3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
கவலைக்கிடமாகும் இந்தியாவின் சுகாதாரம்
உலக அளவில் சுகாதாரத்தில் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வரு கிறது. குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக் கிறது. அதாவது உலக அளவில் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை யில் 20 சதவிகிதம் பேர் இந்தியாவை சேர்ந்த பெண்களாகவே இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்து 87 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண் ணிக்கை 56 ஆயிரம் பேர் என ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது. இந்தியாவில் பெண்களுக்கு போதிய அள வில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. குறிப்பாக இந்திய பெண்களில் 56.2 சதவிகிதம் பேர் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட் டிருக்கின்றனர். இந்தாண்டின் துவக்கத் தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வறிக் கையை வெளியிட்டார். ஐந்து வயதிற்கு உட் பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் குறைந்த எடையளவிலேயே இருக்கின்றனர். 52 சதவிகித குழந்தைகள் போதிய வளர்ச்சியற்ற நிலையி லேயே இருக்கின்றனர் என்று கூறினார். இப்படி இந்திய மக்க ளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு செய்தால் கவலையளிப் பதாகவே இருக்கிறது. ஒரு புறம் சேமிப்பு கிடங்குகளில் உள்ள உணவு தானியங்கள் மக்கி வீணாகின்றன. மறுபுறம் எலிகளுக்கு உணவாக்கப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசு அதனை உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு கொடுக்க மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றம் வீணாகும் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறிய போது, அதெல்லாம் முடியாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங், ‘கொள்கை’ முழக்கமிட்டார். கொஞ்சம்நஞ்சம் ஒதுக்கும் பொதுசுகாதாரத்திற் கான நிதியையும் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைக்கு திருப்பி விடுகின்ற னர். மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் விதமாக சுகாதாரத்தையே அரசு தனது பொறுப்பி லிருந்து கைவிடும் கொள்கையையே பின்பற்றி வருகிறது. ஏழைகள் உணவின்றி உயிரை விட்டாலும் பரவாயில்லை எனக் கருதும் மத்திய அரசு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகி தம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. அதற்காக இதுவரை அள்ளிக் கொடுத்த மக்களின் வரிப்பணம் போதாது என்று, தற்போதும் ஏற்றுமதி நிறுவனங் களுக்கு பல்லாயிரங்கோடி ரூபாய்களை அள் ளித்தர தயாராகி வருகிறது. இந்தியாவின் சுகா தாரம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரு கிறது. இந்நிலை நீடிப்பது இந்தியாவிற்கு நல்ல தல்ல. இந்த நேரத்திலாவது இடதுசாரிகளிடம் 2004 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதியளித்தபடி சுகாதாரத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும். அதன் மூலம் ஏழைகளை பாதுகாத்திட மத்திய அரசு முன்வர வேண்டும். |
அரசு நிதியில் ஆதாயம் தேட முனையும் ரிலையன்ஸ்: பிரதமருக்கு தபன்சென் கடிதம்
சிஏஜி மற்றும் கட்டண ஆணைய அறிக்கைக்கு பின்னரே கேஜி-டி 6 இயற்கை எரிவாயு விலை தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என தபன் சென் எம்.பி. பிரதமருக்கு எழுதிய கடிதத் தில் கூறியுள்ளார்.
கே.ஜி-டி6 எனப்படும் கோதாவரிப் படுகை எரிவாயு விலையை உயர்த்துதல் விஷயத்தில் பிரதமர் அலுவலகம் தலை யீடு தொடர்பாக சிஐடியு பொதுச்செயலாள ரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தபன் சென் எம்.பிக்கு பிரதமர் அனுப்பிய கடி தத்தை தொடர்ந்து 16.5.2012 அன்று தபன் சென், பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதி னார். கடிதத்தில் அவர் கூறியிருப்ப தாவது:-
தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நிதர்சனமான, முக்கியமான விஷயத்தை கவனிப்பதற்கு தவறியுள்ளது துரதிர்ஷ்ட வசமானது. தனது முதல் கடிதத்தைத் தொடர்ந்து 31.3.2012 அன்று மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரிஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) அனுப்பிய கடிதத்தை பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு சட்ட ஆலோ சனை பெற அனுப்பப்பட்டுள்ளது.
