இடைநிலை ஆசிரியர் நண்பர்களே.


2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தொகுப்பூதிய காலத்தில் நாம் பெற்ற எண்ணிலடங்காத துயரங்கள்....

எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.. ஆனால் ஏனோ எல்லோரும் அமைதியாய் இருக்கின்றோம்....

2004 முதல் 2006 வரை, 20 முதல் 22 மாதங்கள் வரை நாம் பெற்ற ஊதியம் 3000 மடடுமே....ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழந்தோம்
இரண்டு வருடம் சேர்த்து ஈட்டிய விடுப்பு ( E.L.) ஒப்படைப்பு இழந்தோம்..
இரண்டு வருட பணிக்காலத்தில் ஆண்டு ஊதிய உயர்வை இழந்தோம்...
இரண்டு வருட பணிக்காலத்தில் வருடத்திற்கு இரு முறை என அரசு  உயர்த்தி வழங்கிய D.A. அனைத்தையும் இழந்தோம்.
தொகுப்பூதிய காலத்திற்கான இரண்டு வருட service இழந்தோம்..
இரண்டு வருட மருத்துவ விடுப்பை இழந்தோம்.. 

நமக்காக அன்று தேர்தல் நேரத்தில் தொகுப்பு ஊதிய ஒழிப்பு  மாநாடு நடத்தி போராடி காலமுறை ஊதியத்தை பெற்று தந்தது தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி.


2004 ம் ஆண்டு பணியேற்று 2014 ல்  தேர்வு நிலை பெற வேண்டிய நாம் தொகுப்பூதிய காரணத்தினால் 2016 ல் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேர்வு நிலைக்குப் பெற வேண்டிய 3%,3%=6% ஊதிய உயர்வை இழந்துள்ளோம்.2014 ம் ஆண்டிலிருந்து 2016 ம் ஆண்டிற்கு தள்ளப்படுவதால் ஏற்படும் ஊதிய இழப்பு எண்ணிப்பாருங்கள். தேர்வு நிலை போன்று சிறப்பு நிலையும் 2024ல் இருந்து 2026 க்கு தள்ளிப் போகும். அவ்வாறு இடைப்பட்ட காலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகள் நிலை.

பணியாற்றிய காலத்திற்குரிய ( 2004 to 2006 ) முழுமையான ஊதியத்தை இழந்தோம்...

பணியாற்றுகின்ற காலத்தில் தற்போது 4200 தர ஊதியத்தை இழந்து போராடிக்கொண்டிருக்கி-றோம்..

எதிர்காலத்தில் ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்...

இந்த நிலை மாற...மாற்ற என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பாருங்கள். ஏற்பட்டுள்ள இழப்பு நமக்கே என உணர்ந்து செயல்படுங்கள்....

" இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல...

 அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் " என்னும் மாவீரன்    "நெப்போலியன் " கருத்தை மனதில் இருங்கள்.

ஆசிரியர் சமூகம்.... இது என் சமூகம்... என் நணபர்கள் அல்லல்படுவதை நான் எதிர்த்து கேட்காமல் வேறு எவன் கேட்பான் ? என்பதை தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள்...

இனிமேலும் அமைதியாக இருந்து...

நம்மையும், நம் பேரினத்தை ஏமாற்றும் எவருக்கும்...
மறைமுக ஆதரவளிக்காமல்..

என்றும் அரசின் ஆசிரியர் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடும் TNPTF-டன்  இணைந்து குரல் கொடுத்து ஆசிரியர் சமுதாயத்தை காத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Popular Posts