would also provide subscribers a wide choice to invest their funds including for assured returns by opting for government bonds etc as well as in other funds depending on their capacity to take risk
  6. The New Pension Scheme has been made mandatory for all the central government employees (except armed forces) entering service with effect from 1.1.2004.  Twenty-six states have already notified NPS for their employees.
  7. As on 14th August, 2013, the number of subscribers under NPS is 52.83 Lakh with a corpus of Rs. 34,965 crore
  8. NPS had been launched for all citizens of the country including unorganised sector workers, on voluntary basis, with effect from 1st May, 2009.  
  9. The passage of the bill could see pure pension products coming into the market. At present most of the pure pension products available in the market are linked with insurance coverage.
  10. In 2005, the government had earlier introduced a pension bill but it lapsed as the Lok Sabha's term got over before the legislation could be passed. The Pension Fund Regulatory and Development Authority Bill 2011 was reintroduced in the Lok Sabha in 2011 by the then finance minister Pranab Mukherjee and it was subsequently referred to a standing committee.

புதிய ஓய்வூதிய மசோதா (PFRDA Bill) இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் ஆவதை எதிர்த்து இன்று (02.09.2013) மாலை 05.00 மணிக்கு மத்திய/ மாநில தொழிற்சங்கங்களோடு இணைந்து TNPTF மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்... ஆசிரியர்கள் அனைவருக்கும் அழைப்பு...

புதிய பென்சன் திட்ட மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசு, இன்று அம்மசோதாவை நிறை வேற்ற இன்றைய பாராளுமன்ற அலுவல் குறிப்பில் வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த மசோதாவை இடது சாரிகள் மட்டுமே எதிர்த்து வருவது மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சில மாற்றங்களை செய்து இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக மத்திய/ மாநில அரசு ஊழியர் சங்கங்கள் (CITU, DREU, LIC, BSNLEU, BEFI, TNGEA மற்றும் TNPTF) இன்று அறிவித்திருக்கும் போராட்டத்தில் அச்சங்க கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கு கொள்கிறது.
அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் இம்மசோதாவை நிறைவேற்றாமல் தடுத்து பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வலுக்கொண்டு இம்மசோதாவை மத்திய/ மாநில தொழிற்சங்கங்கள் இணைந்து போராடினால் மட்டுமே சாத்தியம் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் அழைப்பு விடுத்துள்ளது.

PROFESSIONAL TAX- 2013 | தொழில் வரி

அரையாண்டு வருமானம்  :   
21 ,000   வரை                               :  இல்லை 
21,000  முதல் 30,000 வரை      :   ரூ. 94 
30,001 முதல்  45,000  வரை     :   ரூ.238 
45,001  முதல் 60,000 வரை      :   ரூ.469
60,001 முதல்  75,000 வரை      :  ரூ.706
75,001 முதல்                                :  ரூ.
938          

மேற்கூறிய தொழில் வரி அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் செப்டெம்பர் ஊதியம் கோரும் பட்டியலுடன் தொழில் வரி செலுத்திய ரசீதினை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் வருமான வரி செலுத்தும் போது, இத்தொகைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.


தொழில் வரியை குறிப்பிட்ட பகுதியின் ஊராட்சி/ பேரூராட்சி/ நகராட்சி / மாநகராட்சி முடிவு செய்கிறது. எனவே தொழில் வரி ஊருக்கு ஊர் மாறுபடும். பேரூராட்சி, ஊராட்சி என செலுத்த வேண்டிய தொழில் வரியும் தொகை மாறலாம். எனவே உரிய பகுதியில் உள்ள நிர்வாகத்திடம் அனுகி தகவல் பெறுவதே சிறந்தது.

30.08.2012 மாநிலம் தழுவிய மறியல் : விருதுநகரில் நடைபெற்ற ஆவேச மறியல்:

































ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.
ஓய்வூதியர்களிடம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், ஒவ்வொருவரையும் கலெக்டர் ஜெயஸ்ரீ அழைத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். சில மனுதாரர்கள் வராததால், "என்னப்பா இது மனு போடுறாங்க. ஆள் வரமாட்டீங்கராங்களே?' என்றார்.
அதேபோல், கூட்டத்துக்கு வராத அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையினருக்கு கலெக்டர், "டோஸ்' விட்டார். தொடக்கக்கல்வி துறையில் தான் அதிகளவு மனுக்கள் நிலுவையில் இருந்தன. இதனால், வெறுப்படைந்த கலெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.,) பொன்னம்பலத்தையும், திருவெறும்பூர் ஏ.இ.இ.ஓ., சண்முகத்தையும் கடிந்து கொண்டார்.
திருச்சி, "பெல்' காமராஜபுரம், எழில்நகரைச் சேர்ந்த காளியம்மாள், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் சாரதா நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி, 2006ல் ஓய்வு பெற்றார். இவருக்கு, 28 ஆயிரத்து, 494 ரூபாய், "அரியர்ஸ்' தொகை வரவேண்டி உள்ளது.
இதுதொடர்பாக, திருவெறும்பூர் ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, காளியம்மாள் சென்னை ஓய்வூதிய துணை இயக்குனர் அலுவலகத்துக்கு மனு அனுப்பினார்.
இந்த மனு குறித்து, ஏ.இ.இ.ஓ., சண்முகத்திடம், கலெக்டர் ஜெயஸ்ரீ விளக்கம் கேட்டார். "காளியம்மாளுக்கு, "அரியர்ஸ்' பெற தகுதியில்லை' என்று கூறினார். ஆனால், அனைத்து தகுதியும் இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை சமர்பித்துள்ளதாகவும் கூறிய காளியம்மாள், அதற்கான ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைத்தார்.
இதைப்பார்த்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற கலெக்டர் ஜெயஸ்ரீ, ""உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா? இன்றைக்கு பணியில் இருக்கும் நாம், நாளை, அவர்கள் (ஓய்வூதியர்) சீட்டுக்குச் செல்வோம் என்ற எண்ணத்தில் வேலை பாருங்கள். மூன்று ஆண்டுக்கும் மேலாக இழுத்தடித்துள்ளீர்கள். உங்கள் அலுவலகத்தில் தான் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று மாலைக்குள் இந்த பணியை முடித்துக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.
அருகே நின்ற, டி.இ.இ.ஓ., பொன்னம்பலத்திடம், ""ஏ.இ.இ.ஓ., சண்முகம் மீது ஏராளமான புகார்கள் உள்ளது. ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்? இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளது. எதன்மீதும் உரிய நடவடிக்கை இல்லை. இவரை இரண்டு நாள் உடனடியாக, "சஸ்பெண்ட்' செய்யவும்,'' என்று உத்தரவிட்டார்.
இதைக்கேட்ட டி.இ.இ.ஓ.,வும், ஏ.இ.இ.ஓ.,வும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, கலெக்டரிடம், ஏ.இ.இ.ஓ., கெஞ்சியபடி, பரிதாபமாக நின்றார். அவரை டி.இ.இ.ஓ., பொன்னம்பலம், அழைத்துச்சென்றார். இதனால், ஓய்வூதிய குறைதீர் கூட்டத்துக்கு வந்த மற்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஊதிய உயர்வில் புறக்கணிப்பு, 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், நாளை மாநிலம் முழுவதும் மறியல்


SSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு, எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள ஊழியர்கள் சங்கங்கள் ஆயுத்தம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, இந்த மசோதாவை நாளை  மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து மத்திய, மாநில ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகின்றன. மேலும் உண்ணாவிரதத்தில் தாங்கள் பங்குகொள்ள , தங்களின் அதரவை தெரிவிக்க hvfnpsera@gmail.com என்ற இமெயில் முகவரியை அணுகவும்.
தகவல்-புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு இயக்கம் -சென்னை 

CLICK HERE

SSA திட்ட இயக்குனர் உட்பட தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றம்

தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.



இந்த உத்தரவின்படி, 
 
வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளராக டி.கே.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
ஆவின் மேலாண்மை இயக்குநராக சுனில் பாலிவால் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் ஆணையராக அபூர்வாவும், 
 
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநராக பூஜா குல்கர்னியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநராக டி.விவேகானந்தனும், 
 
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சி.என்.மகேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல், செய்தித்துறை இயக்குநர் குமரகுருபரன், அரசு கேபிள் டிவி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு | Opportunity to TET Candidates who had not submitted certificates in past two verifications

கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு, ஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, முறையே, கடந்த ஆண்டு, செப்., 7, 8 மற்றும் நவம்பர், 6 முதல் 9ம் தேதி வரை நடந்தன. 
இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்கு, மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும், செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்நிகழ்வு, சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும். 
கடந்த ஆண்டு, நவம்பர், 9ம் தேதி அன்று, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்து, உரிய பட்டயச் சான்று, பட்டச் சான்று, மதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சிக்குரிய, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள், இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. 
தேர்வர்கள், பதிவு எண்களை சரிபார்த்து, அதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான், தேர்வர், அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால், டி.ஆர்.பி., தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகே, பல தேர்வர்களுக்கு, சான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள், அப்போதைய டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் சவுத்ரியிடம், பல முறை முறையிட்டும், அவர், தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால், வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர், சான்றிதழ் இல்லாததன் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள், கண்ணீர் விட்டு கதறினர். எனினும், தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள், கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை. 
இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப்பின், டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயே, தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, விபு நய்யார், வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

TRB - TN TET Official Key Answers for Paper 1 and Paper 2 | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்

அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம் : அரசு புது உத்தரவு!

தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், "இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ல், தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.


அறிக்கை:
இதுகுறித்து விசாரிக்க, கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், அரசு செலவினத் துறை முதன்மை செயலர் கிருஷ்ணன் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவினர், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் மற்றும் சங்கங்களிடம், கருத்து கேட்டனர். அதன் அடிப்படையில், அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர்.
அரசாணை வெளியீடு:
குழு அறிக்கை அடிப்படையில், கடந்த மாதம், 22ம் தேதி, துறை வாரியாக, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, 200 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை, ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.அதேநேரம், இன்ஸ்பெக்டர், தாசில்தார், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் உட்பட பலருக்கு, சம்பளம் குறைக்கப்பட்டது. "புதிய சம்பளம், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
தடை:
சம்பளம் குறைக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர். அதைத் தொடர்ந்து, "இம்மாதம் பழைய சம்பளம் வழங்க வேண்டும்; சம்பளத்தை குறைக்கக் கூடாது' என, துறை அதிகாரிகள் மூலம், கருவூலத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கருவூலத் துறை அதிகாரிகள், "கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும், அதே சம்பளம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கப்படும்' என, தெரிவித்தனர். இதனால், ஊழியர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. இவ்விவரத்தை, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கோர்ட் தடை உத்தரவு காரணமாக, சம்பளம் குறைக்கப்பட்டவர்களுக்கு, பழைய சம்பளத்தையே, இம்மாதம் வழங்க வேண்டும் என, நேற்று, அரசாணை வெளியிடப்பட்டது. புதிய அரசாணை, அனைத்து கருவூலத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
 நன்றி : தினமலர்

Popular Posts