மாணவர்கள் வெளியே செல்லலாமா?


"பள்ளி மாணவர்களை மதிய உணவு இடைவேளையின்போது, வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம்" என பெற்றோர், பள்ளி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு காரணம் என்ன, எங்கு இந்த கோரிக்கை என்றால், வழக்கம் போல, வெளிநாட்டில் தான்.

இங்கிலாந்தில் படிக்கும் மாணவர்கள், மதிய உணவு இடைவேளையில், வெளியே சென்று, துரித வகை(fast food) உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவர்களது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிகளுக்கு, பெற்றோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 73 சதவீத பெற்றோர் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். 

பள்ளி தரப்பில் கூறும்போது, "இடைவேளையில் மாணவர்களை வெளியே செல்லக்கூடாது என சொல்ல எங்களுக்கு உரிமையில்லை. இருப்பினும், பள்ளி வளாகத்தில் உள்ள சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுமாறு, மாணவர்களை அறிவுறுத்துவோம்" என்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளி களும் இதை கடைபிடிக்கலாம்.

Popular Posts