TNPTF VELLOOR Dist PERUM THIRAL MURAIYEDU

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு


வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்கிறார் ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்று செல்வதென முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் இதுகுறித்து விரிவாக விவாதிக்க இருப்பதால்,
முதலமைச்சர் பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்க நேரம்
ஒதுக்கியதை அடுத்து பிப்ரவரி 25ம் தேதி  மீண்டும் ஜாக்டோ கூட உள்ளது. இருப்பினும் திட்டமிட்டப்படி வருகிற 22 ந்தேதி ஆயத்த விளக்க கூட்டம் மார்ச் 8ந்தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவண் ஜாக்டோ மாநில அமைப்பு...

தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு


இடைநிலை ஆசிரியர் நண்பர்களே.


2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தொகுப்பூதிய காலத்தில் நாம் பெற்ற எண்ணிலடங்காத துயரங்கள்....

எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.. ஆனால் ஏனோ எல்லோரும் அமைதியாய் இருக்கின்றோம்....

2004 முதல் 2006 வரை, 20 முதல் 22 மாதங்கள் வரை நாம் பெற்ற ஊதியம் 3000 மடடுமே....ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழந்தோம்
இரண்டு வருடம் சேர்த்து ஈட்டிய விடுப்பு ( E.L.) ஒப்படைப்பு இழந்தோம்..
இரண்டு வருட பணிக்காலத்தில் ஆண்டு ஊதிய உயர்வை இழந்தோம்...
இரண்டு வருட பணிக்காலத்தில் வருடத்திற்கு இரு முறை என அரசு  உயர்த்தி வழங்கிய D.A. அனைத்தையும் இழந்தோம்.
தொகுப்பூதிய காலத்திற்கான இரண்டு வருட service இழந்தோம்..
இரண்டு வருட மருத்துவ விடுப்பை இழந்தோம்.. 

நமக்காக அன்று தேர்தல் நேரத்தில் தொகுப்பு ஊதிய ஒழிப்பு  மாநாடு நடத்தி போராடி காலமுறை ஊதியத்தை பெற்று தந்தது தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி.


2004 ம் ஆண்டு பணியேற்று 2014 ல்  தேர்வு நிலை பெற வேண்டிய நாம் தொகுப்பூதிய காரணத்தினால் 2016 ல் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேர்வு நிலைக்குப் பெற வேண்டிய 3%,3%=6% ஊதிய உயர்வை இழந்துள்ளோம்.2014 ம் ஆண்டிலிருந்து 2016 ம் ஆண்டிற்கு தள்ளப்படுவதால் ஏற்படும் ஊதிய இழப்பு எண்ணிப்பாருங்கள். தேர்வு நிலை போன்று சிறப்பு நிலையும் 2024ல் இருந்து 2026 க்கு தள்ளிப் போகும். அவ்வாறு இடைப்பட்ட காலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகள் நிலை.

பணியாற்றிய காலத்திற்குரிய ( 2004 to 2006 ) முழுமையான ஊதியத்தை இழந்தோம்...

பணியாற்றுகின்ற காலத்தில் தற்போது 4200 தர ஊதியத்தை இழந்து போராடிக்கொண்டிருக்கி-றோம்..

எதிர்காலத்தில் ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்...

இந்த நிலை மாற...மாற்ற என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பாருங்கள். ஏற்பட்டுள்ள இழப்பு நமக்கே என உணர்ந்து செயல்படுங்கள்....

" இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல...

 அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் " என்னும் மாவீரன்    "நெப்போலியன் " கருத்தை மனதில் இருங்கள்.

ஆசிரியர் சமூகம்.... இது என் சமூகம்... என் நணபர்கள் அல்லல்படுவதை நான் எதிர்த்து கேட்காமல் வேறு எவன் கேட்பான் ? என்பதை தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள்...

இனிமேலும் அமைதியாக இருந்து...

நம்மையும், நம் பேரினத்தை ஏமாற்றும் எவருக்கும்...
மறைமுக ஆதரவளிக்காமல்..

என்றும் அரசின் ஆசிரியர் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடும் TNPTF-டன்  இணைந்து குரல் கொடுத்து ஆசிரியர் சமுதாயத்தை காத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா?


உண்மை நிலவரம்
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா???

நண்பர்களே.. இவர்கள் அனைவரும் நவம்பர் 2001ல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் D.t.ed பதிவு செய்திருந்தவர்கள். ஜனவரி 2002ல் கரூர் மாவட்டத்தில் இவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது.
 
இவர்கள் அனைவரும் SC, MBC பிரிவினர். இவர்கள் அனைவருக்கும் பின்னடைவு பணியிடங்கள் இருந்தும் பணிநியமனம் மறுக்கப்பட்டது. மேலும் ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் 11.1.2002ல் நடத்தப்பட்ட பணிநியமணத்திலும் இவர்களுக்கு பணியிடங்கள் இருந்தும் சான்றிதழ்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் மறுக்கப்பட்டது. பெரம்பலூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அன்றைய நாளில் பணிநியமனம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பணி வழங்கப்பட்டு இருந்திருந்தால் காலமுறை ஊதியத்தில் பழைய ஓய்வூதியத்தில் நியமனம் செய்யப்பட்டிருப்பர். இதனை தொடர்ந்து 2004ல் தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து நியமனம் பெற்ற நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 2002ல் நியமனம் வழங்கப்பட்டிருந்தால் ஓய்வூதியம் கிடைத்திருக்கும்.

இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட பதிவுதாரர்கள். மற்ற மாவட்டங்களுக்கு மாறுதல்கள் பெற்று சென்றதால் அம்மாவட்டத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

அக இ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 28.02.2015 அன்று பயிற்சிகளின் தாக்கம் என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது


பணி நியமன முதல் கால முறை ஊதியம்; அரசாணையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள்

கடந்த, 2003 முதல் 2006 வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 40 ஆயிரம் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பதிவு மூப்பு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 10 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் என, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,000 ரூபாய், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,500 ரூபாய் என, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த அவர்களை, கடந்த, 2006, ஜூன் 1ம் தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தது. 
இருப்பினும், தங்களது பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் கேட்டு, ஆசிரியர்கள் போராடி வந்தனர்; அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.கடந்த, 2012, பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்டசபையில் இதுதொடர்பான கேள்வி எழுந்த போது, அரசு பரிசீலனை செய்து வருகிறது என, பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், 50 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பணி நியமன நாள் முதல், கால முறை ஊதியம் வழங்கி, அரசாணை பிறப்பிக்கும் உத்தரவை வெளியிட வேண்டும் என ஆசிரியர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள்  எதிர்பார்க்கின்றனர்.

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு




ஜாக்டோ போராட்டத்திற்கு 7சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஈரோடு, தேனி, நீலகிரி, காஞ்சிபுரம், திருநெல்வேலி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, இராமநாதபுரம், தர்மபுரி 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாகை, கிருட்டிணகிரி, கரூர், தஞ்சை, திருவாரூர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நாமக்கல், விருது நகர், திருப்பூர், மதுரை
தமிழக ஆசிரியர் கூட்டணி
திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், கோவை
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி 
தமிழ்நாடு தொடக்க நடு நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர்

வீட்டு கழிப்பறையை 'படம்' பிடித்து அனுப்ப உத்தரவு:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

'துாய்மையான இந்தியா- துாய்மையான தமிழகம்' திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கழிப்பறை பயன்பாடு உள்ளதா என்பதை உறுதி செய்து ஆதாரத்துடன் சான்றளிக்க அவர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆசிரியர் அல்லது அரசு ஊழியர்கள் போட்டோ, வீட்டு கழிப்பறை போட்டோ, முகவரி, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்களுடன், 'எனது வீட்டில் கழிப்பறை வசதி உள்ளது. அதை அனைவரும் பயன்படுத்துகிறோம்' என்ற கையெழுத்திட்ட உறுதிமொழி படிவத்துடன், கழிப்பறை போட்டோவையும் இணைத்து அந்தந்த துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன், மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது:சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த உத்தரவில் கழிப்பறையை போட்டோ ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு ஆசிரியைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிபந்தனையை வாபஸ் பெற வேண்டும்.'மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்' என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இன்னும் பல அரசு பள்ளிகளில் அந்த வசதி இல்லை. கழிப்பறை இருந்தாலும் தண்ணீர் வசதி இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்றனர்.

ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டம்

இதுகுறித்த அதிரடி அறிவிப்பு, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது. மத்திய அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என, விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது.