எரிவாயு விலை தொடர்பாக அதிகார மளிக்கப்பட்ட அமைச்சர் குழு (இஜிஓஎப்) விடம், இந்த எரிவாயு விலை உயர்வு வேண்டுகோள் வருவதற்கு முன்பாக பெட்ரோலிய அமைச்சகத்திற்கு ஆர்ஐ எல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனைக் கருத் தில்கொண்டு தனது கேள்வியாக, ரிலை யன்ஸ் நிறுவனம் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக கேட்டபோது பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பதிலளிக்கப்படவில்லை. தற்போதைய தலையீடு மற்றும் நிகழ்வுகளின் தொடர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக தனியார் நிறுவனம் ஆதாயம் உரிமை பெற்றுவிடக்கூடாது.
தற்போதைய விலை நிர்ணய காலம் காலாவதி ஆவதற்கு முன்னர் தேசிய கரு வூலத்தின் மதிப்பில் மற்றும் லட்சக் கணக்கான மின்சாரம் மற்றும் உர வாடிக் கையாளர்கள் மதிப்பில் ஆதாயம் தேட நிறுவனம் முயன்றுள்ளது.
ஆர்ஐஎல் ஒப்பந்தகாரர் வேண்டு கோளை அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சகம் 2010ல் நிராகரித்தது. எரி வாயு விலை உயர்வு தொடர்பாக அந்நிறு வனத்தின் தற்போதைய வேண்டு கோளை பெட்ரோலிய அமைச்சகம் நிரா கரித்தது.
எரிவாயு விலையை விநியோகம் தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டு களுக்கு அனுமதித்தது. எனவே அமைச் சர்கள் குழு முடிவு செய்த விலையை ஆர்ஐஎல் நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு தரப்பட்ட இந்த உத் தரவுப்படி 5 ஆண்டு ஒப்பந்தத்தை அதா வது 2014ம் ஆண்டு வரை பெட்ரோலிய அமைச்சகம் கடைப்பிடிக்க வேண்டும். சட்ட ஆலோசனை மூலமாக இந்த விவ காரம் பிரதமர் அலுவலகம் மூலம் ஆய்வு செய்து மீறக்கூடாது. இந்த சூழ்நிலையில் சட்ட கருத்து ஆலோசனை என்பது விதி முறை மீறலாக உள்ளது.
தேசிய அனல் மின் கழகங்களின் கவாஸ்+காந்தார் (குஜராத்) மின் நிலையங் களுக்கு ஆர்ஐஎல் நிறுவனம் முதலில் 2.34 எம்பிடியு அளவு எரிவாயுவை 17 ஆண்டுகளுக்கு அளிக்க ஒப்புக் கொண்டது. பின்னர் அது தனது கருத்தை மாற்றிக்கொண்டது. எரிவாயு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடவில்லை. இதன் காரணமாக இந்த மின் நிலையங்கள் பணி இன்றுவரை முடங்கியுள்ளது. மின்துறை அமைச்ச கமோ, பிரதமர் அலுவலகமோ இவ்விஷ யத்தில் தலையிடவில்லை. சட்ட ஆலோ சனை பெறும் விஷயத்திலும் இந்த அலு வலகங்கள் தலையிடவில்லை.
அதனால் பொதுத்துறை நிறுவனம் கேஜி-டி6ல் இருந்து எரிவாயு பெற வேண்டி வந்தது. தேசிய அனல் மின் நிலையக் கழகம் மும்பை உயர்நீதிமன் றத்தை இவ்விவகாரம் தொடர்பாக அணு கியது. இந்த வழக்கு நீதிமன்ற விசா ரணையிலேயே உள்ளது.
