3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் - தினமலர்
கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி, இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.
வழக்கு: இடைநிலை ஆசிரியர்கள் முன்பு, மாவட்ட அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள், "மாவட்ட பதிவு மூப்பு எனில், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பட்டதாரி, முதுகலை ஆசிரியரைப் போல், இடைநிலை ஆசிரியரையும், மாநில பதிவு மூப்பில் நியமிக்க வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும், மதுரை கிளையின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. அரசு விருப்பம்: தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்ய, தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது; அதன்படி பணி நியமனம் செய்து வருவதையும் தெரிவித்தது. இந்த வழக்கில், செப்., 15க்குள் தீர்ப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.
47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன.
பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மூன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி தயாரிக்கும் வேலை, மும்முரமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும், கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும் என, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு-
மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்க்ளுக்கு, 2012ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
டில்லியை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மெரிட் ஸ்காலர்ஷிட்ப் திட்டம் மூலம் ஒரு பெண் குழந்தையை தேர்வு செய்து 12ம் வகுப்பிற்கான உதவிதொகை வழங்கவுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ. மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதி, விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்ப அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியன ஆசிரியர் காலி இடவிவரம்
ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5451 இடைநிலை ஆசிரியர் பணிஇடங்களும், 18932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்படஉள்ளன. பாடவரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் :
தமிழ் - 1,778
ஆங்கிலம் - 5,867
வரலாறு - 4,185
புவியியல் - 1,044
கணிதம் - 2,606
இயற்பியல் - 1,213
வேதியியல் - 1,195
தாவரவியல் - 518
விலங்கியல் - 513
தெலுங்கு பண்டிட் - 12
உருது பண்டிட் - 1
பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் கூறியுள்ளதாவது: திங்கள் கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்யவேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்கவேண்டும்.
மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும். மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்லவேண்டும்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க புதிய வழிமுறை
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் கூறியுள்ளதாவது: திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளில் காலை மைதானத்தில் கூடி நின்று இறைவணக்கம் செய்ய வேண்டும். அதில், தமிழ்தாய் வாழ்த்து, கொடியேற்றம், கொடிப்பாடல், உறுதிமொழி, சர்வசமய வழிபாடு, திருக்குறள் விளக்கம், செய்திவாசித்தல், இன்றைய சிந்தனை, பிறந்தநாள் வாழ்த்து, ஆசிரியர் உரை ஆகியவை 20 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.மதிய உணவு இடைவேளைக்கு முன், எளிய யோகா பயிற்சி, ஒழுக்ககல்வி, உடல்நலக்கல்வி, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், முதல் உதவி, தற்காப்பு விதிகள் கற்றுத்தர வேண்டும்.
மதிய உணவுக்கு பின், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில், இரண்டு சொற்கள் எழுத சொல்ல வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் வாக்கியமாக அமைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை, மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் கூறுதலை செய்யவேண்டும், என கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகள் சேர்ப்பு?
சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "செப்" தாமுவுடன் இணைந்து, புதிய, "மெனு" தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்டை மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது.
இதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், "தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்" என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டபோது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
புதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது.
இதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, "செப்" தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வழங்கும் உணவு
தினம் - சாதம், சாம்பார், அவித்த முட்டை
செவ்வாய் - பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்
வெள்ளி - உருளைக்கிழங்கு கூட்டு
செவ்வாய் - பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்
வெள்ளி - உருளைக்கிழங்கு கூட்டு
புதிய மதிய உணவு முறை
* வழக்கம் போல் சாதம், சாம்பார் ஒரு நாள்.
* மற்ற நாட்களில், பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பில்லை அல்லது கீரை சாதம், தக்காளி சாதம் என, 13 விதமான உணவுகளில், தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது.
* அவித்த முட்டை ஒரு நாளும், மற்ற நாட்களில், பெப்பர் முட்டை, மசாலா முட்டை, பருப்பு முட்டை, முட்டைப் பொரியல் என, உணவு வகைக்கு ஏற்ப மாற்றித் தரப்பட உள்ளது.
* உருளை மசாலா, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் என, இரண்டு நாட்கள் தர உள்ளனர்.
* மற்ற நாட்களில், பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பில்லை அல்லது கீரை சாதம், தக்காளி சாதம் என, 13 விதமான உணவுகளில், தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது.
* அவித்த முட்டை ஒரு நாளும், மற்ற நாட்களில், பெப்பர் முட்டை, மசாலா முட்டை, பருப்பு முட்டை, முட்டைப் பொரியல் என, உணவு வகைக்கு ஏற்ப மாற்றித் தரப்பட உள்ளது.
* உருளை மசாலா, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் என, இரண்டு நாட்கள் தர உள்ளனர்.
ஆர்.டி.ஐ., கேள்விகள் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்: மத்திய அரசு கட்டுப்பாடு
"தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, பொதுமக்கள், தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, 2005ம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்கள் கேட்டு, கேள்விகள் சமர்ப்பிக்கும் போது, அந்தக் கேள்விகள், இவ்வளவு வார்த்தைகளில் தான் இருக்க வேண்டும் என, இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கேள்விகள், 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இதில், மத்திய பொது தகவல் அலுவலர் பெயர், முகவரி, விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுப்பதில்லை. இருப்பினும், 500 வார்த்தைகளுக்கு மேல் இருந்தாலும், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.மேலும், மத்திய தகவல் ஆணையரிடம், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்பவர்கள், அவர்களே நேரடியாக ஆஜராக வேண்டும் அல்லது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். இல்லையெனில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டு, பதில்கள் தபாலில் அனுப்பப்படும் போது, 50 ரூபாய்க்கு மேல், செலவு ஏற்பட்டால், கூடுதலாகும் தபால் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.
தகவல்கள் கோரி விண்ணப்பம் செய்வோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்பவர் என்பதற்கான, அரசு வழங்கிய சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். பிற விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண வில்லையை இணைக்க வேண்டும்.இவ்வாறு பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
Results of Departmental Examinations - MAY 2012
Results of Departmental Examinations - MAY 2012 (Updated on 14 August 2012) |
இரட்டை பட்டம் செல்லாது - உயர் நீதி மன்றம்
இரட்டை பட்டம் செல்லாது என்று உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சார்ந்த ஆசிரியர்கள் குழுவாக இணைந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கு விசாரனை முடிந்த நிலையில் நீதியரசர் மதிப்புமிகு. இராமசுப்பிரமணியன் இன்று தனது தீர்ப்பில் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதித்திருந்த இடைக்கால தீர்பை ஆதரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதது மட்டுமல்லாமல் பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக ஒருங்கிணைப்பு குழுவைச்சார்ந்த திரு.ஆரோக்கியராஜ் கூறினார்.
ஆசிரியர் கவுன்சிலிங்: வீடியோ கேமராவில் பதிவு செய்ய கோரிக்கை
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் கவுன்சிலிங் அனைத்தும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தால், முறைகேடுகளை தவிர்க்க முடியும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பல லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இட மாறுதல் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆண்டு தோறும் கவுன்சிலிங் நடத்தி வருகிறது.
இதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையில் கவுன்சிலிங் நடப்பதில்லை. இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் இல்லாத நிலையில் பல மாவட்டங்களில் இருந்து, மாவட்ட மாறுதலுக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.
சில கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பெயரால் கவுன்சிலிங்களில் முறைகேடு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். காலிப்பணியிடங்களை மறைத்து தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் வருமானம் இருப்பதால், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் தொடர்ந்து வருகிறது.
இதனை தவிர்க்க ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு நடக்கும் கவுன்சிலிங் போல் ஆன் லைன் வசதி செய்ய வேண்டும். இடமாறுதல் உத்தரவுகளை கம்ப்யூட்டர் மூலமாக உடனடியாக வழங்க வேண்டும்.
இது போன்ற நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடைப்பிடித்தால் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படும். இதனை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டி.இ.டி., தகுதி மதிப்பெண்களை 40 சதவீதமாக குறைக்க திட்டம்- தினமலர் செய்தி
டி.இ.டி., தேர்வில், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், வெறும், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், 12ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி., ), 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில், "கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்தது; நேரமும் போதவில்லை. இதனால், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை' என, தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.இதை நிரூபிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் அமைந்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 10 சதவீத தேர்ச்சியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எதிர்பார்த்த நிலையில், வெறும், 2 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்வு எழுதிய, 5.5 லட்சம் பேரில், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேறியுள்ளனர்.
டி.இ.டி., தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26 ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது, டி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு, குறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால், தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில், பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால், வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில், தகுதி மதிப்பெண்களாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால், தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்; அதை மனதில் கொண்டு, உரிய முடிவை எடுப்போம். இந்தச் சலுகை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன், உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில், வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினருக்கு, கூடுதல் சலுகை அளிப்பது குறித்தும், ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
தகுதி மதிப்பெண்ணைகுறைத்தால் சிக்கல் தான்:டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி குறைவாக உள்ளதை காரணம் காட்டி, தகுதி மதிப்பெண்களை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டும் குறைத்து முடிவெடுத்தால், அடுத்த தேர்வுக்கும், இதே தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். இதற்கு, டி.ஆர்.பி., சம்மதிக்காத பட்சத்தில், தேர்வர்கள், கோர்ட்டை நாட வேண்டிய நிலை உருவாகும்.எனவே, நடந்து முடிந்த தேர்வு உட்பட, இனி நடத்தப்போகும் தேர்வுகளுக்கும், ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், நடந்து முடிந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒரு தேர்வை நடத்த வேண்டும். இந்த இரண்டில், ஏதாவது ஒரு முடிவை எடுக்காவிட்டால், டி.ஆர்.பி.,க்கு சிக்கல் தான்!
