அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Popular Posts