"ஓய்வூதிய தனியார்மயம் கூடாது ஆக.6 கோட்டை நோக்கிப் பேரணி"

ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 3 வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.

 
              இம்மாநாட்டின் முதல் நாள், பொதுமாநாடு மதுரை கே.கே.நகர் வி.ஆர்.கிருஷ்ணய் யர் சமுதாயக்கூடத்தில் வெள்ளி யன்று மாலை நடைபெற்றது. ஸ்தபாக தலைவர் எஸ்.ஆடிய ராஜன் கொடியேற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் என். ஜெயச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் பா.விக்ரமன் துவக்கவுரையாற்றினார். தமிழ் நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறு முகநயினார், போக்குவரத்து ஓய்வூதியத்துறை முன்னாள் இயக்குநர் வீ.பிச்சை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பிரதி நிதிகள் மாநாடு நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் வேலை, ஸ்தாபன அறிக்கையையும், பொருளாளர் ஏ.வரத ராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.

                  மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறுபோக்குவரத்துக் கழகங் களில் பணியாற்றி பணி மூப்பின் காரணமாக ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு அன்றே வழங்க வேண் டிய பணிக்கொடையினை ஓய்வுபெறும் அன்றே வழங்க வேண்டும். விடுப்புச்சம்பளம், சமூகப்பாதுகாப்பு நிதி, ஓய்வு கால சேமநலநிதி மற்றும் ஐஆர்டி, பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். பென்சனை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். புறநகர் பேருந்து களில் பயணம் செய்ய ஓய்வு பெற்றோர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6.8.2013 அன்று சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.மாநாட்டின் இரண்டாவது நாளாக ஜூன் 1ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ஜெக தீசன், ஓய்வுபெற்ற பள்ளி கல் லூரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் கே.ஆர்.சங் கரன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சங்கத்தின் துணைத்தலைவர் எம்.சந்திரன் நிறைவுரை யாற்று கிறார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ் நன்றி கூறுகிறார்.

Popular Posts