டி.இ.டி., தேர்வு மூலம், 7,194 இடைநிலை ஆசிரியர்; 18 ஆயிரத்து, 987 பட்டதாரி ஆசிரியர் என, 26 ஆயிரத்து, 181 ஆசிரியரை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது, டி.ஆர்.பி.,க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு, குறைந்தபட்சம் ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேரை அழைக்க வேண்டும். அந்த வகையில், 78 ஆயிரம் பேர் அழைக்கப்பட வேண்டும். ஆனால், தேர்வு செய்ய உள்ள மொத்த எண்ணிக்கையில், பாதி அளவிற்குக் கூட ஆசிரியர் தேர்ச்சி பெறாததால், வேறு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே வெளியிட்ட விதிமுறைப்படி, 150 மதிப்பெண்களில், தகுதி மதிப்பெண்களாக, குறைந்தபட்சம், 60 சதவீதம் பெற வேண்டும். அதன்படி, 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், மிகக் குறைவானவர்கள் மட்டுமே இம்மதிப்பெண்களை பெற்றிருப்பதால், தகுதி மதிப்பெண்களை, 40 சதவீதமாகக் குறைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.ஒரு பணியிடத்திற்கு, மூன்று பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்; அதை மனதில் கொண்டு, உரிய முடிவை எடுப்போம். இந்தச் சலுகை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டுமே பொருந்தும் என்ற அறிவிப்புடன், உரிய முடிவு வெளியிடப்படும்.தேர்வு முடிவில், வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக தேர்வு முடிவை வெளியிட முடியாது. இது குறித்து, ஓரிரு நாளில் முடிவெடுத்து, 20ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினருக்கு, கூடுதல் சலுகை அளிப்பது குறித்தும், ஆலோசனை நடக்கிறது.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
தகுதி மதிப்பெண்ணைகுறைத்தால் சிக்கல் தான்:டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி குறைவாக உள்ளதை காரணம் காட்டி, தகுதி மதிப்பெண்களை, இந்த ஒரு தேர்வுக்கு மட்டும் குறைத்து முடிவெடுத்தால், அடுத்த தேர்வுக்கும், இதே தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். இதற்கு, டி.ஆர்.பி., சம்மதிக்காத பட்சத்தில், தேர்வர்கள், கோர்ட்டை நாட வேண்டிய நிலை உருவாகும்.எனவே, நடந்து முடிந்த தேர்வு உட்பட, இனி நடத்தப்போகும் தேர்வுகளுக்கும், ஒரே தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், நடந்து முடிந்த தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துவிட்டு, மீண்டும் ஒரு தேர்வை நடத்த வேண்டும். இந்த இரண்டில், ஏதாவது ஒரு முடிவை எடுக்காவிட்டால், டி.ஆர்.பி.,க்கு சிக்கல் தான்!
( இது எதிர்பார்க்கப்படும் செய்தி மட்டுமே , அதிகார்கபூர்வமான தேர்வு முடிவுகளுக்கு பின்பே முழுமையான தகவல்களை பெற முடியும் )
தபால் மூலம் நேரடியாக எம்ஏ படித்தவருக்கு அரசு பணி வழங்கியதை பறித்தது சரியானதுதான் -உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையை சேர்ந்த ராஜேஸ்தீனா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. நான் விழுப்புரம் மாவட்டம் திருவத்தூரில் கிராம நூலகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டேன். என்னை நூலகர் கிரேட் 3 என்ற அந்தஸ்தில் அரசு நியமித்து உத்தரவிட்டது. பின்னர் படிப்பு ஆவணங்களை மாவட்ட நூலகர் ஆய்வு செய்து எனது பதவியை பறித்து உத்தரவிட்டார். தபால் மூலம் எம்ஏ படித்தது தவறானது. எனவே பதவி பறிக்கப்பட்டதாக மாவட்ட நூலகர் அறிவித்தார். நூலகர் உத்தரவை ரத்து செய்து எனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம்,, மாவட்ட நூலகர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை மாவட்ட நூலகர் அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராஜேஸ்தீனா தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி கே.சந்துரு விசாரித்தார். அப்போது அரசு தரப்பில்கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகி, “பிளஸ் 2 முடித்து 3 ஆண்டு பி.ஏ. படித்து முடித்து, அதன்பிறகு 2 ஆண்டு எம்.ஏ படித்தால்தான் அது சட்டப்படி செல்லும், நேரடியாக தபால் மூலம் மனுதாரர் எம்.ஏ. படித்தது செல்லாது எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
இதை நீதிபதி கே.சந்துரு ஏற்றுக்கொண்டு தபால் மூலம் நேரடியாக எம்ஏ படித்தவருக்கு அரசு பணி வழங்கியதை பறித்தது சரியானதுதான் எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி!
