அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குனர்கள் இது தொடர்பாக திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்பிஎல் நோட்டு புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் சப்ளை செய்ய வேண்டும். மே மாதம் 20ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட புத்தகங்களை ஏப்ரல் 8ம் தேதி முதல் வினியோகம் செய்து மே 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
அத்துடன் ஒரு செட் சீருடை மே 15ம் தேதியில் இருந்து மே 28ம் தேதிக்குள் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றை பள்ளிகள் திறக்கும் வேளையில் வினியோகம் செய்ய, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சபிதா தெரிவித்துள்ளார்.