தெலுங்கானா மக்களுக்கு அள்ளிக்கோ சலுகைகள்!வாரி வழங்கினார் முதல்வர் சந்திரசேகர ராவ்

புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் முதல், முதல்வராக பொறுப்பேற்றுள்ள, டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, மாநில மக்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

௨௯வது மாநிலம்:'ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும்' என, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தெலுங்கானா பகுதி மக்கள் கோரி வந்தனர். 

அவர்களின் கோரிக்கை, இம்மாதம் 2ல், நிறைவேறியது. நாட்டின், 29வது மாநிலமாக தெலுங்கானா உருவானது. அம்மாநில புதிய முதல்வராக, சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். இந்த பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக, பலபோராட்டங்களை நடத்தி வந்த ராவ்,முதல்வரானதும், பல திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறார்.

நேற்று அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
மேலும் புதிதாக, 14 மாவட்டங்கள் உருவாக்கப்படும்;
விவசாய கடன், 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்; இதனால், 23 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்; இது, 10 நாட்களில் செயல்
படுத்தப்படும்.
ஆட்டோ ரிக் ஷாக்களுக்கு சாலை வரி ரத்து.
நலிவடைந்த பிரிவினருக்கு, இரண்டு படுக்கையறை வீடு; முதற்கட்டமாக, 5,000 வீடுகள் கட்டப்படும்.
எல்.கே.ஜி., முதல் முதுகலை படிப்பு வரை கல்வி இலவசம்.
முதியோர் பென்ஷன் 1,000 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500 ரூபாய்.

Popular Posts