சென்னை, ஆக.10: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர். ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. 5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை : முதல்வர் உத்தரவு
10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 1,500ம், 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகள், பஸ்சில் துணைக்கு ஒருவருடன் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக, அரசு ரூ. 22.34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்
தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு பருவத்துக்கும் 2 புத்தகங்கள் அச்சடித்து வழங்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
இப்போதுள்ள முறையின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பருவத்துக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடுவதற்கு முன்பாக, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் இந்த புத்தகங்களை எவ்வாறு அச்சிடலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில், குழந்தைகளுக்குப் புரியும் வகையில் அதிகப் படங்களுடனும், குறைந்த பக்கங்களிலும் புத்தகங்களைத் தயாரிக்க உத்தரவிடப்பட்டது.
புத்தகங்களை எளிமையாக்கும் வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு புத்தகங்களாகப் பிரித்து அச்சிடப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், பிற பாடங்கள் மற்றொரு புத்தகமாகவும் அச்சிடப்படுகின்றன.
செப்டம்பர் முதல் வாரத்துக்குள்... ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் தலா இரண்டு புத்தகங்கள் வீதம் 16 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கே. கோபால் தெரிவித்தார்.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறையை தமிழக அரசு நடப்பாண்டில் அறிமுகம் செய்தது. அதனடிப்படையில், ஒவ்வொரு கல்வியாண்டும் மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் இரண்டாம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்கள் மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சமச்சீர் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகமும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சடிக்கும் பணி இப்போது தொடங்கியுள்ளது.
இந்தப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால் கூறியது:
இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அடங்கிய சி.டி.க்கள் எங்களிடம் வழங்கப்பட்டு விட்டன. புத்தகங்களை அச்சிடும் பணி இப்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. முதல் பருவத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பருவத்தில் அந்தப் புத்தகங்களை மேம்படுத்தி, ஒவ்வொரு புத்தகமும் 200 பக்கத்துக்கு மிகாத வகையில் அச்சிடப்படுகின்றன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலுள்ள புத்தகங்கள் தனி கவனத்துடன் அதிக படங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள்: இரண்டாம் பருவத்துக்காக 1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரத்து 500 இலவசப் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த புத்தகங்களில் தமிழ் வழிப் புத்தகங்களே அதிகம் இருக்கும்.
தனியார் பள்ளிகள் மற்றும் சில்லறை விற்பனைக்காக 76 லட்சத்து 38 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அக்டோபர் மாதத்தில்தான் இரண்டாம் பருவம் தொடங்குகிறது. ஆனால், செப்டம்பர் முதல் வாரத்துக்குள் புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிடும் என்றார் அவர்.
புத்தகங்களின் விலை நிர்ணயம்: முப்பருவ முறையின் கீழ் இரண்டு, மூன்றாம் பருவங்களுக்கான புத்தகங்களின் விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள் காரணமாக புதிய புத்தகங்களின் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் பருவத்தோடு ஒப்பிடும்போது 1, 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.10 வரையிலும், 3, 4, 5, 6 வகுப்புகளுக்கான புத்தகங்களில் ரூ.5 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 7, 8 வகுப்புகளுக்கான புத்தகங்களில் எந்தவித மாற்றமும் இல்லை.
இரண்டு, மூன்றாம் பருவப் புத்தகங்களின் விலை
வகுப்பு புத்தக மொத்த
எண்ணிக்கை தொகுதி-1 தொகுதி-2 விலை
1 2 ரூ.30 ரூ.40 ரூ.70
2 2 ரூ.30 ரூ.40 ரூ.70
3 2 ரூ.30 ரூ.55 ரூ.85
4 2 ரூ.30 ரூ.55 ரூ.85
5 2 ரூ.40 ரூ.45 ரூ.85
6 2 ரூ.35 ரூ.50 ரூ.85
7 2 ரூ.40 ரூ.60 ரூ.100
8 2 ரூ.40 ரூ.60 ரூ.100
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும் இதனால் ஆசிரியர்கள் மனவேதனை அடைவதாகவும் மேலும் அமைச்சு பணியாளர்களோடு ஒப்பீட்டு ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை குறைப்பது நியாமற்ற செயல் எனவும் ஏற்கெனவே 5வது ஊதிய குழுவில் ஆசிரியர்களை விட குறைவான ஊதியம் பெற்றவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் ஒரு நபர் குழுவில் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை விட அதிகமாக பெறுவதை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா அல்லது தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுமா என்று வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் இளையராஜா , மாரிதுரை ,சதீஷ் மற்றும் குசேலன் ஆகியோர்கள் தொடர்ந்த இந்த வழக்கை ஏற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here