தாள் 1 எழுத தகுதியானோர்:
1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று
D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில்
பயின்றோர்.
தாள் 2 எழுத தகுதியானோர்:
1. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் (10+2+3) என்ற
முறையில் பயின்று இளங்கலை கல்வியியல் கல்வி (B.Ed) தகுதியினை
அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும்.
2.இளங்கலை பட்டம் (B.A. /B.Sc. /B.Litt.) தமிழ், ஆங்கிலம், கணிதம்,
இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய
இளங்கலை பட்டமோ அல்லது அதற்கு இணையான பட்டமாக இந்த TNTET 2013 அறிவிப்பு
நாளுக்கு முன் இணை பட்டமாக அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இணை பட்டத்தினை
(Equal Degree) பெற்றுள்ளோர்.
கடைசி ஆண்டு தேர்வு எழுதியுள்ளோர்:
2012-13 ஆம் கல்வியாண்டு D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை இறுதியாண்டு
பயில்வோரும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதலாம். ஆனால், அவர்கள் சான்றிதழ்
சரிபார்ப்பின் போது, மேற்காணும் D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை வெற்றிகரமாக
முடித்திருக்க வேண்டும். இல்லையேல். அவர்கள் இவ்வாண்டு பணி நியமன
வாய்ப்புகளை பெற முடியாது. ஆயினும் பிறகு அவர்கள் இக்கல்வித்தகுதிகளை
பெற்றால் 7 வருட மதிப்புள்ள TET சான்றிதழ் வழங்கப்படும்.