கவலைக்கிடமாகும் இந்தியாவின் சுகாதாரம்



உலக அளவில் சுகாதாரத்தில் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வரு கிறது. குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.




உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக் கிறது. அதாவது உலக அளவில் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை யில் 20 சதவிகிதம் பேர் இந்தியாவை சேர்ந்த பெண்களாகவே இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்து 87 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண் ணிக்கை 56 ஆயிரம் பேர் என ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது.




இந்தியாவில் பெண்களுக்கு போதிய அள வில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. குறிப்பாக இந்திய பெண்களில் 56.2 சதவிகிதம் பேர் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட் டிருக்கின்றனர். இந்தாண்டின் துவக்கத் தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வறிக் கையை வெளியிட்டார். ஐந்து வயதிற்கு உட் பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் குறைந்த எடையளவிலேயே இருக்கின்றனர். 52 சதவிகித குழந்தைகள் போதிய வளர்ச்சியற்ற நிலையி லேயே இருக்கின்றனர் என்று கூறினார். இப்படி இந்திய மக்க ளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு செய்தால் கவலையளிப் பதாகவே இருக்கிறது.




ஒரு புறம் சேமிப்பு கிடங்குகளில் உள்ள உணவு தானியங்கள் மக்கி வீணாகின்றன. மறுபுறம் எலிகளுக்கு உணவாக்கப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசு அதனை உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு கொடுக்க மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றம் வீணாகும் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறிய போது, அதெல்லாம் முடியாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங், ‘கொள்கை’ முழக்கமிட்டார். கொஞ்சம்நஞ்சம் ஒதுக்கும் பொதுசுகாதாரத்திற் கான நிதியையும் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைக்கு திருப்பி விடுகின்ற னர். மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் விதமாக சுகாதாரத்தையே அரசு தனது பொறுப்பி லிருந்து கைவிடும் கொள்கையையே பின்பற்றி வருகிறது.




ஏழைகள் உணவின்றி உயிரை விட்டாலும் பரவாயில்லை எனக் கருதும் மத்திய அரசு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகி தம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. அதற்காக இதுவரை அள்ளிக் கொடுத்த மக்களின் வரிப்பணம் போதாது என்று, தற்போதும் ஏற்றுமதி நிறுவனங் களுக்கு பல்லாயிரங்கோடி ரூபாய்களை அள் ளித்தர தயாராகி வருகிறது. இந்தியாவின் சுகா தாரம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரு கிறது. இந்நிலை நீடிப்பது இந்தியாவிற்கு நல்ல தல்ல. இந்த நேரத்திலாவது இடதுசாரிகளிடம் 2004 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதியளித்தபடி சுகாதாரத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும். அதன் மூலம் ஏழைகளை பாதுகாத்திட மத்திய அரசு முன்வர வேண்டும்.
 நன்றி ! தீக்கதிர் 

Popular Posts