TNTET - 5% மதிப்பெண் தளர்வினை 2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும்

TET ஆசிரியர் தேர்வில், 2013 தேர்வுக்கு அரசின் 5 மதிப்பெண் சதவீத தளர்வு செல்லும்.2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும், என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்,தகுதி தேர்வைநடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60சதவீதம்பெற வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்காக 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்த 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. 5 சதவீத மதிப்பெண்தளர்த்தப்பட்டதை எதிர்த்தும், 2012ல் நடந்த தேர்வுக்கு, மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும்,சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்ச்சி மதிப்பெண்ணை, 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து, மதிப்பெண் தளர்த்துவதில்,கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே, அரசு பரிசீலிக்கவில்லை எனக்கூற முடியாது.


தகுதி தேர்வு, போட்டி தேர்வு அல்ல; அது, தகுதி பெறுவதற்கான தேர்வு.மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள, ஆசிரியர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம்.இடஒதுக்கீடு பிரிவினருக்காக, தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைப்பதற்கு, அரசு, கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் அதிகாரத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்படவில்லை.
எனவே, 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது செல்லும். மதிப்பெண் தளர்த்தியதை, 2012ல் நடந்த, ஆசிரியர்தகுதி தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்தினால்,குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

Popular Posts