வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக அரசு தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் தாங்கள் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலகத்தை 2015-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ள வேண்டும்.