வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் டி.இ.டி., தேர்வை எழுத முடியாது

வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. 
 
பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்கள், நியமனம் செய்யப்படுகின்றனர். 
வணிகவியல், பொருளியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள், 10ம் வகுப்பு வரை கிடையாது. எனவே, இந்த பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பும் அதன்பின், பி.எட்., பட்டமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. 
வரும், 17ம் தேதி முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை துவங்க உள்ள நிலையில், யார், யார் விண்ணப்பிக்கலாம் என்பதை, டி.ஆர்.பி., தெளிவுபடுத்தியுள்ளது. எம்.காம்., - பி.எட்., படித்தவர்கள், நேரடியாக, முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், பொருளியல் பாடத்தினரும் விண்ணப்பிக்கலாம். 
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும், துவக்கத்தில் இருந்து அல்லாமல், மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. எனவே, இந்த பாடத்தில் பட்டம் பெற்றவர்களும், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts