இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும் இதனால் ஆசிரியர்கள் மனவேதனை அடைவதாகவும் மேலும் அமைச்சு பணியாளர்களோடு ஒப்பீட்டு ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை குறைப்பது நியாமற்ற செயல் எனவும் ஏற்கெனவே 5வது ஊதிய குழுவில் ஆசிரியர்களை விட குறைவான ஊதியம் பெற்றவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் ஒரு நபர் குழுவில் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை விட அதிகமாக பெறுவதை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா அல்லது தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா என்று வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் இளையராஜா , மாரிதுரை ,சதீஷ் மற்றும் குசேலன் ஆகியோர்கள் தொடர்ந்த இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Popular Posts