3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
ஏ.இ.ஓ., - ஆசிரியர் "கைகலப்பு' சம்பவம்
கடலூர் : உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் மாலை மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி., தொடக்கப் பள்ளியில் ஏ.இ.ஓ., வீரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஏ.இ.ஓ., வீரபாண்டியன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் புள்ளி விவரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அ.குறவன்குப்பம் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தீனதயாளன் ஏ.இ.ஓ.,விடம் சங்கம் தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அதற்கு ஏ.இ.ஓ., தற்போது அவசர வேலை உள்ளதாக கூறி நாளை அலுவலகத்திற்கு வருமாறு கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகார்களின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.இ.ஓ., வீரபாண்டியனைத் தாக்கிய பட்டதாரி ஆசிரியர் தீனதயாளன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 26 பேர் தனியாகவும், கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100 தலைமை ஆசிரியர்கள் நேற்று கடலூரில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி சாந்தி, இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தினமலர் 18.4.2012
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி சாந்தி, இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தினமலர் 18.4.2012
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: இடதுசாரிகள் கோரிக்கை - சட்டசபையில் பேச்சு:
சென்னை, ஏப். 18: ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்: கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): எந்தெந்தப் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தந்துவிடுகிறேன். ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும்போது முழு கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி மீண்டும் ஒரு தேர்வை திணிப்பது கூடாது. மத்திய அரசின் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழக அரசு எதிர்த்ததை போலவே இந்த கல்வி உரிமைச் சட்டத்திலும் மீண்டும் ஒரு தேர்வு என்பதை தவிர்த்திட தகுதித் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுக்க வேண்டும். அமைச்சர் என்.ஆர். சிவபதி: உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் நியமனத்திற்கு கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது. குணசேகரன் (சிபிஐ): ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவதைத் தவிர்த்து தனியாகப் பயிற்சி தரலாம். பிறகு பதவி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதுதான் சரியாக இருக்கும். கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட்): நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால் மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கிடையாது. எனவே, அதை கணக்கில் எடுத்து கொண்டுதான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நமது மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நல்ல பயிற்சி தரப்படுகிறது. மேலும், 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு முறையே கிடையாது. அனைவரும் தேர்ச்சியடைந்தவர்கள் என்று அறிவிக்கப் படுகிறது. இத்தகையை சூழ்நிலையில் 40 வயதைக் கடந்த ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால், இந்த தகுதித் தேர்வு மூலம் அவர்களின் வேலை உரிமை பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய வேதனை குரலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். அமைச்சர் சி.வி. சண்முகம்: மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அந்த மாநிலங்களிலும் இந்த தகுதித் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வழிகாட்டியுள்ளது. அந்த வழிகாட்டுதலை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது. கே. பாலகிருஷ்ணன்: உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய தகுதியற்றவர்கள் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே சான்று அளித்துள்ளது. ஆகவே, ஆசிரியர் தேர்வாணையை உத்தரவை ரத்து செய்து உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும்.
முப்பருவக் கல்விமுறை
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களை சந்தித்து 2012-2013ம் கல்வியாண்டு முப்பருவமுறைக்கான பயிற்சிகளை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்கும் படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முப்பருவக் கல்விமுறை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவிருககிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது. பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர். தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும் பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும் கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.
முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது. வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம் பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும் அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்
அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும்
என்றும் உறுதியளித்துள்ளார்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க
பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும்
பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும்
டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும்
கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.
முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது. வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்
பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும்
அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்
அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும்
என்றும் உறுதியளித்துள்ளார்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும் பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும் கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.
முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது. வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம் பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும் அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்
அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும்
என்றும் உறுதியளித்துள்ளார்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
இராமம்பாளையம்,காரமடை ஒன்றியம்
மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.
பள்ளி பற்றிய தகவல்கள்:
1. அமைதியான கிராமச் சூழல்.
2. போதுமான கட்டட வசதி.
3. சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
4. கணினி பயிற்சி வகுப்புகள்.
5. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
6. பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
7. ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
8. விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
9. தலைமைத்துவப் பயிற்சி.
10. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
11. மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
12. மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
13. வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு(Dairy). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).
மாதிரி வகுப்பறை (Model Classroom)
1. மாணவார்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.
2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.
3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.
5. கணினி.
6. தொலைக்காட்சி.
7. DVDPlayer.
8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.
9. கணித உபகரணங்கள்.
10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளஅலமாரிகள்.
11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.
12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.
13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.
14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.
15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.
16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.
17. உயர் தர தள அமைப்பு.
18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.
19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.
20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி
இப்பள்ளியின் தலைமையாசிரியை ,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ செல்வங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் கிளை மனதார பாராட்டுகிறது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here