தற்போதைய உடனடி விவகாரத்தில் ஆர்ஐஎல் நியாயம் இல்லாத வகையில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த போலியான உரிமையை காணும் மாற்று உரிமையை ஆர்ஐஎல் கண்டறிந்துள்ளது.
மேலும் இயற்கை எரிவாயு விலை அதிகரித்தால் பல லட்சம் மின் நுகர்வோர் களின் மின் கட்டணம் அதிகரிக்கும். இத னால் உரத்திற்கு அரசு கூடுதல் மானியம் தரவேண்டி இருக்கும். இந்த நிலையில் ஒப்பந்ததாரர், அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு 5 ஆண்டுகளுக்கு அதாவது 2014ம் ஆண்டுவரை 4.2 டாலர் என்ற விலையில் எம்பிடியு எரிவாயு வழங்க வேண்டும் என்ற முடிவை மறு பரி சீலனை செய்யக்கூறியுள்ளார். ஆர்ஐஎல் நிறுவனம் 2.3 டாலர் / எம் பிடியு அளவுக்கு தேசிய அனல் மின் நிலையங்களுக்கு 17 ஆண்டுகளுக்கு எரி வாயு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்திய உர நிறுவனங்கள், ஓமன் இந் தியா எண்ணெய் நிறுவனத்தில் இருந்து எரிவாயுவை 2006ம் ஆண்டு ஜனவரி 1ல் 0.77 டாலருக்கு பெற்று வருகின்றன. 6 ஆண்டுகளுக்குப் பின்னரே அதன் விலையில் 15 சதவீதம் தற்போது அதி கரிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சப்ளை காலம் ஓமன் எண் ணெய் நிறுவனம் மற்றும் உர நிறுவனங் களுக்கு இடையே ஜனவரி, 2006 முதல் 2020ம் ஆண்டுவரை 15 ஆண்டுகளுக்கு உள்ளது. இதற்கிடையே ஆர்ஐஎல் தனது விலை உயர்வை ஒப்பந்தம் பெற்ற 3 ஆண்டுகளில் உயர்த்தப்பார்க்கிறது.
எனவே உள்நாட்டு எரிவாயு விலையை சர்வதேச விலை அளவிற்கு உயர்த்தக் கூறுவது தவறான நோக்கத்துடன் வைக் கப்பட்ட ஆலோசனையாகும். அரசு பொது நிதி மற்றும் மின்சாரம்/உர வாடிக்கை யாளர்கள் மதிப்பில் ஒப்பந்ததாரர் பலன டைய முயற்சி பெறும் சூழலாக உள்ளது.
இன்றைய நிலையில் கேஜி-டி6 வய லில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட (80 எம் எஸ்சிஎம்டி) அளவு உற்பத்திக்குப் பதிலாக பாதிக்கும் குறைவான உற்பத் தியே (34எம்எம்எஸ்சிஎம்டி) நடந்துள் ளது. திட்டமிட்டு வேண்டுமென்றே உற் பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயுவை கேஜி-டி6 களத்தில் உற்பத்தி செய்வதற்காக உண் மையான மதிப்பீட்டை கட்டண ஆணை யம் மதிப்பீடு செய்ய வேண்டும். சிஏஜி எனப்படும் தலைமை கணக்கு தணிக்கை ஆணையத்திற்கு ஆர்ஐஎல் அனுப்பப்பட வேண்டும். 5 ஆண்டு ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன் (2014) ஆர்ஐஎல்-ன் சட்ட ஆலோசனை அனுமதிக்கப்பட்டு, விலை உயர்த்தப்படக்கூடாது. கட்டண ஆணை யம் சிஏஜி அறிக்கைக்கு பின்னர் கேஜி-டி6 எரிவாயு விலை ஆய்வு செய் யப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலி யுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here