3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு
பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவுமூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.
கடந்த, 2010-11 ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 1,500 பேருக்கு, வேலூர், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களில், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று தெரிவித்தது. சம்பந்தப்பட்ட பதிவுதாரர்களுக்கு, தபாலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல், 2010-11 ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், நிரம்பாமல் உள்ள 120 பணியிடங்களை நிரப்ப, 24ம் தேதி, மேற்கண்ட ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது. இதற்காக, 480 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இரு தேர்வு முடிவுகள் இன்று(ஜுன் 20) வெளியீடு: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
கருணை அடிப்படையில் வேலை பெறும் திருமணமாக இருக்கும் பெண் குடும்ப உறுப்பினர்களிடம் மறுப்பின்மை சான்றையும் தான் மற்றும் தன் துணையும் குடும்ப உதவி உறுதி ஆவணமும் அளிக்கும் நிலையில் - வேலை அளிக்கலாம் - அரசாணை வெளியீடு
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகாமல் இருந்து பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்
இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு -
அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி கடன் :
அ). ரூ. 50000/- வரை -5.50 %ஆ). ரூ. 50001/- முதல் 150000/- வரை - 7.00 %
இ). ரூ.150001/- முதல் 500000/- வரை - 9.00 %
ஈ). ரூ.500000/- த்திற்கு மேல் - 10.00%
கூட்டுறவு வங்கிகளில் பெறும் கடன்களுக்கு - 10.00%
பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்
தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளுக்கு சதுரங்க விளையாட்டு பலகை வழங்குவதற்கு பள்ளிகளின் விவரங்கள் கோருதல்
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 007436 /கே 2 / 2012, நாள். 6. 2012
பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 7 முதல் 17 வயதுள்ளபள்ளி செல்லும் தொடக்க / நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும்நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்திசெய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர்உத்தரவிட்டுள்ளார்.
அரசானை 213-26.12.2011 ல் திருத்தும் - நிதி உதவி பள்ளிகளில் (Aided Schools ) பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) அமைக்கும் பொது அதன் CHAIRMAN என்ற பதவிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் (PTA ) என்று இருக்கும் நிதி உதவி பள்ளியானால் அதனோடு The School manager/ correspondent/ secretary or his nominee of the school committee என்று சேர்க்க வேண்டும் - அரசாணை 126 வெளியீடு
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு பள்ளிகள் பற்றிய விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட அதிகாரிகள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளை, 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்தகைய வசதிகள், அரசுப் பள்ளிகளில் இருக்கிறதா என்பதை, நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் இல்லாத, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருந்தால், அதைப் பற்றிய விவரங்களை, 15ம் தேதிக்குள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, சம்பந்தபட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு கருத்துருக்கள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், சிறப்புத் திட்டத்தின் கீழ், ஒரு கழிப்பறைக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில் ஈடுபடுதலை தவிர்க்க இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 012921 / அ1 / 2012, நாள். 28.05.2012
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில்ஈடுபடுத்துவதாகவும், இதனால் தேவையற்ற நிகழ்வுகள்ஏற்படுவதாகவும் இயக்குநரின் கவனத்திற்குகொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் தொடக்கக்கல்வித் துறையைச்சார்ந்த அலுவலகங்களில் அலுவலக நேரத்திற்கு பின்னர் பெண்ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனதிட்டவட்டமாக அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவித்துஅதன் ஒப்புதலைப் பெற்று கோப்பில் வைத்து கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறது.
தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள்,தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும்எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல்நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்புவழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்விஇயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்துநேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர்உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :-
12.06.2012 - காலை 9-30 மணி -சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012-காலை 9-30 மணி -கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்
14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்
15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்
16.06.2012 - காலை 9-30 மணி -தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை
18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி
19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி
21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி
22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்
தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.
தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :-
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :-
தொடக்கக் மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது ?
அரசு அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு முன் சரியான காலிப் பணியிட விவரங்களை அறிய , காட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டு , உபரி ஆசிரிய பணியிடங்கள் காலி பணியிடங்களுக்கு மாற்றப்பட்டு. இப்பணி இட நிரவல் முடிந்த பின்பு சரியான காலிப் பணி இடங்களைக் கொண்டு மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது . இதே போல் பள்ளிக்கல்விதுறையில் உள்ள பட்டதாரி ஆசிரிய பணியிடங்களும் நிரவப்படுகிறது. மீதம் உள்ள பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆனாலும் குறிப்பிட்ட துறைகள் இது சார்ந்து முறையான அறிவிப்பை வெளியிட்டப் பின்பே சரியான தேதிகள் தெரிய வரும். அதுவரை இவை அனைத்தும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் செய்தியாகவே இருக்கும். உரிய துறைகளின் முறையான அறிவிப்பிற்கு பின் விரைவில் இவர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி நம் இணைய தளத்தில் வெளியிடப்படும் .
ஆனாலும் குறிப்பிட்ட துறைகள் இது சார்ந்து முறையான அறிவிப்பை வெளியிட்டப் பின்பே சரியான தேதிகள் தெரிய வரும். அதுவரை இவை அனைத்தும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் செய்தியாகவே இருக்கும். உரிய துறைகளின் முறையான அறிவிப்பிற்கு பின் விரைவில் இவர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி நம் இணைய தளத்தில் வெளியிடப்படும் .
தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 05062012
அரசாணை(நிலை) எண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009அரசாணையின்படி தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3கல்வித் தகுதியில்லாமல், பல ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
(soon the proceeding will be updated)
(soon the proceeding will be updated)
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here