மானியம் ஒழிப்பு: முதற்கட்டமாக, பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்ட மானியம், முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த இரு எரிபொருட்களின் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விட்டதால், அவற்றின் விலைகள், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சமையல் எரிவாயு வினியோகத்தில் நடக்கும் முறைகேடுகளால், மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய, எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வசதி படைத்தவர்களுக்கு, குறிப்பாக, ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, அதாவது, 30 சதவீத வருமான வரி வரம்பில் வருவோருக்கு, மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, முழுவதுமாக வாபஸ் பெற, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
குறையலாம்: அதேநேரத்தில், ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை (20 சதவீத வருமான வரி வரம்பில் உள்ளவர்கள்) உள்ளவர்களுக்கும், மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது மானியத்தின் அளவு குறைக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பை, இந்த மாத இறுதியில் தாக்கல் செய்ய உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியிட, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தீவிரமாக பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அரசு வழங்கும் மானியமானது, தகுதியானவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதில், தற்போதைய மத்திய அரசு அக்கறை காட்டி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.மேலும், குழாய் மூலமான எரிவாயு வினியோகிக்கும் திட்டத்திற்கு, ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குழாய் எரிவாயு வினியோக திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
ரூ.63 ஆயிரம் கோடி :
*நடப்பு நிதியாண்டில், சமையல் எரிவாயு உட்பட, பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம், 63 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
*நாடு முழுவதும், சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்போர் எண்ணிக்கை, 15 கோடி.
*இவர்களில், ஐந்து லட்சத்திற்கும் மேலான வருமானம் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிட்டோஜாக்கின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர் உட்பட ஏனைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து 22.02.2015ல் மாவட்ட அளவில் ஆயுத்தக்கூட்டம் நடத்தவும், 08.03.2015ல் மாவட்ட அளவில் கண்டன பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி 09.02.2015 முதல் 12.03.2015 வரை ஐந்து சுற்றுகளாக சென்னையில் நடைபெறவுள்ளது


அரசு ஊழியர் /ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?

6% Increase in DA and DR for CG Employees and Pensioners from 1.1.2015 - Thus the DA and DR will go up to 113% from the existing rate of 107%. Increasing of Dearness Allowance for Government Employees and Pensioners is an important event of their economical life. This time is very crucial to assume that the All India CPI for IW is still stands at 253 level. But the calculation of Dearness Allowance is slightly vary from the existing level on every month.

How it is possible...We have given a table to know the way of calculation method of Dearness Allowance, particularly the vital role of multiplication factor of 115.76, which is recommended by 6th Pay Commission.

அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் மற்றும் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைத்து வழங்க மத்திய அரசு மறுப்பு


TET Certificate: - 82 முதல் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளையின் இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும். - TRB


அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளிலும் phonetic methodology (ஒலிப்பு முறையில்) ஆங்கிலம் கற்பிக்க குறுந்தகடுகள் (CD ) மற்றும் கட்டகம் அளிக்க இயக்ககம் உத்தரவு


7th Pay Commission's report to be implemented on 01.01.2006


ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்

CLICK HERE

READERS MUST BE AWARE, WE ESTIMATED 7TH PAY COMMISSION PAY SCALE AS ON 01.01.2016 IN THE MONTH OF APRIL 2014 AFTER CONSTITUTION OF 7TH PAY COMMISSION FOLLOWING METHODS ADOPTED BY 6TH PAY COMMISSION FOR REVISING CENTRAL GOVERNMENT EMPLOYEES PAY AND ALLOWANCES.

These are estimated 7th CPC Pay Scales and entry Pay in each of these projected Pay in Pay Band

7th Pay Commission projected Pay Scale – Revised Pay Bands, Grade Pay, Starting Pay in PB and Entry Pay

Pre RevisedPay ScalePB6 CPCPay bandsGradePay7th CPCPay Band7th CPCGrade Pay
S-1, S-2,15200-20200180014160-483607500
S-315200-20200180014160-483607500
S415200-20200180014160-483607500
S-515200-20200190014290-484907700
S-615200-20200200014420-486207800
S-715200-20200240014930-491308400
S-815200-20200280015440-496409000






S-929300-34800420026580-8472014900
S-1029300-34800420026580-8472014900
S-1129300-34800420026580-8472014900
S-1229300-34800420026580-8472014900
S-1329300-34800460027100-8524015500
S-1429300-34800480027350-8549015800
S-1529300-34800540028120-8626016700






New315600-39100540042480-9606022400
S-16315600-39100540042480-9606022400
S-17315600-39100540042480-9606022400
S-18315600-39100660044020-9760024300
S-19315600-39100660044020-9760024300
S-20315600-39100660044020-9760024300
S-21315600-39100760045300-9888025800
S-22315600-39100760045300-9888025800
S-23315600-39100760045300-9888025800






S-24437400-67000870096410-16390047300
S-25437400-67000870096410-16390047300
S-26437400-67000890096670-16416047600
S-27437400-67000890096670-16416047600
S-28437400-670001000098080-16556049300
S-29437400-670001000098080-16556049300
S-30437400-6700012000100640-16812052300

Popular Posts