3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி.
கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் டிசம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன ஆணையில் TET தேர்வில் 5 ஆண்டுக்குள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதனால் இதே நிபந்தணையின் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் கல்வித்துறை மூலமாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர் - என்ற தினகரன் செய்தியால் அரசு நிதி உதவி பெறும்பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் Posting நிலைக்குமா என்று குழப்பம் அடைந்துள்ளனர்.
TET தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பள்ளியிலயே வேலை வாய்ப்பு கிடைக்கும் போது அரசு நிதி உதவி பள்ளி பணியை ஆசிரியர்கள் விரும்ப மாட்டார்கள்.
இதனால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிரப்ப இயலாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிரப்ப இயலாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து கல்வி துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இது மாநிலம் தழுவிய பிரச்சினை என்பதால் விரைவில் கல்வி துறை இயகுனரகம் மூலம் தெளிவுரை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினர்.
TET - தகுதிதான் அடிப்படை! - தினமணி கட்டுரை
ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை. வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.
இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.
மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?
அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.
இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.
இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.
தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.
மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.
காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு? மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம் - dinamani
நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி உத்தரவிட்டார். பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந் நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவனை சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு
பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
வர்மா குழு
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் நிலைப்பாடு: வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.
30 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.
ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

எப்போது வெளியாகும்?
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என திர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது: கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும். வ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.
மாணவர்கள் வெளியே செல்லலாமா?
"பள்ளி மாணவர்களை மதிய உணவு இடைவேளையின்போது, வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம்" என பெற்றோர், பள்ளி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு காரணம் என்ன, எங்கு இந்த கோரிக்கை என்றால், வழக்கம் போல, வெளிநாட்டில் தான்.
இங்கிலாந்தில் படிக்கும் மாணவர்கள், மதிய உணவு இடைவேளையில், வெளியே சென்று, துரித வகை(fast food) உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவர்களது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிகளுக்கு, பெற்றோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 73 சதவீத பெற்றோர் இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.
பள்ளி தரப்பில் கூறும்போது, "இடைவேளையில் மாணவர்களை வெளியே செல்லக்கூடாது என சொல்ல எங்களுக்கு உரிமையில்லை. இருப்பினும், பள்ளி வளாகத்தில் உள்ள சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுமாறு, மாணவர்களை அறிவுறுத்துவோம்" என்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளி களும் இதை கடைபிடிக்கலாம்.
மனிதவள மேம்பாட்டு மையங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
பல்கலைகளில் செயல்பட்டு வரும், அகடமி ஸ்டாப் காலேஜ் - ஏ.எஸ்.சி., மையங்களின் பெயரை, ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் சென்டர் - எச்.ஆர்.டி.சி., என, மாற்ற வேண்டும். தற்போதுள்ள, 66 மையங்களை, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள், 100 ஆக உயர்த்த வேண்டும். இந்த மையங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற, நிபுணர் குழுவின் பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும், தேர்வு செய்யப்பட்ட, 66 பல்கலைகளில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகாரக் குழுவின் சார்பில், ஏ.எஸ்.சி., மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்; பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்கள் என, மூன்று தரப்பினருக்கும், அவரவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பணியை, ஏ.எஸ்.சி., மையங்கள் செய்து வருகின்றன.
தேசிய கவுன்சில்இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மையங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, உரிய பரிந்துரைகளை அளிக்க, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை, யு.ஜி.சி., அமைத்தது. இக்குழு, 2011, டிசம்பர் முதல், ஜூன் வரை, 66 மையங்களிலும் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கும், யு.ஜி.சி.,க்கும், பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்களை, சமீபத்தில், தேசிய ஆலோசனை கவுன்சில் வெளியிட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த நோக்கங்களுக்காக ஏ.எஸ்.சி., மையங்கள் அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 13 மையங்கள் தான் செயல்பட்டுள்ளன. ஏழு மையங்கள் செயலிழந்து விட்டன; மற்ற மையங்கள், ஓரளவுக்கு செயல்படுகின்றன.
மையங்களில், நிரந்தர பணியாளர்கள் இல்லாதது, இயக்குனர் பணியிடமே, பல மையங்களில் காலியாக இருப்பது, அனைத்து வகையான பயிற்சிகளையும் முழுமையாக அளிக்காதது போன்ற குறைகள் அதிகம் உள்ளன.
சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன் மற்றும் மதுரை காமராஜர் ஆகிய, நான்கு பல்கலைகளில், ஏ.எஸ்.சி., மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், பாரதிதாசன் பல்கலை மையம், சுத்தமாகச் செயல்படவில்லை என, ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நிபுணர் குழு உறுப்பினரும், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தருமான எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:எந்த பல்கலையையும் குற்றம்சாட்டாமல், அந்த பல்கலையில் உள்ள மையத்தை வலுப்படுத்துவது குறித்து பேச வேண்டும். நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கையை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும், 2012 - 17க்கான, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்படும்.மனிதவள மேம்பாட்டு மையங்கள் வலுப்படுத்தப்பட்டால், உயர்கல்வியின் தரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைமையாசிரியர் பதவி:இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்பதால், அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகும், இடைநிலை ஆசிரியர்கள், பணிமூப்பு அடிப்படையில், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகின்றனர். இதில், நேரடி பட்டதாரி ஆசிரியருக்கும், இடைநிலை ஆசிரியராக இருந்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் சமநிலை உள்ளது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களாக, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2002 முதல் பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வின் போது, ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக வந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.இதன் மீது, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 50 , இடைநிலை ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் என, ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது - பள்ளிகல்வித்துறை - தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்
பண்டிகை முன்பணம் ரூபாய் .2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு / ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூபாய்.2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழக முதல்வர் இன்று(01/11/12) பேரவையில் அறிவிப்பு.
Press Release
Press Release
மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை
மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது.
ஒருவர், பத்து ரூபாயைத் திருடி விட்டாராம் என பரப்பப்படும் வதந்தி, பத்தாவது நபரைச் சென்றடையும்போது, பத்து கோடி ரூபாயாக மாறியிருக்கும்; அந்த அளவுக்கு, "வதந்தீ' கொடூரமானது.உண்மையான, நல்ல, நட்புறவான தகவல்களை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, அருமையான ஊடங்களாக இருக்கும், மொபைல் போனின், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., கலவரங்களை ஏற்படுத்தி விட்டன என்பது, சமீப கால உண்மை.வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை, ஒரு தரப்பினர், தவறாக புரிந்து கொண்டு, வதந்தியை பரப்பும் விதத்தில் அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., செய்திகளால், நாட்டின் பல பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த, வட கிழக்கு மாநிலத்தவர் ஏராளமானோர், ஆகஸ்டில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்ட, அவர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயன்றும் முடியவில்லை.அதையடுத்து, மொத்தமாக, அதிக எண்ணிக்கையில் (பல்க்), எஸ்.எம்.எஸ்., செய்திகளை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது; நிலைமையும் சில நாட்களில் சீரானது.
ஆனால்,"பல்க்' எஸ்.எம்.எஸ்., செய்திகளை பரிமாறிக் கொள்ளும் காது கேளாதோர், தகவல்களை தெரிவிக்கும் நிறுவனங்கள், ரயில்வே, விமான விசாரணை தகவல்கள் பாதிக்கப்பட்டன.
பல்க் எஸ்.எம்.எஸ்., என்ற பிரிவிற்குள் கொண்டு வரப்படும் பிரிவினர், யார் யார், யாருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, முன்வந்த மத்திய உள்துறை அமைச்சகம், அது குறித்து ஆராய, குழு ஒன்றை அமைத்துள்ளது.அந்த குழுவிற்கு, தொலை தொடர்புத்துறை இயக்குனர், ஆர்.சாக்யா அமைப்பாளராக இருப்பார். அதில், தொலை தொடர்புத்துறை, தகவல் தொழில்நுட்பம், உளவுப் பிரிவினர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்பினர் இடம்பெற்றிருப்பர்.இந்த உயர்மட்ட குழு, பட்டியல் ஒன்றைத் தயாரித்து, பல்க் எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., குறித்து முடிவு செய்யும்.
மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்
மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது.
மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன்.
திண்டுக்கல்லில் நடந்த பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here