அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது