ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும் - TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்


1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?

இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில்  இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.


2. சென்ற ஆண்டு பயன்படுத்திய மாறுதல் விண்ணப்பப் படிவத்தையே இந்த ஆண்டும் பயன்படுத்தலாமா?

இன்றோ, நாளைக்குள்ளோ இயக்குனரகம், கலந்தாய்வு விதிமுறைகள் குறித்த முழுமையான செயல்முறையையும் படிவத்தையும் வெளியிடும். அதுவரை காத்திருந்து அதை பின்பற்றுவதே சரியாக இருக்கும்.

3. இந்த வருட கலந்தாய்வு இணைய (ONLINE) வழியில் நடைபெற வாய்ப்புண்டா? 

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கலந்தாய்வு தேதிகள் ஒரே தேதியில் இல்லாமல் வெவ்வேறு தேதிகளில் நடைபெறுவதால், இணையவழியில் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது.

Popular Posts