மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்


மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது.

மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன். 

திண்டுக்கல்லில் நடந்த பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Popular Posts